காதல் மழை

.
.
மேகங்களில்லாது
வெட்டவெளிச்சமாய்
பளிச்சென்றிருந்தது
உன் கண்கள்

வார்த்தைப்
பரிமாற்றமில்லாதொரு
பேரமைதி நமக்குள்
நாம்

பருவநிலையோடு
உன்னை
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்

மெல்ல உடைத்தேன்
மௌனத் தாள்ப்பாளை ,..

அந்த வானுக்கும்
நமக்கும்தான்
எத்தனை ஒற்றுமை
பார்த்தாயா ...

மேகங்களை
உடுத்தியிருக்கும்போது மட்டும் வியர்த்துக்
கொட்டிவிடுகிறது
வானமும்
என்றேன் .

உன்
இதழ்க்கோடியில்
சின்னதாய் ஒரு
மின்னல் கீற்று

சட்டென்று மாறுகிறது
நம் வானிலை

பெய்கிறது
இடியுடன் கூடிய
கனமழை ....⛈️

எழுதியவர் : முகிலன் (11-Jun-21, 12:57 pm)
சேர்த்தது : முகிலன்
Tanglish : kaadhal mazhai
பார்வை : 105

மேலே