புதுவைக் குமார் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  புதுவைக் குமார்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  22-Jun-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  2914
புள்ளி:  1012

என்னைப் பற்றி...

விஜய் டிவி ல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
வாங்குதே தற்போதைய லட்சியம்

கல்வி நேர்மை முயற்சி தூயமனம் புறம்பேசாமை
பிறருக்கு உதவுவது இவை மனிதனுக்கு அவசியம்
என்று நினைப்பவன்
தொடர்புக்கு - 9942994112என் படைப்புகள்
புதுவைக் குமார் செய்திகள்
புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2019 2:38 pm

கற்க கசடற
இதனை எழுதினார்
வள்ளுவர் குறளாக
நாம் நல்லவர்களாய்
வாழவேண்டும்
இதன் பொருளாக

தான் எழுதிய
குறள்களில்
இக்குறளை மட்டும்
உரக்கச் சொன்னது
வள்ளுவரின் குரல்

தோல்வி எனும்
தோல் வியாதிக்கு
மருந்து கல்வி

இதுவரை
பூத்தப் பூக்களில்
மிக வாசமான பூ
வெற்றியின்
வசமான பூ
படிப்பு

புத்தகமே
மனிதனுக்குப்
புத்தான அகத்தைக்
கொடுக்கிறது

நம்மை
பட்டங்கள் மூலம்
வானில் உயர்த்துவது
வெண்நூல்கள் அல்ல
நன்னூல்கள்

அதி காரம்
இல்லாத வள்ளுவரின்
அதிகாரம் படித்தே
அதிகாரம் உள்ள
பதவியில் படித்தவர்கள்

சாதாரண மாணவனை
தரமானவன் ஆக்குவது
கல்வியே

குடிசையில்
இருப்பவனை
குடியரசுத் த

மேலும்

புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2019 4:00 pm

தாயிடம் பெற்ற
உடலை
ஆரோக்கியம்
இல்லாமையால்
நோயிடம் தாரை
வார்க்கிறோம்

உடல்
பயிற்சி இல்லாததால்
நம் வாழ்க்கையில்
விழுகிறது வழுக்கை
நோய் நம் மீது
தொடுக்கின்றது வழக்கை
உடல் உறுதிக்கு
கொடுக்கின்றது இழுக்கை

ஆகவே
ஆரோக்கியம் காக்க
போக்கிடுவோம்
நம் மீதுள்ள அழுக்கை
இல்லையெனில்
கண்களைத் தாக்கிவிடும்
அழுகை

நாம்
கண்களுக்கு
வைக்கவேண்டிய மை
தூய்மை

நாம்
சுத்தம் காத்தால்
ரத்தத்தில்
ஏன் வெள்ளை
அணுக்களுக்கும்
சிவப்பு அணுக்களுக்கும்
நடக்கப்போகின்றது
யுத்தம்

நாம்
தாரத்தை
பேணிக்காக்கிறோமோ
இல்லையோ
சுகாதரத்தைக்
காத்திட வேண்டும்

சுகாதாரம்
நம் உடலின்
ஆதாரம்
அதற

மேலும்

புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 5:21 pm

கவிஞர்கள் சங்கமம்

காமராஜர்

செல்வாக்கு அதிகம்
கொண்டவர்
அதனால் வாக்கு
அதிகம் வென்று
சட்டமன்றம் சென்றவர்

காமராசன்
காமம் துளியும்
இல்லை
ஆனால்
தமிழ்நாட்டின்
ராசனாய் இருந்தவர்

பெண்ணை மணக்காது
நாட்டிற்காக
இம் மண்ணை மணந்தவர்

இவர்
விருதுநகர்
பெற்ற விருது

பல்லிகள் மட்டும்
ஓடிக்கொண்டிருந்த
பள்ளிகளில்
பிள்ளைகளை
ஓடவைத்தவர்

இவர்
பேனாவில்
ஊற்றிய மை நேர்மை

இவர்
ஏழைப் பிள்ளைகளுக்கு
புதிய கனவை மட்டும்
அளிக்கவில்லை
மதிய உணவையும்
அளித்தவர்

இந்த
நாடாண்ட
நல்லவரைக்கூட
சிலர் நாடாராகவே பார்த்தனர்

இவர்
ஆ ச்சீ
என்று ஆட்சி நடத்தாமல்
சிறப்பான
ஆட்சி நடத்திய

மேலும்

புதுவைக் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2019 11:43 am

நண்பா லபோந்த்
தலைக்கணம்
இல்லாத உனக்கு

அன்பா
இலக்கணம் இல்லாது
எழுதுகிறேன்
இந்த வெண்பா

நீ
விற்பனை செய்வது
ஆயில்
உனக்குக் கொடுக்கட்டும்
இறைவன்
நீண்ட ஆயுள்

கற்க கசடற
இது குறள்
நீ அதன் பொருள்

நீ
நெய்வேலியில்
பிறந்ததாலோ என்னவோ
உன் மனமும்
நெய்யாய் மணக்கிறது

உனக்கு
பிடித்த பூ நட்பூ
உன்னிடம்
பழகியவர்கள்
உன்னைவிட்டு செய்வதில்லை
வெளி நடப்பு
அதுவே உன் சிறப்பு
இன்றோ உன் பிறப்பு
சாயங்காலம் விருந்தாக
கோப்பைகளின் திறப்பு

உன்னால்
கல்லூரியில்
கள் ஊறியது

பார்கவ்
பார் கவி
ஆனான்

நீ புத்தகத்தைக்
கையில் வைத்திருந்தாய்
புத்தான அகத்தை
உன் மெய்யில் வைத்திருந்தா

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2019 8:05 pm

கவிஞர்கள் சங்கமம்

கனவில் வந்த
காந்தமலர்

நீ மழை
நான் மயில்
நீ வரும்
நேரம் நான் அறிவேன்
மகிழ்வில் நடனம் புரிவேன்

நீ தேர்
நான் கொடி
பாரி வந்தால்
படர்வேன்
அவன் வரும்வரை
உன்னைப் பின்தொடர்வேன்

நீ சூரியன்
நான் பூமி
சுற்றிவருகிறேன்
உன் அண்ணன்
என்ன நிலாவா
என்னை ஏன் சுற்றி வருகிறான்

நீ ஆறு
நான் விவசாய
நிலத்தின் சேறு

உன்னிடம் இருந்து
எப்போது வரும்
காதல் எனும் நீரு
இந்த
ஏழைக்குக்
கிடைக்குமா சோறு

அன்பே நீ கூறு
எதையும் பேசாமல்
என் இதயத்தைப்
போடாதே கூறு

கடைக்கண்ணால்
ஒரு முறை பாரு
நீ மறுத்தால்
நடக்கும்
மூன்றாம் உலகப் போரு

நான் உன் உயிரின்
வேரு
இதை

மேலும்

கலக்கல் கவிதை தலைவா... சிறப்பான சொல்லாடல் அழகு... 22-May-2019 3:29 pm
புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2019 1:44 pm

ஒரு
கவிஞனின்
காதுகளுக்கு
உணவாக நீர்
தரவேண்டியது
உங்கள் கைத் தட்டு

தூக்கி எறியப்பட்ட
உணவின்
அறியாசனம்
பிச்சைக்காரன் தட்டு

அந்த
அறியாசனத்தில்
உணவை அமர வைக்காது
குப்பையில்
வீசும் மக்கள்
உணவின் மகத்துவத்தை
அறியா ஜனம்

பாவம் செய்வோருக்கு
வைக்காது
பாவம்
நல்லது செய்யும்
காய்க்குப் பெயர்
பாவக்காய்

உப்பு என்பதாலோ
என்னவோ
உண்டால் உப்புகிறோம்

சிறையில்
இருப்பவன்கூட
களி உண்கிறான்
தரையில் இருக்கும்
நம் விவசாயி
எலி அல்லவா
உண்கிறான்

உணவை
உடலுக்கு அழைக்கும்
அழைப்பிதழ்
பசி

பசி வற்றாது
ஊற்றெடுக்கும்
கிணறு
ஏழையின்
வயிறு

நாம் உண்டால் அது புளி
நம்மை உண்டா

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 11:33 pm

தமிழ் மகளுக்கு
இன்று பிறந்தநாள்
தமிழ் மக்களுக்கோ
அது சிறந்த நாள்

சித்திரை மகளே
உன் தமக்கை பங்குனி
உன் தங்கை வைகாசி

உனக்குப்
புண்ணியமாய்ப்
போகட்டும் ஏழை
ஊரிலும் வை காசி

சித்திரையே
நீ விலக்கிக் கொடு
எங்கள் கவலை எனும்
மா திரையை
இன்று முதல்
விளக்கிக் கொடு
மகிழ்ச்சி எனும்
மாத்திரையை

சித்திரையே
மின் விசிறி
இல்லாத குடிசைக்குள்
கொடு நித்திரையே

சித்திரையே
தமிழை
வளப்போர்க்குக் கொடு
முத்திரையே
வளைப்போர்க்கு எடு
முகத்திரையே

தை பிறந்தால்
வழி மட்டுமே பிறக்கும்
சித்திரையே உன்
பிறப்பால் தமிழ்
மொழியல்லவா பிறந்தது

உன் பிறப்பால்
தமிழர்களுக்கு
கிடைக்கட்டும்

மேலும்

புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2019 5:30 pm

நீ
நிலா
நான் உன்னைத்
தொட நினைக்கும்
ஆம்ஸ்ட்ராங்

நீ
முல்லை
நான் உனக்கு
தேரை வழங்கக்
காத்திருக்கும் பாரி

நீ
தேன்
உன்னச் சுற்றிப்
பார் ஈ

நீ
சந்தனம்
நான் உன்னை
கடத்தத் துடிக்கும்
வீரப்பன்

நீ
பார்வையால் அடிக்கிறாய்
ஏனென்றால்
உன் அப்பன்
வீர அப்பன்

நீ
தாமரை
நான் உன்னை
ஆள விரும்பும் மோடி

அதற்காக
நான் விற்கவும்
தயார் டீ

நீ
காஷ்மீர்
நான் உன்னுள்
ஊடுருவ நினைக்கும்
தீவிரவாதி

உன்னால்
எனக்குக் காதல் வியாதி

அன்பே
பக்கிஸ்தானாய்
எனக்கு அன்பைக்கொடு

தயவு செய்து
இந்தியாவாய்
என்னை அழித்துவிடாதே

மேலும்

நன்றி நண்பரே 11-Mar-2019 7:05 pm
எதிர் எதிர் சிந்தனையில் காதல் கவிதை செம்மை 04-Mar-2019 7:59 pm
புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2019 10:41 am

அற்றைத் திங்கள் வெண்ணிலவில்

அவளைக் கண்டேன்

அவள்
திங்கள் அன்று
பிறந்த திங்கள்

செவ்வாய் மலர்ந்து
பூமியில் வாழும் செவ்வாய்

அவள்
அற்பனாய் இருந்த
என்னை அற்புதனாய்
மாற்றிய புதன்

என் பூமி நெஞ்சைத்
தாக்க வரும் வியாழன்

அவள்
கொலுசுகள் வெள்ளி
என் வாழ்வில்
வந்த விடி வெள்ளி

அவள் கனி
அவளை காணும்
இளைஞனுக்குப் பிடிப்பது சனி

அவள்
மாலையில் மறையாது
மாலையிட்டவனோடு மறைந்த
ஞாயிறு

கவிஞர் புதுவை குமார்

மேலும்

புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) arshad3131 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2019 10:35 am

அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்

அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று

அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது

அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு

மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்

அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்

அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்

சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு

மேலும்

நன்றி 17-Jan-2019 9:02 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
ஒவ்வொரு பத்தியையும் செதுக்கி இருக்கீங்க ... மாஸ் 17-Jan-2019 5:49 pm
போற்றுதற்குரிய மார்கழி மாத கவிதை பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------ மார்கழியை அடுத்து வருகிற தை மாதம், அந்தக் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது தடைகள் ஏற்படாமல் இருக்க, தமிழர்களது பண்பாட்டில் ஒன்றான கோலம் பல்வேறு வகையாக வரையப்படுகின்றன. மாக்கோலம் (அரிசி மாவு), புள்ளிக் கோலம், இழைக் கோலம், சிக்குக்கோலம், அங்கக்கோலம், மணற்கோலம், வெள்ளைக்கல் மாவுக்கோலம், பூக்கோலம், பயறுக்கோலம் மற்றும் ரங்கோலி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கோலத்தை எடுப்பாக காட்டுவதற்கு காவி நிறத்தையும் பயன்படுத்துவார்கள். 16-Jan-2019 4:40 pm
புதுவைக் குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2018 5:14 pm

அழகிய தீவின் மண்
பாரதியின் பண்
நாரதியின் கண்
அந்தி நேரத்து விண்
அக்ரகாரத்தில் செய்த பன்
ராமானுஜன் காணாத எண்
நெய்வேலியில் தயாரிக்காது
நெய்யில் தயாரித்த மின்
செப்பு கலக்காத பொன்
இவள் இவை அனைத்தும்
கலந்து செய்த பெண்

யானை பயிரை சேதப்படுத்தியது போல்
இவளின் முந்தானை
என் உயிரையல்லவா சேதப்படுத்துகிறது

மானை வீட்டில் வளர்க்கும்
குற்றத்திற்காக அவள் தந்தையை
கைது செய்யாத அரசைக்
கண்டிக்காமல் கண்ணடிக்கச்
சொல்கின்றது என் மனது

அவளிடம் மயிலைப்போல்
அழகைக்காட்ட என்னிடம் இல்லை தோகை
அந்த சோகத்தால் வந்தது சோகை

அவள் வீட்டில் மூலிகைச் செடிகூட
மல்லிகையைப் பூத்தது

அவளின் கூந்தல்
காதலன

மேலும்

Nandri nanbare 29-Dec-2018 2:02 pm
கவிதை படிக்கும்போதே கவிஞர் யாரென்று அடையாளம் காட்டிவிடுகிறது... வாழ்த்துக்கள் கவிஞர் புதுவை குமார் அவர்களே... அழகான காதல் வரிகள்... 29-Dec-2018 6:12 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2018 12:44 pm

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (104)

தொங்கலை தொலைத்தவன்

தொங்கலை தொலைத்தவன்

நெட்டலக்குறிச்சி/ அரியலூ
user photo

panneer karky

பாண்டிச்சேரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
JEKA

JEKA

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (105)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (104)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஹஸீனா அப்துல்

ஹஸீனா அப்துல்

தென்காசி
தீனா

தீனா

மதுரை

பிரபலமான எண்ணங்கள்

மேலே