ஜன்னலோர இருக்கை
ஜன்னலோர இருக்கை
ஓடும் வேகத்தில்
மோதும் காற்று
வருடி செல்கிறது
முகத்தை
கண் அருகில்
நெருங்கி
பின்னால் வேகமாய்
தலையாட்டி
மறையும் மரங்கள்
நடந்து செல்லும்
முகங்களை பார்க்கையில்
ஜன்னலோரத்து இருக்கை
என்னமோ எனக்கு
அரியாசணை போலத்தான்
எண்ணி இறுமாந்த
நொடி பொழுதில்
முன் இருக்கை
மனிதன் துப்பிய
எச்சில்
முகத்தை தொட்டு
உண்மையை சொல்லி
செல்கிறது
எல்லாமே பொய்மையின்
காட்சிகள் என்று