ஒழிக ஒழிக
அவனை அறியாமல் அடித்து நொறுக்கப்பட்ட அவன் இதயம்
அறிவாளுக்கு முன்னே அறுபட்டு போயிருக்கும்......
அந்த நொடி வரை உடன்பழகிய ஒருவனை,
உறவாகப்போவதாக எண்ணியவனை, என்ன எண்ணத்தால் வின்னம் செய்தானோ எனத் தெரியாலேயே அவன்...
எண்ணிப்பார்க்க வாய்ப்பே இல்லாது செய்து போனவன் சுர்ஜித் மட்டும் அல்ல,
செத்து போனவன் கவின் மட்டும் அல்ல...
அய்யா ஆயிரமாயிரம் கவின்கள் அறிவாள் இல்லாமலே,
வெட்டு படாமலே,
இதே காரணத்துக்காக இல்லாமல் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள்... காரணம் சாதியோ சான்றிதழோ ஓழியட்டும் இவனோடாவது...