கோலம்

அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்

அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று

அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது

அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு

மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்

அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்

அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்

சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு
பூச்சனியாக அமைந்தது

மேகம் தெளித்த
நீரால் வானவில்
அவள்
தேகம் தெளித்த
நீரால் வண்ணவில்தான்
கோலம்

எழுதியவர் : குமார் (16-Jan-19, 10:35 am)
Tanglish : kolam
பார்வை : 195

மேலே