தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் - முத்தொள்ளாயிரம் 38
நேரிசை வெண்பா
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்! 38
- முத்தொள்ளாயிரம்
சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர்.
உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலனானால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே; அதைத் தடுத்திருக்க வேண்டாமா?

