இன்னிசை இருநூறு 33 - நான்காவது அதிகாரம் – கூடாவொழுக்கம் 3

இன்னிசை இருநூறு 33 - நான்காவது அதிகாரம் – கூடாவொழுக்கம் 3
இன்னிசை வெண்பா

பிறன்மனை வேட்டொழுகு பேதைநீ டூழி
மறலி யுலகத்து வைகிப்பின் வந்தே
பிறனலந் தன்மனை பெட்டுத்தற் பேணா(து)
உறனோக்கி நோதல் உறும்!. 33

வேட்டு – விரும்பி, மறலி – யமன், பெட்டு – விரும்பி

- இன்னிசை இருநூறு

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (8-Dec-25, 6:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே