ஆப்புத்தே காப்புத்தே

என்னடா பேரா ஆப்புத்தே காப்புத்தேன்னு

சொல்லிட்டு திரியற?

@@@@@

கொள்ளுத் தாத்தா, எம் பயனுக்கு


'ஆப்தே'ன்னு முடியற இந்திப் பேரை


வைக்கலாமனு நான் என் மனைவிகிட்டப்


பேசிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்ட பக்கத்து

வீட்டு பரந்தேஷ் அவம் பையனுக்கு அந்தப்

பேரை வச்சுட்டான்.

@@@@@@@

டேய் பேரா பைகீசு (பைகீஷ்) அவம்

கெடக்கிறான் விடுடா. அவனெல்லாம் ஒரு

ஒரு மனுசனா? அதுக்காக நீ எங் கொள்ளுப்

பேரனுக்குத் தமிழ்ப் பேரை வச்சு நம்ப

பரம்பரைக்கே இழிவைத் தேடிக்

கொடுத்திடா. இந்திப் பேரை

வைக்கலின்னா நம்மள யாரும்

மதிக்கமாட்டாங்கடா பேரா.

@@@###

சரி என்ன செய்யறதுங்க தாத்தா?

@@#@###

பக்கத்தூட்டுக் குழந்தை பேரு

'ஆப்புத்தே'ன்னா உம் பையனுக்குக்

'காப்புத்தே'ன்னு பேரு வைடா பேரா.

@@@####

அருமை, அருமை தாத்தா. எம் பையனுக்கு

நீங்க சொன்ன 'காப்தே' ரொம்பப்

பொருத்தமான பேரு. 'காப்தே, காப்தே,


காப்தே'. ஸ்வீட் நேம் காப்தே.

எழுதியவர் : மலர் (10-Oct-25, 2:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 14

மேலே