ஒரு மலரின் விண்ணப்பம்

செடியில் மலர்ந்து..
மனிதரால் கவர்ந்து..
வாழை நாறுடன் இணைந்து..
மாலையானேன் விரைந்து!
காத்திருந்தேன் மாலையாக..
மாலையில் விலையாக..
வாடாமல் உனை சேர்..
வரமளிப்பாய் ஆண்டவனே!..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (18-Nov-25, 9:57 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 45

மேலே