மறுபடியும் கேள்விதான்

மறுபடியும் கேள்விதான்.
25 / 06 / 2025

கேள்விகள்?
ஒன்றல்ல.. இரண்டல்ல..
பல கோடி கேள்விகள்
மலைபோல் என் முன்னே..!
விடை தேடி
அலைந்தேன்..அலைகிறேன்..
அலையப் போகிறேன்.
மரணம் வரை..
சில கேள்விகள் தப்பாயிருக்கின்றன
சில கேள்விகள் அபத்தமாயிருக்கின்றன
பல கேள்விகள் அர்த்தமற்றவைகளாயிருக்கின்றன
ஒவ்வொரு கேள்விகளுக்கும்
தனித்தனியே விடைதேடி
அலைகிறேன் மனம் திரிந்து.
விடை கிடைக்குமா?
இந்த கேள்வியைப் பிடித்து கொண்டு
நாளும் தொங்கிக்கொண்டு இருக்கிறேன்.
கேள்... உனக்கு கிடைக்கும்
தட்டு... கதவுகள் திறக்கப்படும்.
கிடைக்குமா?
திறக்குமா?
மறுபடியும் கேள்விதான்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (25-Jun-25, 7:25 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 6

மேலே