நா முரளிதரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நா முரளிதரன்
இடம்:  Salem
பிறந்த தேதி :  07-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2022
பார்த்தவர்கள்:  623
புள்ளி:  42

என்னைப் பற்றி...

An Engineer working in a Private company at Chennai. Born in salem. Interested in writing from childhood but not so experienced. Started to post கவிதை in blog since Jan'22.

என் படைப்புகள்
நா முரளிதரன் செய்திகள்
நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2023 9:53 pm

கால்கள் நனைக்கக்
காத்திருந்தேன்
அலைகள்
பாதச் சுவடுகளை மட்டும்
வருடிச் சென்றன !

தென்றல் தீண்ட
நின்றிருந்தேன்
அதுகூட என்
நிழலினை மட்டும் தான்
தழு‌விச் சென்றது !

அடை மழையில்
முழுவதுமாய்
மூழ்கி விட
வந்தவனுக்கு
மிஞ்சியதெல்லாம்
சில தூறல்கள் தான் !

இப்படி என் மனது குமுற,
மனசாட்சி சொன்னது ...
வெம்பாதே நண்பா !

உலகின்
ஒவ்வொரு அசைவுக்கும்
ஒரு காரணம் உண்டு !

அந்த கணத்தின் அலை ;
அன்று வீசிய தென்றல் ;
அங்கு பெய்த மழை
உனக்கானதல்ல,
அவ்வளவுதான் !

கைகளில் சிக்காமல்
கரையில் தத்தளித்த
நண்டை - மீண்டும்
கடல் சேர்க்க வந்த
அலை அது !

வழி தெரியாமல்

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2023 9:53 pm

கால்கள் நனைக்கக்
காத்திருந்தேன்
அலைகள்
பாதச் சுவடுகளை மட்டும்
வருடிச் சென்றன !

தென்றல் தீண்ட
நின்றிருந்தேன்
அதுகூட என்
நிழலினை மட்டும் தான்
தழு‌விச் சென்றது !

அடை மழையில்
முழுவதுமாய்
மூழ்கி விட
வந்தவனுக்கு
மிஞ்சியதெல்லாம்
சில தூறல்கள் தான் !

இப்படி என் மனது குமுற,
மனசாட்சி சொன்னது ...
வெம்பாதே நண்பா !

உலகின்
ஒவ்வொரு அசைவுக்கும்
ஒரு காரணம் உண்டு !

அந்த கணத்தின் அலை ;
அன்று வீசிய தென்றல் ;
அங்கு பெய்த மழை
உனக்கானதல்ல,
அவ்வளவுதான் !

கைகளில் சிக்காமல்
கரையில் தத்தளித்த
நண்டை - மீண்டும்
கடல் சேர்க்க வந்த
அலை அது !

வழி தெரியாமல்

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2023 7:42 pm

கரங்கள் மடக்கி
கதிரவன்
கடலில் வீழும்
கணங்களை,

கண்மணியின்
கரங்கள் கோர்த்து
கண்ட - அ‌ந்த
கனவுத் தருணங்கள் !

பட்டம் பெற்ற
வெகுமதியு‌ம்
பட்ட கஷ்டம் விற்ற
நிம்மதியும் - மனது
முட்டத் தந்த
வெற்றித் தருணங்கள் !

அன்று பிறந்தது
அவன் மட்டும் தானா
நாங்களும் தான்,

வார்த்தைகளாலோ
வண்ணத்தினாலோ
வருணிக்க முடியா
அந்நொடிகள்
இதயம் நனைத்த
கண்ணீர்த் தருணங்கள் !

தெருமுனையில்
தினமும்
திரும்பி - அவளிடம்
விடைபெறும்
வழக்கம் எனக்கு,

மறந்து சென்ற
ஓர் நாள்
திரும்ப வந்து (அவளைத்)
தேடித் திரும்புகையில்
அவளும்
அரும்பி வந்த
அதிர்ஷ்டத் தருணங்கள் !

முதலில

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2023 1:32 pm

பழுப்பு வண்ண
வேர்களும்
பச்சை வண்ண
இலைகளும் தான்
பல வண்ணப்
பூக்களையும்
தருகிறது,
முடியும் எனும் போது
இதுவும் சாத்தியம்
எதுவும் சாத்தியமே !

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2023 1:32 pm

பழுப்பு வண்ண
வேர்களும்
பச்சை வண்ண
இலைகளும் தான்
பல வண்ணப்
பூக்களையும்
தருகிறது,
முடியும் எனும் போது
இதுவும் சாத்தியம்
எதுவும் சாத்தியமே !

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2023 3:17 pm

எத்தனை பெரிய
இதயம் உனக்கு ...

என் முகப்படங்கள்
நம் வாழ்வின்
நிழற்படங்கள் என
ஆயிரம் அரைந்து
வைத்துள்ளாய்
அதன் சுவரில் !

எத்தனை பழசாயினும்
எடுத்து நீட்டுகிறாய்
எப்போது கேட்டாலும் !

எனக்கோ
அது மிகச் சிறிது

உன்னிரு கண்களும் - நாம்
முதற்கண்ட காட்சியும்
மட்டுமே
நிரப்பி விட்டது
என் இதய அறையின்
மொத்தத்தையும்,

ரசிப்பதாய் இருந்தாலும் 
மத்த எதையும்
தொலைத்தே விடுகிறேன்
சேமித்து வைக்க
இடமின்றி !

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2023 3:17 pm

எத்தனை பெரிய
இதயம் உனக்கு ...

என் முகப்படங்கள்
நம் வாழ்வின்
நிழற்படங்கள் என
ஆயிரம் அரைந்து
வைத்துள்ளாய்
அதன் சுவரில் !

எத்தனை பழசாயினும்
எடுத்து நீட்டுகிறாய்
எப்போது கேட்டாலும் !

எனக்கோ
அது மிகச் சிறிது

உன்னிரு கண்களும் - நாம்
முதற்கண்ட காட்சியும்
மட்டுமே
நிரப்பி விட்டது
என் இதய அறையின்
மொத்தத்தையும்,

ரசிப்பதாய் இருந்தாலும் 
மத்த எதையும்
தொலைத்தே விடுகிறேன்
சேமித்து வைக்க
இடமின்றி !

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2022 5:46 pm

மௌனம்
கொலைகள் செய்ய
புறப்படும் முன்,

உண்மையே - நீ
பேசி விடு !

பல நாள்
சகித்த
எரிமலைகள்
வெடித்துச்
சிதறப் போகிறது,

கோபமே - உன்
எதிர்ப்பைக்
காட்டி விடு !

பொறுமையே - நீ
இன்னும் கொஞ்சம் உறங்கு
விடியலுக்கு நேரம் இருக்கு !

முயற்சியே
அதற்குள் என்ன ஓய்வு,

நீ அடைய வேண்டியது
மேகத்தை அல்ல
வானத்தின் எல்லையை !

சிரிப்பு - அது
மகிழ்வித்தவனுக்கு
கொடுக்கும் சன்மானம்,
செலவழித்து விடு !

சேமித்து வைத்தும் 
கடனாளி ஆகாதே !

அழுகையே
உனக்கு அணை கட்டி
ஒரு பயனும் இல்லை - நீ
அமுத நீரா என்ன
அழுக்கு நீர் தானே,
பொழிந்து விடு !

- நா முரளிதரன் 

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2022 10:19 pm

வெள்ளைப் பனி கோர்த்து
காலை
வாசற்கோலம்
போட்டு வைப்பேன்,
ஒளி
பனியில் பட்டுத்
தெறிக்கும் அழகை
உனைத் தட்டி எழுப்பிக்
காட்டிடவே !

நீ நட்டு வைத்தப்
பூச்செடிகள்
பூத்திருக்கா என
பார்த்திருக்க,

பறித்த பூக்களை எல்லாம்
மீண்டும்
மலரச் சொல்லிக்
கேட்டிருந்தேன் !

ரோஜாச் செடியில், மாறி
மல்லிகைப் பூத்திருக்க,
நீ குலுங்கிச்
சிரித்ததிலே
உன் முகத்தில்
ரோஜா பூத்திருச்சே !

உதிர்ந்த இலைகள்
உலரும் முன்னே
ஊன்றி வைத்துக்
களைத்திடுவேன் !

இலை இசைந்தாடி
தரை வீழாதிருக்க
தரைக்காற்று வீசத்
தடைப் போட்டிருந்தேன் !
மரம் கண்டு ரசித்து, நீ
திரும்பும் வரை !

முப்பது நாளும் முழுமதி
வானில்
முடிச்சுப

மேலும்

நன்றி ஐயா 12-Aug-2022 8:31 pm
அருமை நண்பரே...பெண் பிள்ளை பிறந்தால் கூற இப்படி ஒரு கவிதை எழுதிவைத்தேன் என்று பிள்ளை பிறக்கும் வரைகூட காத்திருக்க முடியாமல் பெண்டாட்டியையே பெண் பிள்ளையாய் நினைத்து உங்களின் சமர்ப்பணம்..அருமை. வாழ்த்துக்கள். 12-Aug-2022 8:28 pm
நா முரளிதரன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2022 7:19 pm

வீறிட்டு அலறிய பூப்பந்தை
என் கையில் ஏந்தியபோது
வாழ்நாள் சாதனையாளன்
விருதை பூங்கொத்து கொடுத்து
போற்றுதல்போல்
பூரித்துப் போனேனே.
பத்துமாதம் சுமந்த பாரம்
இறக்கிவிட்டாள்....
அவள் இறக்கிய பாரம்
ஏறிவிட்டதடி... மகளே
என் நெஞ்சுக்குள்ளே...!

உன் பிஞ்சு விரலை - அந்த
பஞ்சு பாதத்தை தடவும் போது
சில்லென்று ஒரு பந்து
தொண்டைக்குழியிலிருந்து
உச்சிமண்டை வரை உருண்டு
குளிர்ந்து போகிறதடி.....!
போக்கை வாய் சிரிப்பிலும்
கெக்கபிக்க பேச்சிலும்
என்னை இழந்து
லேசாகிப்போகிறேனடி....
அந்த தேவ பாஷை
எனக்கும் கொஞ்சம்
புரிகிறதடி....

நீ புரண்டு படுக்கையில்
நானும் புரண்டு போகிறேனே..

மேலும்

நன்றி முரளிதரன் அவர்களே...தொடர்பில் இருங்கள் 12-Aug-2022 8:20 pm
மிகவும் அருமை.. என்னுடைய பெண் பிள்ளை கவிதையை படித்து கருத்து கூறவும்... தங்களுக்கு நேரம் இருந்தால் 12-Aug-2022 7:27 pm
நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2022 6:11 pm

மரத்தடியில் வெளிச்சப் புள்ளிகள்
செங்கால் புறா நடை அங்கும் இங்கும்;
சோளம் கொரித்துக்கொண்டு ஒருவன்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
நான் புல்வெளி, என்னைக் காதலி
தோட்டத்தில் வாசகம் ;
மதியம் ஈக்களும் எறும்புகளும் புல் மேல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
பின்னிரவில் பாடல்கள்
பலர் தூக்கத்தில் ;
ஒருவர் மட்டும் தூங்காமலிருக்க
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
முன் மாலை அருவியின் சாரல்
அதிலே, பற்பல வண்ணங்கள் ;
பிஞ்சுக் கைகளின் அழைப்பால் கவனிக்கப்படா

மேலும்

நன்றி ஐயா... 18-Jul-2022 7:53 pm
நல்ல முயற்சி நண்பரே முரளிதரன்...... 18-Jul-2022 5:05 pm
நா முரளிதரன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2022 1:04 pm

சுயம்.....
தானே சுயமாய் உருவாவது....
தானே சுயமாய் நினைப்பது.....
தானே சுயமாய் செயலாற்றுவது....
ஆம்.
இப்படித்தான்
என் படிப்பு சொல்லிக்கொடுத்தது.
என் அனுபவம் கற்றுத்தந்து.
என் வாழ்க்கை வாழ்ந்து காட்டியது.
ஆனால்
எனக்கொரு சந்தேகம்.
நாமே எப்படி
சுயமாக நினைப்பது?
சுயமாக உருவாக்குவது?
சுயமாக செயலாற்றுவது?
கண்ணுக்கு தெரியாத ஒருவனால்
நம் நினைவுகளில்
ஏற்கனவே விதைக்கப்பட்டதுதான்.
அது மட்டுமல்லாமல்
நம் பெற்றோர்...மனைவி...மக்கள்...
சுற்றம்...நட்பு...
இவர்களின் பங்களிப்போம் ஏராளம்.
அப்படியென்றால் சுயம்?
ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட
ஒன்றை சில...சில...மாற்றங்கள் செய்து
புதி

மேலும்

உண்மை தான்... ஒரே விஷயம் அவரவர் பார்வைக்கேற்ப/தேவைக்கேற்ப உரு மாற்றம் அடைகிறது. அதுதானே வளர்ச்சியின் அடிப்படை. டார்வின் சொல்லும் பரிணாம கோட்பாடும் கூட. மனித இனத்தின் அறிவு நுட்ப வளர்ச்சியில் சமூகத்தின் பங்கு அளப்பரியது... இங்கே சுயம் என்று ஒன்று இல்லை... 27-Mar-2022 2:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே