,தொங்கு மீசை குமார்

ஒரு இளைஞன் இருசக்கர வாகனங்கள்

நிறுத்துமிடத்தில் ஒரு புதிய மோட்டார்

சைக்கிளைத் திருட முயற்சிக்கிறான்.

அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர்

அவனைக் கையும் களவுமாகப்

பிடித்துவிடுகிறார்:

@@@@@@

வாடா திருட்டுப் பயலே. இந்தப் பகுதில

இந்த வாரம் மட்டும் இருபது மோட்டார்

சைக்கிள் திருட்டுப் போயிருக்குது. நீயும்

உன் கூட்டாளிகளும் அந்த வண்டிகளைத்

திருடினீங்களா?

@@@@@@@

ஐயா, ஐயா. நான் திருட்டுத் தொழிலுக்குப்

புதுசுங்க. நான் யாருகிட்டயும் பயிற்சி

எடுக்காம திருட வந்தேனுங்க. இது தான்

என்னோட முதல் திருட்டுங்க. அதனால

தான் உங்ககிட்ட மாட்டிடேனுங்க.

@@@@@

யோவ் பாலாஜி வந்து இவன் கையைக்

கட்டு.

@@@@@@

நட்டா காவல் நிலையத்துக்கு. இவனை

இழுத்து வாய்யா பாலாஜி

@@@@@@@@

காவல் நிலையத்தில்:

@@@@@@

உன் பேரு என்னடா?

@@@@@@

தொங்கு மீசை குமார் -ங்க ஐயா

@@@@@@

பட்டப் பேரு வச்சிருக்கிறன்னா நீ பலநாள்

திருடனா இருக்கணும். தொங்கு மீசை

குமார். பட்டப் பேரு தொங்கு மீசை.

@@@@@@@

யாருடா அந்தப் பட்டப் பேரை வச்சது?

@@@@@@@

ஐயா எனக்கு மீசை அடர்த்தியா வளர்ந்த

நாளிலிருந்தே நான் தொங்கு மீசை தான்

வச்சேன். எங்க பகுதிப் பசங்க என்னைத்

தொங்கு மீசை குமார்னு கூப்பட

ஆரம்பிச்சாங்க அதுவே எனக்குப்

பட்டப் பேரு ஆயிருச்சங்க ஐயா. யோவ் 198

இவனை உள்ள் தள்ளி முட்டிக்கு முட்டித்

தட்டு. நான் காவல் கண்காணிப்பாளரைப்

பார்த்துட்டு வர்றேன்.

@@@@@@

சரிங்க ஐயா.

எழுதியவர் : 🌹 மலர் (8-Oct-25, 4:37 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 15

மேலே