நீயும்நானும்

சூரியன் நட்சத்திரம் கண்டதுண்டோ ?
இல்லை நட்சத்திரம் சூரியனை கண்டதுண்டோ ?

பகல் இரவை பார்த்ததுண்டோ ?
இல்லை இரவு பகலை சந்தித்ததுண்டோ ?

ஒற்றைநாணையத்தில்
இருபக்கமும் பேசியதுண்டோ ?

வெயில் மழையை அழைத்ததுண்டோ ?
இல்லை மழை வெயிலுடன் விளையாடியதுண்டோ ?

இயற்கையின் விதி போலவே நீயும் நானுமோ ?
காணாமல் இங்கு கனவில்
கரைந்து கொண்டிருக்கிறோம் .....

ஒரு பக்கம் நீயும் ,
மறுபக்கம் நானும் ....

கடிகாரம் வேகமாய் சுத்தட்டும் ...
நொடிகள் ஓடி நிமிடம் தேடட்டும் ...
தேடி பிடித்த நிமிடத்துடன் நொடிகளும் சேர்ந்து
நேரத்தை அழைக்கட்டும் .....
நேரம் பயணம் செய்து நாட்களை சேரட்டும் ....
நாட்கள் நம்மை சந்திக்க வைக்க முயற்சிக்கட்டும் ....

உன் நினைவிலே நானடா ....

எழுதியவர் : Deepikasukkiriappan (14-Mar-19, 3:35 pm)
பார்வை : 889

மேலே