சித்தம் கலங்காதே
அன்பு கொண்டு ஏங்குது மனம்,
வார்த்தைகளில் மயங்குது தினம்,
ஒவ்வொரு மணித்துளியும் ஓடும் அனுச்சனம்
அறிவை இழந்து, உணர்வை மறந்து,
பணம் தேடும் உயிர்கள் பறிபோயின சுதந்திரம்,
ஆசைகள் நாளும் வளர, தூங்காத இரவுகள் சொல்லும்,
சித்தம் கலங்காதே!
கவிதை வடிப்பது கற்றுக் கொண்டு வரவில்லை,
புதைந்த உணர்வுகள் எழுகையில் எழுதுகிறேன்,
இறைவா! நீ என்றே நாளும் தொழுகிறேன்,
இடைத்தரகர்கள் வந்து இமையாது புழுக,
நாளும் யார் பெரியோன் என்று வாதிடும் வாய்கள்,
மிரட்டலாடிடும், வேதம் ஓதிடும், அடிமன ஆசை தூண்டிடும்
சித்தம் கலங்காதே!
மலையிலே உதித்தாய், சீவ நதியாய் ஓடிடுவாய்,
இடையே கருணை கொள், விவசாயம் செழிக்கவும்,
உலகின் பசிப்பிணித் தீர்க்கவும் பாய்ந்தருள்வாய்,
சாதியோ, மதமோ, கிணற்றுத் தவளையாய் ஆக்கிடும்
உன்னை, கட்டுண்டு போனால் எல்லாம் வறண்டு போகும்,
வறண்டுவிடாது உண்மை ஞானம் உள்ளவாறே நீ கண்டால்
சித்தம் கலங்காதே!

