பெண்

கைகளால்
கசக்கி எறியப்பட்ட காகிதம்

ஏருகளால்
கிழிக்கப்பட்ட நிலம்

நல்ல நிலமோ
தரிசு நிலமோ சிலநேரத்தில்
விலை போகனும்
பலநேரத்தில்
விளைவித்து தரணும்

பருவக்காலம் போல்
வளமையும்உண்டு
வறுமையும் உண்டு

!சில நல்ல மனிதரால்
அலங்கார பொம்மைகளாய்
அவதியும்படும்
குழந்தைகளின்மனம் போல்
குதுகலமும்படும்
சில மிருகங்கள்
மிதித்துவிட்டும் போகும்

காதலர்களின் கையில்
தேசியக் கொடி

நல்ல கணவர்களின் நெஞ்சில்
தேசியநாடு

அண்ணன்கள்எல்லாம்
எல்லைபாதுகாப்பு வீரர்கள்

பெண்கள் பூமியின் கண்களள்
பெண்கள் கற்பக. விருட்சங்கள்
அதனாலேதான் நடப்படுகிறார்கள்
பெண்கள் முட்டையிடும்
பொன்வாத்து
அதனால்தான் வெட்டப்படுகிறார்கள்

எழுதியவர் : (14-Mar-19, 1:55 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : pen
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே