அழகியத் தமிழே

அழகியத் தமிழ் !


அழகியத் தமிழ்மொழி
அறிஞர்கள் புகழ்மொழி
பழகிடக் கைவரும்
பைந்தமிழ்ச் செம்மொழி !

இயலிசை நாடகம்
இன்றைய அறிவியல்
உயரியக் கணிப்போறி
உட்கொண்ட வளர்மொழி !

பழையன போற்றியும்
புதியன தேற்றியும்
பிழைத்திடும் இதுவொரு
பிழையிலா உயிர்மொழி !

தெலுங்கு கன்னடம்
தெவிட்டா மலையாளம்
துளுவும் பிறவும்
கொடுத்தவள் வாழியே !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (18-Jul-25, 12:09 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 30

மேலே