பபூதா - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : பபூதா |
| இடம் | : அச்சரப்பாக்கம் |
| பிறந்த தேதி | : 13-Apr-1957 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 11-Dec-2017 |
| பார்த்தவர்கள் | : 157 |
| புள்ளி | : 142 |
ஓய்வுபெற்றதலைமைஆசிரியர்&தமிழாசிரியர்rnஇசை,கவிதை பாடல்,சிறுகதை,ஓவியம்,தமிழ்எழுத்துஆராய்ச்சி,தமிழ்இலக்கணஆராய்ச்சிrnபுதுஇலக்கணம்எழுதுதல், கல்விதொண்டு,மருத்துவதொண்டுஇலவசமாக30ஆண்டுகளுக்குமேலாகrnசெய்துவருதல்
மலடி, கொட்டி
என்று
பிள்ளை பெறாத
பெண்ணை பார்த்து
உலகம் சொன்னது
அம்மா என்று
யாசகன் சொன்னான்
அவளுக்கு
அங்கம் நிறைந்தது
யாசகனுக்கு
வயிறு நிறைந்தது
ப பூ தா 1.12..25 காலை 8:45
அப்பன் ஈசனோ
அல்லாஹ் இயேசுவோ
அவரவர் பிறந்த தினத்தன்றே
ஆறடி நிலத்தை
வாய் மூடி கண்முடி
போகும்போது
எழுதி வைத்த உயில்
பாகம் கேட்டு
வராத இடம்
உரிமை கேட்டு
வராத இடம்
பங்காளிகள் வந்து
சண்டை போடாத இடம்
சமபங்கு கேட்டு
பஞ்சாயத்துக்கு
போகாமலும்
கொட்டுக்கு போகாமலும்
இருக்கும் இடம்
சுடுகாடு இடுகாடு
வந்து பார்க்காத
வனப்பகுதி
திருமணநாட்கள்
பிறந்தநாட்கள்
உறவுகள்
மறைந்தநாட்களில்
தீவனங்களை
கொட்டிவிட்டுப்போகும்
மாட்டுக்கொட்டகை
கருப்பை குடிலை
கருவில் உதித்தவைகள்
அவ்வப்போது
காணவரும்
கண்காட்சி நிலையம்
உத்திரவுரலை
உச்சந்தலைமுதல்
தூரத்திலிருந்தே
முகர்ந்துப்பார்க்கும்
முதியோர்கள்
கூதி ரெண்டு பாதி
குறுக்கே போன ஜாதி
இப்படி எழுதினதற்காக என்னை திட்டாதீர்கள் நான்பணிசெய்த என்கிராமத்து கிழவி ஆண்டாள் அம்மையார்(இடையர்குலம் ஜமீன்தார்ஆளுகைக்குஉட்பட்டகாலத்தில் பிறந்தவர்கள் இன்றும்உயிருடன் உள்ளார் ஜாதியைகுறித்துபேசும்போது இந்த வார்த்தைகளை வேட்கமின்றி தைரியமாககூறினார்கள் இது எவ்வளவு எதார்தமானஉண்மை என்பதை நானும்வெட்கப்படாமல்கூறகாரணம்
ஜாதியைபற்றிபேசுபவர்கள் எல்லாரும்செய்கிறகேவலமானசெய்கைஎன்பதைகூறுவதற்காகவே பொருத்தருள்க
நீரோடை புதைக்குழி
மண்குதிரையை நம்பி
ஆற்றில்கால் வைக்காதே
பெரியவர்கள் சொன்னார்கள்
இரண்டு
கரையிருக்கு
குதித்து
கரையெறிவிடலாம்
என்று
குதித்தவரெல்லாம்
கரையைதேடியே
காணாமல் போனார்கள்
நீந்ததெரிந்தவர்க்கும்
கரைதெரியவில்லை
பூமி உடம்பில் புகுந்த
புற்றுநோய் நெகிழி
மண்மாதாவின்
மார்பைஅறுக்கும்
கத்தியில்லாத கத்தி நெகிழி
நாளைய
மனிதஇனத்தையும்
நாளைய மண்வளத்தையும்
இன்று கொன்றுபுதைக்கும்
கொடூரமனிதரின்
கொலைகருவி நெகிழி
இயற்கையின்
குரல்வளையை
இறுக்கிபிடிக்கும்
ஆபத்தான ஆயுதம் நெகிழி
சத்தமில்லாதஅணுகுண்டு அல்ல
அங்கங்கே புதைக்கப்படும் கன்னிவெடி
30.7.2018 மாலை 9.02மணி
"காதல் தோல்வியின்
நினைவு தினம்"
காதலித்தவர்க்கு
பொட்டுள்ள
உன்முகம்
தேசியக்கொடி
பொட்டில்லா உன்முகம்
கட்சிக்கொடி
பபூதா
17.02.2020
கைகளால்
கசக்கி எறியப்பட்ட காகிதம்
ஏருகளால்
கிழிக்கப்பட்ட நிலம்
நல்ல நிலமோ
தரிசு நிலமோ சிலநேரத்தில்
விலை போகனும்
பலநேரத்தில்
விளைவித்து தரணும்
பருவக்காலம் போல்
வளமையும்உண்டு
வறுமையும் உண்டு
!சில நல்ல மனிதரால்
அலங்கார பொம்மைகளாய்
அவதியும்படும்
குழந்தைகளின்மனம் போல்
குதுகலமும்படும்
சில மிருகங்கள்
மிதித்துவிட்டும் போகும்
காதலர்களின் கையில்
தேசியக் கொடி
நல்ல கணவர்களின் நெஞ்சில்
தேசியநாடு
அண்ணன்கள்எல்லாம்
எல்லைபாதுகாப்பு வீரர்கள்
பெண்கள் பூமியின் கண்களள்
பெண்கள் கற்பக. விருட்சங்கள்
அதனாலேதான் நடப்படுகிறார்கள்
பெண்கள் முட்டையிடும்
பொன்வாத்து
அதனால்தான்
காதலித்தவரெல்லாம்
கட்டிலுக்கு வந்தவரருமல்ல
கல்யாணம் செய்தவருமல்ல
கட்டிலுக்கு
வந்தவரெல்லாம்
காதலித்தவருமல்ல
கல்யாணம் செய்தவருமல்ல
(விதிவிலக்கு தம்பதிகள்)
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கட்டிலும் காதலும்
மனதில் மறவாமல் இருக்கிறது
மரணத்தோடு மட்கிபோகிறது