அந்தக் கட்சியில் எப்படிடா சேர்ந்தாய்
அந்தக் கட்சியில் எப்படிடா சேர்ந்தாய்?
@@@@@@
அந்தக் கட்சில எப்பிடிடா பொசுங்கான்
சேர்ந்த?
@@@@@@
அண்ணே உங்களுக்குத் தெரியும் நான்
பிரியாணிப் பிரியன். அந்தக் கட்சி
தலைமை நிலையத்தின் பின்னால் ஒரு
பெரிய சமையலறை இருக்குது. இன்னும்
ஒரு வாரத்துக்கு அந்தக் கட்சி
இருபத்திநாலு மணி நேரமும்
பிரியாணிதானம் செய்யறாங்கன்னு
விளம்பரம் பண்ணினாங்க. ஒரு நாளைக்கு
மூணு வேலையும் பிரியாணி
தின்னலாம்னு அங்கே போனேன். ஒரு
வாரம் தொடர்ந்து மூணு வேளையும்
அந்தக் கட்சியின் பிரியாணிதானத்தில்
கலந்துகிட்டு தினமும் மூணு வேளையும்
பிரியாணி தின்னறவங்களை அந்தக்
கட்சியில் சந்தாத் தொகை இல்லாம
சேர்த்துக்கிறதோட கட்சில பதவியும்
வழங்கறாங்க.
********
சரிடா பொசுங்கான், உனக்கு என்னடா
பதவி குடுத்தாங்க.
@@@@@@
நான் தொடர்ந்து அந்த ஏழு நாளில்
இருபத்தியோரு பிரியாணி தின்னு
சாதனை படைச்சதால் அந்தப் புதுக்
கட்சியின் மாநில நகைச்சுவை அணித்
தலைவர் பதவி குடுத்திருக்கிறாங்க
அண்ணே. அந்தக் கட்சிப் பதவில
இருக்கிறவங்களுக்கு மூணு வேளையும்
அவுங்க விரும்பற உணவைத்
தருவாங்களாம்.
@@@@@
டேய் பொசுங்கான் நீ ரொம்பக்
கொடுத்துவச்ச்வண்டா.
@@@@@@
வேலை வெட்டி இல்லாம சும்மா
கோமாளித்தனம் பண்ணீட்டு
திரிஞ்சவனுக்கு மாநில அளவில்
பதவின்னா சும்மாவா? அந்தப் புதுக்
கட்சியில் அணியணியாய்த் தொண்டர்கள்
சேர்ந்த வண்ணம் இருக்கிறாங்க
அண்ணே. நம்ம மாநிலத்தில் எந்தக்
கட்சியிலும் நகைச்சுவை அணின்னு
ஒண்ணு கிடையாது அண்ணே. அது
தெரியுமா உங்களுக்கு?
@@@@@@
உம் ... உங்க கட்சி வெற்றி பெற்றால்
உனக்கு
அமைச்சர் பதவி உறுதிடா பொசுங்கான்.
@@@@@
சரியாச் சொன்னீங்க அண்ணே. மிக்க
நன்றி அண்ணே. 'மாண்புமிகு
திரு. பொசுங்கான்'னு சொல்லுங்க.

