முகிலன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/xvhgm_33238.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முகிலன் |
இடம் | : சிட்டங்காடு |
பிறந்த தேதி | : 19-May-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 294 |
புள்ளி | : 40 |
B.Sc - maths
விவசாயம்
.
.
மேகங்களில்லாது
வெட்டவெளிச்சமாய்
பளிச்சென்றிருந்தது
உன் கண்கள்
வார்த்தைப்
பரிமாற்றமில்லாதொரு
பேரமைதி நமக்குள்
நாம்
பருவநிலையோடு
உன்னை
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்
மெல்ல உடைத்தேன்
மௌனத் தாள்ப்பாளை ,..
அந்த வானுக்கும்
நமக்கும்தான்
எத்தனை ஒற்றுமை
பார்த்தாயா ...
மேகங்களை
உடுத்தியிருக்கும்போது மட்டும் வியர்த்துக்
கொட்டிவிடுகிறது
வானமும்
என்றேன் .
உன்
இதழ்க்கோடியில்
சின்னதாய் ஒரு
மின்னல் கீற்று
சட்டென்று மாறுகிறது
நம் வானிலை
பெய்கிறது
இடியுடன் கூடிய
கனமழை ....⛈️
.
.
கனவைக் கவிதையாக்க
முடிவதில்லை
மரங்களின் மூடியைத்
திறக்காமலேயே
மையை ஊற்றுகிறது
வானம்
கால்களில்
சதங்கை ஜதிக்க
ஓடையில ஓடும்
வார்த்தைகள்
சகதியோடு சலித்தெடுத்து
சமுத்திரம் விரையும்
பரல் குமிழ்கள்
மழை முத்தங்கள்
மழைத் தூவன்
மையலின் நிறம்
சாரலென்று சன்னலைச்
சாத்துகிறோம்
தாபம் விஞ்சும் மரங்கள்
வேர் கிளைத்த நிர்வாணம்
வெட்டிய வெளிச்சம்
விரகப் பிரளயம்
மழையென்று
குடைபிடித்து மறைக்கின்றோம்
பொழிந்த கவிதை
நாதியற்று
நதியாகிக் கலக்கிறது கடலை
நதியும் கடலும்
காணும் கனவைக்
கவிதையாக்க முடிவதில்லை எவராலும் ...
#கடல்தினம்
.
என்னோடு உறங்கிய நிழல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கின் ஆதி வெளிச்சத்தை
துயிலெழுப்ப இருளின் நுனிக் கிளையொன்றில் விழித்திருந்த கடைவாயின் எச்சில் ஒழுகிய
முத்தமொன்றை அம்பென எய்கிறது ஆற்றாமை
இன்னும் விடியாத
வெறும் படுக்கையின்
கடைசி விளிம்பு வரை துலாவும்
கனவின் பெருவிரல்கள்
பிரபஞ்சக் கற்பனையில்
அலைந்த அதிகாலைக் கனவு
கட்டி இழுத்து வருகிறது
ஆடை களைந்த
உன் பெருவெளியை
கனவின் தேகமெங்கும்
நெடிதுயரும் பேரலை
மோதிச் சிதறுகிறது
பேரன்பின் பாறைகளில்
தெறித்து வீழும் திவளைகளில்
துடிக்கும் தினவின் குஞ்சுகள்
கனவின் பேரலை முகடுகளுக்கு
மேலே கழுகெனப்
பறந்துகொண்டிருந்தது
உந்தன் நினைவுகள
நன்றன்று பிரித்து எழதுக
.
நீ வரையத் துவங்கினாய்
உன்னைப் பிரிய
மனமின்றியே
குழம்பிக் கிடக்கிறது
கோலமும்
குவிந்த உன் விரலிடை
பட்டகமாக
ஒரு
நிறப்பிரிகையே நடக்கிறது
நீண்ட நேரமாய்
உனக்கும்
கோலத்துக்குமிடையே
நடக்கும்
வண்ணங்களின்
பரிமாற்றத்தை
வளைந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
வானவிில்
உன்னைப்பற்றி
எழுதத் துவங்கிய
கவிதை ஒன்றின்
எழுத்துக்களெல்லாம்
தலைகீழாய்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
வவ்வால்களைப் போல்
குனிந்து
கோலம் போடும
உன் முகம் தரிசித்து
வார்த்தைகளாய்
சாப விமோசனம் பெற
நீ தேவதை என்று
நான்
எழுதத் துவங்கிய
கவிதை ஒன்றிற்காய்
படபடத்த
உன் இமை கண்டு
சிறகு முளைக்கிறது
கவிதைக்கும்