தீபாவளி 2025 - சிறுகதை

தீபாவளி 2025 - சிறுகதை
அன்று கமலினி அதிகாலையிலேயே அனைவரும் எழும் முன் எழுந்து, பரபப்பாக அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள். கமலம்……………….. இது அவள் அத்தையின் குரல்…. இதோ வந்துட்டேம்மா……
எல்லாம் தயாரா இருக்கில்லையா?
இருக்குமா. சரி சரி என் அம்மா அடுப்படிக்கு வருவதற்குள் தயார் செய். இது அவள் மாமியார் கோமளாவின் குரல்.
சரிம்மா…..
பட்டு, பட்டு….. என்னடி செய்யற அங்கே? தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே சமயலடிக்கு வருகிறாள் சொர்ணா. – இது கோமாளாவின் பாட்டியின் குரல்…
பட்டம்மா … இது கோமளாவின் அம்மா…….
வாங்கம்மா….. நீங்க வந்து விளக்கேற்றியவுடன் எல்லாம் தயார் செய்துவிடலாம். – இது பட்டுவின் பதில்.

சரி சரி பசங்கெல்லாம் எழுவதற்குள் அமர்க்களப்படுதிடலாம்.
பாட்டி இருங்க. நாங்களும் வந்திடறோம்.
அடடடட……. அதுக்குள்ள எல்லாரும் எழுந்துட்டீங்களா?
ஆமாம் பாட்டி,….
இது அவர்களின் மற்ற நான்கு மருமகள்களின் பதில்.
சரி சரி வாங்க ஆளுக்கு ஒரு வேலையா இழுத்துபோட்டு சட்டுபுட்டுன்னு வேலையை முடிக்காலாம்.
தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே ஒரே அமர்க்களம் கமலனியின் வீட்டில்.
ஏனெனில் அவள் வீட்டில் தான் நண்டும் சிண்டும், குஞ்சும் குறுவாணியும் என ஏகப்பட்ட மழலைப்பட்டாளங்கள். ஊரிலேயே பெரிய குடும்பம் அவர்களுடையது. கிட்டத்தட்ட 250 உருப்படிகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஆச்சு தீபாவளி களை கட்டி விட்டது. ஒரே கோலகலம். மாக்கோலங்கள் என்ன….. மாவிலைத் தோரணங்கள் என்ன….. எங்கும் வண்ணமயமான ஒளிவிளக்குக்கள் பிராகாசிக்க கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்று காணப்பட்டது.
மூன்று நாட்களாக வெடி முழக்கம் காதைப் பிளந்தது. போதாக்குறைக்கு, ஊரார் அனைவரும் வந்து பெரியோர்கள் கால்களில் பணிந்து பரிசுகளை பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர்.
ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அப்பப்பா…. இந்த 2025 ஆம் ஆண்டில் இப்படியும் உள்ளனரா? என்று அனைவரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படத்தான் செய்தனர்.
தாத்தாக்கள், பாட்டிகள், மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள்……ம்…………
நெய்பணியாரங்கள் தெருமுழுவதும் மணம் பரப்பின….
பசிக்காதவர்களுக்குக் கூட பசி வயிற்றைக் கிள்ளியது.
விருந்தென்ன…… உபச்சாரம் என்ன….. பரிசுகள் என்ன……. அப்பாட…….. சொல்லி மாளமுடியவில்லை.

கமலா………….. என்ன பண்டிகையும் அதுவுமாக இப்படி….. பார் சுரேஷ் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறான். இது கமலாவின் கணவன் கோவிந்தனின் குரல்.
தன் கிழிந்த ஆடையை நேர்த்தி செய்து கொண்டு,,, அங்கும் இங்கும் பொத்தலாக ஆடை அணிந்திருக்கும் செல்ல பேரன் சுரேஷை வாரியணைத்துக்கொண்டு, புலம்பினாள்..
என்ன கனவா!
ஆமாங்க! கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தீபாவளித் திருநாள் நம் இல்லத்தில் எப்படி இருந்தது என்று எண்ணிப் பார்த்துகொண்டிருந்தேன்.
சரி சரி விடு….. எப்பொழுதும் காலம் ஒரே மாதிரியாக வா இருக்கும்.

இப்பொழுதெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்வை கற்பனையில் மட்மே காணமுடியும். சரி வா அம்மா அப்பாவிடம் ஆசி பெறலாம். அவர்களின் அன்பான ஆசிர்வாதங்களே பல பரிசுகளும் பாராட்டுக்களும் , இன்னும் எத்தனை எத்தனை உள்ளனவோ அத்தனைக்கும் சமம்.


அன்புடன்
ஸ்ரீ. விஜயலஷ்மி.

எழுதியவர் : ஸ்ரீ. விஜயலஷ்மி. (12-Oct-25, 7:55 pm)
பார்வை : 5

மேலே