2100

மனித இனம்
படைப்புகளுக்கு
பயிற்சி பெறாமல்
பார்க்கவும் ரசிக்கவும்
மட்டும்
பழகிக் கொண்டிருக்கிற
வேளையில்,

எந்திரங்கள்
திறன் வளர்த்து
எழும்பி கொண்டிருக்கிறது,

அடுத்த தலைமுறையை
அடக்கி ஆள்வதற்கு !

அடக்கு முறைக்கு
இடம் கொடுத்து
அடிமையாகி - பின்
புரட்சி செய்து - ஏன்
மீள வேண்டும் ?

அதன் முன்னே
எதையும் - அடியோடு
வெட்டி நறுக்கிடுதல்
நல்லது தானே !

எந்திரங்கள்
படைத்ததேனோ
மனிதன் தான் - ஆனால்
அவை படைக்க
பழகி இருப்பதோ - இன்றைய
மனிதனால் கூட முடியாத
எத்தனையோ ஆயிரம் !

நிச்சயம் இது
அடுத்த சாம்ராஜ்யத்தின்
தொடக்கப் புள்ளியே !

2100
மனித சாம்ராஜ்யமா
இல்லை
மனிதன் வளர்த்த
தொழில் நுட்பத்தின்
சாம்ராஜ்யமா ?

எழுதியவர் : நா முரளிதரன் (23-Jul-25, 9:09 am)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 27

மேலே