யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : யாதுமறியான் |
| இடம் | : சேலம் |
| பிறந்த தேதி | : 17-Mar-2017 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
| பார்த்தவர்கள் | : 2310 |
| புள்ளி | : 371 |
இமைகளின் சுமைகளை இறக்கிவை !
—
இமைகளின் சுமைகளை
இறக்கிவை போதும்
இதயத்தின் அறைகளில்
இன்பங்கள் மோதும் !
நிகழ்ந்தவை கணத்தினில்
நீங்குதலே இயற்கை
அகழ்ந்தெடுத்து தினந்தினமும்
அவதியுறல் மடமை !
கடந்தவற்றைத் திருப்புதலோ
கவைக்குதவா வேலை
நடந்தவற்றைப் புறந்தள்ளி
நடப்பவற்றைக் கவனி !
ஒவ்வொன்றாய்க் கணங்களெலாம்
உன்னைவிட்டே செல்லும்
கவனமாகக் கைப்பற்றிக்
களித்தாலே வெல்லும் !!
-யாதுமறியான்.
5 - கடவுளால் இயலாதது மனிதனால் இயலுமா ?
--
கடவுளால் இயலாத செயல் ஏதேனும் இருக்க முடியுமா ? கடவுள் நம்பிக்கை கொண்ட எந்த ஒரு மதமும் கடவுளால் இயலாத காரியம் எதுவும் இல்லை என்றே திட்டவட்டமாகக் கூறுகின்றன .
கிருத்துவமும் இதற்கு விதிவிலக்கு அல்ல . பைபிளின் , தொடக்க நூலிலேயே கடவுள் ஒன்றுமில்லாமைலிருந்து, இந்த உலகத்தையும், வானையும் வானில் உள்ள அனைத்து விண்மீன்களையும், கோள்களையும் , பூமியிலே வாழக்கூடிய அனைத்து உயிரினங்களையும் , மனிதர்களையும் அவரே படைத்தார் என்கிறது . இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்திற்கும் அவரே மூலாதாரம் என்றும் பைபிள் கருதுகின்றது .
2 ) இயேசுவின் பிறப்பிற்கு முன்பும்
அழகியத் தமிழ் !
—
அழகியத் தமிழ்மொழி
அறிஞர்கள் புகழ்மொழி
பழகிடக் கைவரும்
பைந்தமிழ்ச் செம்மொழி !
இயலிசை நாடகம்
இன்றைய அறிவியல்
உயரியக் கணிப்போறி
உட்கொண்ட வளர்மொழி !
பழையன போற்றியும்
புதியன தேற்றியும்
பிழைத்திடும் இதுவொரு
பிழையிலா உயிர்மொழி !
தெலுங்கு கன்னடம்
தெவிட்டா மலையாளம்
துளுவும் பிறவும்
கொடுத்தவள் வாழியே !
-யாதுமறியான்.
அரசுகள் வாழ்க !
—
குத்தகைக்கு பேராசிரியர் !
குடக்கூலிக்கு சிற்றாசிரியர்
!ஒப்பந்தத்தில் தொழிலாளர் !
ஓய்வூதியமிழந்த பணியாளர் !
ஒப்பேற்றும் பேரரசு!
சிக்கிக் கொண்ட
பெருங்குடிகள்! -
யாதுமறியான்.
.
காப்பேன் அறம்பாடி..!
01 / 07 / 2025
பாட்டன் முப்பாட்டன் பேசிய தமிழே
தொல்காப்பியன் இலக்கணம் வகுத்த தமிழே
வள்ளுவன் கம்பன் போற்றிய இயற்றமிழே
பாணர்கள் பாடி வளர்த்த உயர் தமிழே
தமிழே..தமிழே.. நீ வாழி
தமிழே ..தமிழே..உன்புகழ் பாடி
தமிழே..தமிழே..என் உயிர் நாடி
தமிழே.. தமிழே..காப்பேன் அறம்பாடி
ஏட்டில் எழுதிய கடுந் தமிழை
எளிதாய் எளியோர்க்கும் புரிந்திடவே
இலக்கண விலங்கை உடைத்தே நாளும்
இயல்பாய் எழுத்தில் பதித்தானே
முறுக்கு மீசை முண்டாசும்
சிவந்து ஒளிர்ந்த கண்களுமாய்
சுதந்திர தீயை வளர்த்தானே
சிவந்த ஆங்கில அதிகாரத்தை
தமிழால் அடக்கி ஓடவிட்டானே
பாரதம் காத்த பாரதி
பாடி
வரைந்தேனடா...!
25 / 06 / 2025
ஆடி ரசித்திட இவ்வுலகம் பெரியதடா
அடங்கி ஒடுங்கிட ஆறடி போதுமடா
ஆணவக் கொம்பு முளைத்தடா - என்
ஆறறிவும் மயங்கி போனதடா
சாதி சமயங்கள் வெறும் வேஷமடா - நம்
வாழ்வை நாசமாக்கும் பூதமடா
இளமை வாழ்வில் இன்பமடா - அதில்
காதல் வந்திடின் துன்பமடா
முதுமையில் வரும் காதலடா - நம்
வாழ்வினைத் தாங்கிடும் வேரடா
இறுதிவரை காதலிக்க வேண்டுமடா - அது
உறுதியாக நிலைத்திட வேண்டுமடா
நீர்த்துளியாய் வாழ்க்கை மின்னுமடா - அது
ஒருநொடியில் வெடித்து சிதறுமடா
இருக்கும் வரை சிரித்து மகிழ்ந்திடடா
அடுத்த பிறவி நம்கையில் இல்லையடா
பிறப்பொன்று இருந்தால் இறப்பொன்று இருக்கும்
புரி
மறுபடியும் கேள்விதான்.
25 / 06 / 2025
கேள்விகள்?
ஒன்றல்ல.. இரண்டல்ல..
பல கோடி கேள்விகள்
மலைபோல் என் முன்னே..!
விடை தேடி
அலைந்தேன்..அலைகிறேன்..
அலையப் போகிறேன்.
மரணம் வரை..
சில கேள்விகள் தப்பாயிருக்கின்றன
சில கேள்விகள் அபத்தமாயிருக்கின்றன
பல கேள்விகள் அர்த்தமற்றவைகளாயிருக்கின்றன
ஒவ்வொரு கேள்விகளுக்கும்
தனித்தனியே விடைதேடி
அலைகிறேன் மனம் திரிந்து.
விடை கிடைக்குமா?
இந்த கேள்வியைப் பிடித்து கொண்டு
நாளும் தொங்கிக்கொண்டு இருக்கிறேன்.
கேள்... உனக்கு கிடைக்கும்
தட்டு... கதவுகள் திறக்கப்படும்.
கிடைக்குமா?
திறக்குமா?
மறுபடியும் கேள்விதான்.
முனகும் வள்ளுவர் !
—
நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு
நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !
-யாதுமறியான்.