முத்தான முத்துக்கள்
நல்முத்துக்கு ஆழ்கடலில் மூழ்கி
முத்துகுளிக்கவேண்டும், இங்கு
காத்திருந்தேன் நான் கன்னியவள்
வருகைக்காக, வந்தாளே என்னவள்
எந்தன் காதலி, கடற்கரை மணலை
தழுவவரும் அலைபோல , வந்தாள்
நான் நினைக்கும் முன்னே, என்னை
தழுவிக்கொண்டாள், என் கன்னத்திற்கு
விருந்தாய் முத்தம் தந்தாள்
முத்து முத்தாக முத்துக் குளிக்காமல்
நான் பெற்ற முத்தல்லவோ இந்த
முத்தான முத்துக்கள்