மழை
.
.
கனவைக் கவிதையாக்க
முடிவதில்லை
மரங்களின் மூடியைத்
திறக்காமலேயே
மையை ஊற்றுகிறது
வானம்
கால்களில்
சதங்கை ஜதிக்க
ஓடையில ஓடும்
வார்த்தைகள்
சகதியோடு சலித்தெடுத்து
சமுத்திரம் விரையும்
பரல் குமிழ்கள்
மழை முத்தங்கள்
மழைத் தூவன்
மையலின் நிறம்
சாரலென்று சன்னலைச்
சாத்துகிறோம்
தாபம் விஞ்சும் மரங்கள்
வேர் கிளைத்த நிர்வாணம்
வெட்டிய வெளிச்சம்
விரகப் பிரளயம்
மழையென்று
குடைபிடித்து மறைக்கின்றோம்
பொழிந்த கவிதை
நாதியற்று
நதியாகிக் கலக்கிறது கடலை
நதியும் கடலும்
காணும் கனவைக்
கவிதையாக்க முடிவதில்லை எவராலும் ...
#கடல்தினம்