திருமணம் பெண் வாழ்வில் பெரும் மாற்றம்
திருமணம் பெண் வாழ்வில் பெறும் மாற்றம்
அந்த பெரிய கிராமத்தில் நிலபுலன்கள் பல இடங்களில் உள்ள ஒரு பண்ணையார் வாழ்ந்து
வந்தார்.அவர் மிக நல்லவர் அந்த ஊரில் உள்ள எல்லோரும் அவர் வயலில் வேலை செய்து
அல்லது அவரது கட்டளையை நிறைவேற்றி அந்த வீட்டில் இருந்து தங்கள் குடும்பத்தை நடத்தி
வந்தனர். அவர் அவரது மனைவி இருவரும் வேலையாட்களை தங்கள் வீட்டு ஆட்களாக நடத்தி
தாங்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதையே சமையல் செய்பவர்களை அவர்களுக்கும் கொடுக்க
கூறியதால் வேலை ஆட்கள் அவர்களுக்கு மரியாதையை அளித்து தங்கள் குடும்பத்தையே
அவர்களுக்கு வேண்டிய வேலைகளை செய்ய வைத்தனர். இந்த பண்ணையார் தம்பதிகளுக்கு ஒரு
பெண் குழந்தை இருந்தது.அந்த குழந்தை அவர்களின் தாத்தா ஆரம்பித்த பள்ளியிலேயே படித்து
வந்தது. அந்த குழந்தை படிப்பில் மிகச் சுட்டியாகவும் எல்லா பாடங்களிலும் முதல் மார்க் எடுத்து
பள்ளியில் ஆசிரியர்களை மதித்து நல்ல பெயரோடு படித்ததனால் எல்லா குழந்தைகளும் அவளை
மதித்தனர். பள்ளி இறுதியாண்டில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் அவள்
குடும்பத்திற்கும் பெருமை சேர்த்திட பெற்றோர்கள் அவளை கல்லூரியில் படிக்க வைக்க ஆசைப்
பட்டனர்.அவள் தேர்தெடுத்த படிப்பு அங்குள்ள எந்த கல்லூரியிலும் இல்லாததால் அவள்
மதுரைக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டிய நிர்பந்தம் வந்திட பெற்றோர் அவளை
பிரிந்து இருக்கும் நிலையை வெறுத்தனர். அவளது அத்தையும் குழந்தைகளும் சென்னையில்
இருப்பதால் அவளை அவர்களுடன் இருக்க வைத்து கல்லூரி படிப்பை தொடரலாம் என்ற ஒரு
திட்டத்தோடு அவளை சென்னைக்கு அழைத்து வந்தனர் அவளும் மகிழ்ச்சியோடு அத்தை வீட்டில்
அவளை ஒத்த வயதில் இருக்கும் அத்தையின் குழந்தைகளோடு காலம் கழிக்களானாள். அவள்
சென்னையில் டிகிரி கோர்ஸ் முடித்துவிட்டு வக்கீளுக்கு படிக்க வேண்டும் என தன்னாசையை கூற
பெற்றோர்கள் அதற்கும் சரி என சொல்லி அவளை வக்கீல் பட்டம் பெற
அனுப்பினார்கள்.அதையும் படித்து அதிலும் வெற்றி பெற்று தனது வீட்டிற்கு திரும்பி வந்தாள்.
பெற்றோர்கள் அப்பொழுது அவளிடம் உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறோம்.உனக்கு
திருமணம் செய்து வைக்க எங்களுக்கு மிகுந்த ஆசையுள்ளது என்பதை தெரிவிக்க அவளும் சரி என
ஒப்புக்கொண்டாள். அவளது ஒப்புதலுக்கு பிறகு மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , நன்றாகப்
படித்தவன் , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இவை
யாவற்றையும் மனதில் வைத்து கொண்டு தெரிந்தவர்களிடமும் உறவினரிடமும் இதைக் கூறி
அவர்களின் உதவியையும் நாடினர். பல மாப்பிள்ளைகளின் ஜாதகங்கள் வர எல்லாவற்றையும்
தங்கள் குடும்ப நண்பரும் நன்றாக பொருத்தம் பார்ப்பவரும் அம்மனின் அருள் பெற்றவருமான
ஒருவரிடம் அதை கொடுத்து அவரது பதிலை எதிர்பார்த்து இருந்தனர். சென்னையில் அவளில்
மாமா ஒரு மாப்பிளையைக் கண்டு வந்து அவனைப் பற்றிக் கூறிட பெற்றோருக்கும் அவளுக்கும்
அவர்களை பிடித்துப்போனது. பெற்றோர்களில் அனுமதியோடு சென்னைக்கு அவள் வந்து
பையனைப் பார்க்க பேசிட விரும்பியதால் அவளை மாமா வீட்டிற்கு அனுப்பினர். மாப்பிள்ளை
பையனும் இதை ஆமோதிக்க ஒரு பிரபலமான ஹோட்டலில் இருவரும் சந்தித்தனர். இருவரும்
தங்களைப் பற்றி பேசத் தொடங்கினர், இருவருக்கும் ஏறத்தாழ ஒரே மனப்பான்மை தான்,
இருவருக்கும் மனம் பொருந்தி போனது, அவளும் மாமாவும் சேர்ந்து பெற்றோரிடம் தங்கள்
மகிழ்வை தெரிவிக்க உடனே நிச்சியம் செய்யவும் திருமணத்திற்கு நாள் குறிக்கவும் முடிவு
செய்தனர். திருமண நாள் குறித்த பின் இருவர் வீட்டிலும் பரபரப்புடன் திருமண வேலைகள்
ஆரம்பமாகி கிராமம் முழுக்க எல்லோரும் சின்னம்மாளின் திருமணம் என்று வேலைகளை எடுத்து
போட்டு தங்கள் வீட்டின் விசேஷமாக கருதி எல்லா வேலைகளையும் செய்தனர். பிள்ளை
வீட்டாரின் உறவினர்கள் யாவரும் வந்திட திருமணம் வெகு விமர்சையாக நடை பெற்றது.
பந்தலும் பூக்களும் அலங்காரம் செய்ய பண்ணையார் வீடு இருக்கும் அந்த தெருவையே அடைத்து
ஒரு மண்டபத்தை உருவாக்கி அங்கு திருமணம் நடந்தது.அந்த கிராமத்து மக்கள் யாவரும் உணவு
உட்கொள்ள வந்தனர் வரமுடியாதவர்களுக்கு உணவு வீட்டிற்கே அனுப்பப்பட்டது. அந்த மூன்று
நாட்களும் யார் வீட்டிலும் சமையல் செய்யவில்லை அந்த அளவிற்கு திருமண சாப்பாடுகளை
ஏற்பாடு செய்து திருமணத்தை வைபகமாக நடத்தினர். பலரும் இந்த விதமாக திருமணம் நடந்து
பார்த்ததில்லை எனக்கூறி மகிழ்ச்சியோடு சென்றனர். இவ்வாறு விமரிசையாக திருமணம் நடந்த
பின் அவள் தங்கள் வீட்டையும் உறவினரையும் பெற்றோர்களையும் வந்து பார்த்து தான் இன்னும்
சில நாட்களில் மாப்பிள்ளை வீட்டாரோடு சென்னை செல்வதைப் பற்றி நினைத்து எவ்வாறு தான்
வாழ்ந்த வீட்டையும் பெற்றோரையும் உள்ள உறவினரையும் விட்டு செல்ல போகிறோம் என்ற
எண்ணத்தால் வருந்தி கண்கள் நிறைந்திட எல்லோரிடமும் தனது மனவருத்தத்தை தெரிவித்து
தன்னுடைய இழப்புக்களை பற்றி கூறிட யாவரும் அவளை சமாதான படுத்த
முற்பட்டனர்.பெற்றோர்கள் என்ன செய்வது என அறியாமல் தங்கள் மனவருத்தத்தையும் கொட்டித்
தீர்த்தனர்.
திருமணம் மகிழ்ச்சியை தந்தாலும் இந்த இழப்பு மிக பெரியதாக தோன்றியது.
பெற்றோரைப் பார்த்தாள் அவளால் அவர்களை விட்டுவிட்டு செல்வதை மனதில் ஏற்க முடியாமல்,
அவர்களையும் வீட்டையும் சுற்றி சுற்றி வந்தாள், திருமண கோலத்தில் இருந்த அவளது முகத்தில்
ஆபரணங்கள் அழகு செய்தாலும் கண்கள் சுருங்கி நீர் துளிகள் சொட்டியது.
அவளோடு படித்த நண்பர்களும் தனக்குப் பாதுகாவலாக இருந்த வேலையாட்களும் மற்றவர்களும்
அங்கும் இங்கும் நிற்பது கண்டு மேலும் முகம் வாடியது.இவர்களை இனி எப்பொழுது காண்போம்
எவ்வாறு பிரிவோம் என்ற சிந்தனைகள் மனதை வருத்தியது.மாப்பிள்ளை வீட்டில் உள்ளோர்
எவ்வாறு தன்னை நடத்துவார்கள்,இந்த இன்பமான நாட்கள் அங்கு கிடைக்குமா? எப்படி இந்த
இடத்தை விட்டு செல்ல போகிறேன். அவளுக்கு தோட்டத்தில் செடிகளுடன் வளர்ந்த மலரும்
ரோஜா செடியை வேரோடு பிடிங்கி எங்கோ கொண்டு சென்று நடுவது போல் தோன்றியது.
திடீரென அம்மா நான் இங்கிருந்து போகமாட்டேன், இங்கேயே இருந்து விடுகிறேன் , உங்களை
விட்டு நான் எப்படி செல்வேன், அங்கு எப்படி இருக்குமோ, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நான்
போகலை என்று மெல்லிதாய் அழுதாள்,
இதை கண்டவுடன் அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதானம் சொன்னாள், அப்பாவுடன்
அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம்
வார்த்தையில் வருணிக்க முடியாதது. அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள்
அவள் அம்மா, ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள். ஆனால் அவள் வாழ்ந்த ஒரு
மகிழ்ச்சியான உலகத்தை விட்டு விட்டு அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின்
வாழ்வில் ஒரு நிகழ்வு, அதில் ஏற்படும் மகிழ்ச்சி அவனது கற்பனைகள் ஆகியவை அந்த பெண்
இழப்பதை அறிவதில்லை. சில நேரங்களில் அவளது வருத்தத்தை கண்டு அவர்கள் மனதளவில்
நகைப்பதும் கூட உண்டு . ஆனால் இந்த திருமண வைபவம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும்
மகத்தான ஒரு இழப்பைச் சந்திக்கும் நேரம் என்பதை மறுக்க முடியாது. தனது எல்லா
நினைவுகளையும் அப்படியே விட்டு விட்டு தெரியாத ஒரு உலகத்தில் சொர்கம் என மனதில்
எண்ணி கால் வைப்பது . பெரியதொரு மாற்றம் தான் என்பதை மறுக்க இயலாது.
பெண்ணின் வாழ்க்கையில் அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கி எடுத்து
மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம்,

