மீனாட்சி மோகன்குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மீனாட்சி மோகன்குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 23-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 758 |
புள்ளி | : 57 |
தமிழச்சி நான்rnஉங்கள் தோழிrnதமிழின் மகள்rnதாயின் காதலிrnதந்தையின் தாய் rnதமயன்களின் தமக்கை rnதமக்கைகளின் ஆசிரியைrnஉற்றார்க்கு உரியவள்rnஅற்றார்க்கு உறவானவள்rnநான் மீனாட்சி...
அடிக்கடி அழாதே
அதிகம் கோபப்படாதே
ஆட்டம் போடாதே
எதிர்த்து பேசாதே
சத்தமாய் சிரிக்காதே
வாய் ஓயாமல் பேசாதே
வெளியே போகாதே
வெளியே நிற்காதே
பெரியவர் முன் அமராதே
வீட்டிற்கு வந்தவர் முன் நிற்காதே
வீட்டிற்கு வருபவரிடம் சிரித்து பேசாதே
இங்கே வராதே
அங்கே போகாதே
அதை செய்யாதே
இதை செய்யாதே
அடக்கமாய் இரு
அடங்கி இரு
ஒழுங்காய் இரு
ஓரமாய் இரு
உன் இடமறிந்து இரு - என்றெல்லாம் இன்றும் சொல்கிறார்கள்.
வீட்டில் கணவனை இழந்த என் அக்காளையும்
அவளுடன் பிறந்த என்னையும்...
நாங்களும் இருக்கிறோம்....
எதற்கென்று தெரியாமல்!
காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்?
அதையாவது தெரிந்து கொள்கிறோம்!!!
நண்பா...
அழவும் விழவும் தெரிந்த உனக்கு
ஏனோ எழ மட்டும் யாராவது உதவ வேண்டி உள்ளது?
கனவும் நனவும் நிகழ்வது போல
எல்லாம் தானாய் நடக்கும்
உனக்கு நீயே தூணாய் நின்றால்...
நம்பிகை எனும் சொல்லை
ஏனோ எப்போதும் யார் மீதோ சுமத்துகிறாய்?
தன்னம்பிகை எனும் சொல்லை நீ கேள்விப்பட்டதில்லையோ?
உன் கையில் உள்ள உலகத்தில்
ஏனோ யாரையோ சுமக்க காத்திருக்கிறாய்?
நீ என்ன அவ்வளவு பெரிய சுமை தாங்கியா?
சுமக்க நீ தயார் எனில் உன் கனவை மட்டும் சுமந்து நில்
முடிந்தால் முயற்சியை உடன் மூட்டைக்கட்டிக்கொள் !
மொத்த உலகமும் உனதாகும்!!!
அடியே...
விழித்திருந்தேன் விடிய விடிய
படுத்துக்கிடந்தேன் உன் அருகிலேயே
வலியிலும் உனை ரசித்து சிரித்த நான்
சிறிதளவும் உன்னை விலகவில்லை
பால் குடிக்க பழகாத நான் மணிக்கு ஒருமுறை
பால் கொடுக்க மறந்ததில்லை
கொஞ்ச நேரம் என் கண் அசந்தாலும் உன்னை அசந்து கொஞ்ச மறந்ததில்லை
மகளே...
மடி நிறைந்த நீ தான் என் மனது முழுக்க நிறைந்திருந்தாய்
அணைத்து அணைத்து உறங்க வைத்து
படுக்கை விட்டு நான் இறங்க
உறங்கி விழித்த நீ
எழுந்து அழைத்ததென்னவோ
ஆயிரம் முறை "அப்பா" என்று தான்!
என்னைப்போலவே!!
ஏதேதோ பெயர் சொல்லி அழைத்தேன் அவனை...
அத்தனைப் பெயரிலும் அத்தனைக் காதலைக் கொட்டி தீர்ப்பேன்...
ஆனால்
பெயர் மட்டும் கடிந்து கொள்வது போலத்தான் வைப்பேன்...
அத்தனைப் பேரும் ஆயிரம் முறை என்னைக் கடிந்திருப்பர்...
விட்டால் கடித்து கூட இருப்பர்...
ஏனோ யாருக்கும் புரியாத அந்த காதல் அவன் காதில் விழுந்த வார்த்தைகளால் அவனுக்கு மட்டும் புரிந்தது...
"எருமை! திரும்பி பார்க்கிறானா பார்" என்று நான் மறைந்து நின்று சொன்ன போது
அவனை மறந்து என்னை பார்த்து விட்டான்
பிறகென்ன
கெட்டிமேளம் தான்!
வீட்டு தோட்டத்தில் முளைக்கும் விதைக்கும்,
நேற்றுப் பிறந்த என் தம்பிக்கும்,
தோழியின் தோல் நோய்க்கும்,
உற்ற நண்பன் பகலவன்...
கொத்திக் கொல்லும் கொசுவுக்கு எதிரி.
பகலில் இல்லாத விளக்கிற்கு இவன் தான் திரி...
பச்சிளங்குழந்தையின் மஞ்சள் காமாலைக்கு மரண சங்கு இவன்.
நோயெதிர்ப்பு சக்தி தர இவனுக்கு பங்கு எவன்?
மூளை முடக்கத்தையே முடக்கிடுவான்; கால்சியத்தை கிரகித்திடுவான்.
கண்ணுக்கு ஆற்றல் தருவான்
மின்னுக்கு சக்தி தருவான்- இவன்
மண்ணுக்கு வளம் தருவான்
தண்ணீருக்கு களம் தருவான்
இவனில்லா அவனியிலே-வாழ
எவனாலும் இயலாது
வெயில் என்றால் வேதனையா?
நிழலில் மட்டுமே நின்று பார்...
வெயிலின் அருமை நிழலில்
மாந்தர்...
கடவுளை,
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள்,
கடவுளுக்கு கண்ணில்லை என்பார்கள்,
ஆனால்...
உண்மையில்,
கடவுளே இல்லை எனக் காட்டியது நம் ஊமைச் சமூகம்-
ஆசிஃபா வாயிலாக...
பிரித்து எழுதுக பலகை
ஐயா மற்றும் அய்யா
ஔவையார் மற்றும் அவ்வையார்
என்ற வார்த்தைகளின் பயன்பட்டு வேறுபாடுகள் என்ன?
ஒவ்வொரு தமிழனின்
இரு கண்களால் உலாவி
முத்தமிழின் இனிமையை உணர
நாற்றிசையும் எக்களிக்க
ஐம்பூதமும் அடங்கிப் போகும்
அறுசுவை கொண்ட நம் தமிழிடம்
ஏழறிவால் உண்டான
எண்திசையும்
ஒன்றாகி
அம்மாவில் தொடங்கி ஔவியம் வரை
அச்சம் தவிர்க்க
ஆதாயம் நம் தமிழ்
இமயம் முதல் குமரி வரை
ஈதல் கற்பிக்கும்
வள்ளல் நம் தமிழ்
உன்னிடம் ஆரம்பித்து என்னிடம் கூட
உருகிக் தான் பேசும்
உரிமையுடன்
ஒற்றுமையில் வேற்றுமை என்றாலும்
ஒன்றுபட்டு நிற்கச் செய்யும்
ஓங்குதனிச் செம்மொழி நம் மொழி
என
ஏகபோகமாய் புகழத் தான் ஆசை
இரவை ரசிக்க இறகைப் போல் பறந்தேன் மாடிக்கு
இரவின் மகன் மடியில் உறங்க
நிலவவன் நிழலில் நின்று கொஞ்சத்தொடங்கினேன்
வெண்மகனே....
உன்னழகை ஊர் ரசிக்க
உனக்கே உரியவளாய் நான் உன்னை ரசித்தேன்.
ரசனையே இல்லாதவள் கூட, ரசிக்கத்தான் தொடங்கியுள்ளாள் இராக்(இரவு)காரன் உன்னை.
நிலவெனப் பெயர் கொண்டு, நில்லாமல் ஓடுபவனே.....
நிஜமாகத்தான் சொல்கிறேன்-நில்லென்று செல்லமாய்........
ஆடவனே.....
வெண்தேகத்தால் வெளிச்சம் தரும் உன்னால்
பெண் தாகம் தணியும்
தண்மையில் தாராளமான உன் ஆண்மைக்கு உலகம் பணியும்.
வீரனே......
உன்னைக் கண்டு ஓடி
வெளியேறு வெளியேறு 'பீட்டா அமைப்பே' வெளியேறு !
வெளியேறு வெளியேறு இந்தியாவைவிட்டு வெளியேறு !!
கிடா கிடாவெட்டி சாப்பிடுவார்கள் இவர்கள்
மசாலாவுடன் கோழிக்கறியினை தள்ளுவார்கள் உள்ளே
பசுவின் கறியினையும் உண்ணுவார்கள் சேர்ந்தங்கே
மிருகவதை தடுக்கும் 'பீட்டா' இவர்கள்பெயர் !
களம் பலக்கண்டது எங்களது தமிழ்நாடு
காளையினையடக்கி வீரம் (செ)சொறிந்த தமிழ்நாடு
கோழையர்கள் என்று நினைத்தார்களா தமிழ்மக்களை
வீழவில்லை யென்றும் தன்மான தமிழர்கள் !
வெள்ளையருக்கு எதிராக விடு
ஏனடி
எனக்குப் பிடித்த
கிளிப்பச்சை நிறத்தோடு,
பிடிக்காத சிவப்பு சேர்த்து சேலை உடுத்தினாய்.....?
உருத்தும் என் கண்கள்
உன் ஆடையைத் திருத்தும் நோக்கில் பின் தொடர்ந்து,
இப்போது வரைத் திரிகிறது
உன் பின்னால்.....
குறுகுறுவெனப் பார்த்து
உன் பின்னலின் நீளத்தில்
என் உள்ளத்தைப் பின்னிக்கொண்டு
உன் தோழியைத் தொட்டு நீ தள்ளும்போது
விழுகிறது என் மனம்
உன் முக பாவத்தில்......
வரிசைப் பற்கள்,
வகிடெடுத்த தலை,
வசப்படுத்தும் கண்கள்
என வலைவிரிக்கத் தான் இப்படி வந்தாயோ...!
தலைகுனிந்து நீ நடக்க
நானும் குனிந்துப் பார்த்தேன்...
என் விருப்பச் சிவப்புப் புடவையில்
நீ,என்னைப் பார்த்து சிவந்ததை..
இவரை பின்தொடர்பவர்கள் (22)

சேகர்
Pollachi / Denmark
