திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 11-Oct-1962 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 3506 |
புள்ளி | : 214 |
நான் பகுதி நேர கல்லூரிப் பேராசிரியர். எனக்கு தெய்வீகப் பாடல்கள் புனைவது. மற்றும் இசைப்பது, தேச பக்திப் பாடல்கள், இயற்கை வாழ்த்துப் பாடல்கள் , நன்னெறிக் கதைகள் போன்றவை இயற்ற மிகவும் பிடிக்கும். மேலும் தமிழ் மொழிக்காக என்னால் இயன்ற பணிகளை அவ்வப்பொழுது ஆற்றியும் வருகின்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
பேச்சுப் போட்டி
அவைக்கண் குழுமியுள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் என் முதற்கண் பணிவான வணக்கங்கள் பல.
நான் இங்கு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்பதாகும். மேலோட்டமாகப் பார்த்தால் கொளுத்தும் வெயிலில் நிற்கும் ஒருவருக்குத்தான் வெயிலின் அருமைப் புலப்படும் என்பதாம்.
ஆனால் அத்தலைப்பினுள்தான் எத்தனை எத்தனை ஆணித்தரமான கருத்துக்கள் பயின்றுள்ளன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோர் செய்யும் சில பல தவறுகளை உங்கள் முன் வைத்தே அதற்கான கருத்துக்களைப் புலப்படுத்துகின்றேன்.
எத்தனை பேர் உணவுப்பொருள்களை வீணடிக்கின்றனர். நாம் கீழே சிந்
1. நற்பெயரென்னும் நல்லறம் கூட்டி,
சிந்தையைக் கெடுக்கும் தீமையைக் கழித்து,
அறம் பொருளென்ற பேற்றினைப் பெருக்கி,
இல்லறம் வகுத்தே இனிமையாய் வாழ்வோம்!
2. இருளை விரட்டுவோம் ஒளிவெள்ளத்தில் மூழ்குவோம்
சத்தியப் பாதையைப் பின்பற்றி நித்தியம் வீறுநடை பயில்வோம்!
3. வாழ்க்கை என்றதோர் நெடும்பயணத்தில்
வருவோர் போவோர் ப்லருண்டு
வாழ்ந்து மடிந்தோர் எண்ணற்றோர்
வாழ்வோர் சிலராங்கே என்றென்றும்!
4. இருளும் ஒளியும் நிறைந்த இப்புவியில்
இன்பமும் துன்பமும் கலந்திட்ட வாழ்வில்
நல்வினைத் தீவினைப் பயனறிந்தே நாம்
நற்பணியியற்றியே நற்பேரடைவோம்
5. உழைப்
தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் (அகரவரிசையில்)
அமுதம் தமிழ்மொழி என்றறிவாய்
ஆசையுடன் நீ தினம் பயில்வாய்
இசையுடன் பாடல் பலவுண்டதனில்
ஈடற்ற மொழியாம் தமிழ்மொழியே
உலக மொழிகளில் இதன் உயர்வை
ஊரார் பலரும் மொழிபெயர்த்தே
என்றும் அதன் புகழ் நிலைத்திடவே
ஏற்றம் பெற்றே போற்றிடுவார்
ஐயம் தெளிவுற கற்றிடலாம்
ஒன்பொருள் பலவும் அதிலுண்டு
ஓங்கி உலகெங்கும் உரைத்திடுவாய்
ஔவை போற்றிய இன் தமிழே!!
அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோய்ம்புத்தூர்-22
தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் (அகரவரிசையில்)
அமுதம் தமிழ்மொழி என்றறிவாய்
ஆசையுடன் நீ தினம் பயில்வாய்
இசையுடன் பாடல் பலவுண்டதனில்
ஈடற்ற மொழியாம் தமிழ்மொழியே
உலக மொழிகளில் இதன் உயர்வை
ஊரார் பலரும் மொழிபெயர்த்தே
என்றும் அதன் புகழ் நிலைத்திடவே
ஏற்றம் பெற்றே போற்றிடுவார்
ஐயம் தெளிவுற கற்றிடலாம்
ஒன்பொருள் பலவும் அதிலுண்டு
ஓங்கி உலகெங்கும் உரைத்திடுவாய்
ஔவை போற்றிய இன் தமிழே!!
அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோய்ம்புத்தூர்-22
நன்றன்று பிரித்து எழதுக
Karaiyoram pirithu Aluthuga
பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
பாகம் 3
வழங்குபவர்
திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22
அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த மூன்றாம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கம
கவிதை, கதைகளை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்
திருக்குறள் கவிதை
இதய ஒலிகள் அனைத்தினையும்
ஈரடி தனக்குள் அடக்கிவிட்டு
ஈடு இணையற்ற புகழனைத்தும்
இனிதாய் தனக்கே ஈட்டிக்கொண்ட
சீரினைப் பெற்றது திருக்குறளே
சிந்தை குளிர பல வரிகள்
செம்மைப் பெருக பல வரிகள்
சிறப்பாய் வாழப் பல வரிகள்
எண்ணில் அடங்கா கருத்துக்கள்
ஏற்றம் மிகுந்த சொல்லடைகள்
என்றென்றும் மிளிரும் ஒளிச்சுடராய்
எங்ஙணும் பரவிடும் அதன் கதிர்கள்
சாதிபேதம் எதுவுமின்றி
சமத்துவமாக விளங்கிநின்று
சர்வமயமாய் விளங்கி என்றும்
சாதனை புரியும் திருக்குறளே!
வார்த்தைகள் இல்லை வருணிக்க
வாழ்த்தொலி போதா எடுத்தியம்ப
வையகம் எங்ஙணும் செருக்குடனே
வட்டமிடுது திருக்குறளே!
ஒன்றும் புரியவில்லை
எதோ நினைக்கிறேன்
எல்லாம் சூனியம்
ஏதேதோ குரல்கள்
சிலபொழுது நிசப்தம்
சிலபொழுது பேரிரைச்சல்
பயம் பயம்
புரியாத பயம்
எங்கிருக்கிறேன்
என்ன செய்கிறேன்
எங்கிருந்தேன்
என்ன செய்தேன்
புரியவும் இல்லை
பிரியமான அரவணைப்புகள்
யார் இருக்கிறார்கள்?
என்னைச்சுற்றி
பார்க்க ஆவல்
பரிதவிக்கும் இதயம்
சிலபொழுது சிரிப்பு
சிலபொழுது அழுகை
ஏன் இந்தத் துடிப்பு?
மலரத்தான் ஆசை
நாளாக வேண்டுமே?
காண்பேனோ புது உலகை?
காணாமலே மறைவேனோ?
எத்தனை சிந்தனைகள்?
இந்த பிஞ்சு அரும்பிற்குள்?