கோடை மழை

1. கோடை மழையே..
புவியியல் மாற்றத்தால்
நீ பூமியை சேர்..
உன்னுள் நனைந்த
என்னிடம் வேதியியல் மாற்றம் ஏன்?
சலனங்கள் கூட
சந்தோஷமாகி விடுத்தேன்?

2. கோடை மழையே..
அற்ப ஆயுளுடன்
மண்ணும் நீ மறைந்தாலும்..
உன்னுள் நனையும்
என் ஆசை மறைவதில்லை
என்றும் !
3. கோடை மழையே..
சித்திரையின் சின்ன மழையானாலும்..
ஐப்பசியின் அடைமழையை
விட சிறந்தவள் நீ!
4.காலம் தவறி பிறந்தாலும்..
அற்ப ஆயுளில் மறைந்தாலும்..
மழைக்கெல்லாம் சிகரம்
கோடை மழையே!
5. கோடை மழையே..
நீ பூமியை சேரும்
ஒவ்வொரு நொடியும்
அழகிய தருமே..
6. மோகம் கொண்ட மேகம்..
துளித்துளியாய் முத்தமிடும்..
மண்ணால் தன் மணாளனை..
சித்திரையில் கோடை மழையாக!
7.கோடை மழையே..
உன்னுள் நான் நனைய வேண்டும்
என் களவிச் சென்றாயோ....
உன்னுடன்..
என் நாணயத்தை?!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (14-Nov-25, 10:44 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : kodai mazhai
பார்வை : 4

மேலே