பூகம்பம்

நில அதிர்ச்சி பூகம்பம்

பூமலரும் செடிகள் கொண்ட பூமிதனில்
பூகம்பம் ஒன்று கடுமையாக வந்ததம்மா
பூமகளும் உடலெல்லாம் தான் சிலிர்க்க
பூமியும் பாளமாகி விரிந்து பிளந்தம்மா
பூவுலகமெல்லாம் திகிலோடு பார்த்திருக்க
பொன்னியவள் தான் உரக்கச் சிரிக்க
வாழ்க்கையின் முடிவுதனை அச்சிரிப்பு
வரும் துயரின் வரைபடத்தை வடிவமைக்க
காலன் அவன் களியாட்டம் அங்கு அரங்கேற
கண்ணீருடன் தன் அகமனைத்தும் நடுங்குதம்மா
நான் கொண்டிருந்த என் அகந்தையும் அழிந்ததம்மா
பொங்கும் கடல் நுரைபோல் துயரும் நெஞ்சினிலே
அனல்போல வெடிக்குதம்மா ஆவியும் துடிக்குதம்மா

எழுதியவர் : கே என் ராம் (26-May-25, 12:10 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : poogambam
பார்வை : 5

மேலே