தேவதையே
உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !
நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !
நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !
ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !