வித்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வித்யா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  17-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Jun-2015
பார்த்தவர்கள்:  323
புள்ளி:  306

என் படைப்புகள்
வித்யா செய்திகள்
வித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2018 2:56 pm

பருந்தின் கண்களுக்கு தப்பிப் பிழைத்த
பறவையொன்று சிறு நிழலில் கண்ணயர்கிறது...
உச்சி வானில் சிறகடிக்கும் பருந்தின் பார்வைக்கு
தற்போது புலப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில்
சிறகுகளை அணைத்தவாறு உறங்குகிறது அப்பறவை...
எனினும் இந்த நிழல்...
நிழல் பாதுகாப்பானதா..
பசிக்கு திருடி பாறையின் பின்னால் ஒளிந்தவனை
பல நேரங்களில் காட்டிக்கொடுப்பது இந்த நிழல்தானே...
முன்னாளில் நிழல் போல் நின்றவர்கள் பின்னாளில்
துரோகம் இழைத்த வரலாறு பலவுண்டு...
அவற்றை இப்பறவை அறிந்திருக்குமா...
நீண்டு குறுகிய நிழலின் இப்பகுதி இயற்கையின் எப்பரப்பு..
வளைந்து விரிந்த நிழலின் இந்த பாகம் எந்த உயிரியினுடையது...
மயிர்

மேலும்

கவிதையில் துளி தத்துவம் உண்டு 24-May-2018 9:15 pm
நிழல்கள் நெருப்பாகலாம் நெஞ்சம் பொய் சொல்லுமா நகரும் பருந்து நிழலில் நகரா பறவை இளைப்பாறுமா ? 24-May-2018 4:39 pm
வித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2018 2:53 pm

பன்னிரு கைகளென..
கோர நகங்களென..
கோரைப் பற்களென..
கோபம் கொள்கிறது மனம்...
என்னை நானே ஆத்திரத்தின் உச்சியில் ஆழ்த்தி
பின் ஒடிந்து வீழ்கிறேன்...
உங்கள் வெறுப்பின் மீதொரு மேடை அமைத்து
ஆனந்த தாண்டவம் ஒன்றை அரங்கேற்ற
ஆசை எனக்கு...
உங்கள் நம்பிக்கைகள் எனக்கு
நம்பிக்கையற்று போன கணத்தில்...
உங்கள் வெறுப்பையோ..
உங்கள் ஆணவத்தையோ..
மோதி மிதித்துவிடும் துணிவிருக்கிறது எனக்கு...
நீங்கள் பரம்பரை பாரம்பரியம் கௌரவம் கலாச்சாரம் எனும்...
அடையாளம் பூண்டு வருகிறீர்கள்..
எனக்கு நம்பிக்கையில்லா வரலாறு ஒன்றை சொல்கிறீர்கள்...
உங்கள் கட்டுப்பாடுகளை சீர்வரிசையென
என் கையில் திணிக்கின்றீர்கள்...
நம்

மேலும்

நீங்கள் பரம்பரை பாரம்பரியம் கௌரவம் கலாச்சாரம் எனும்... அடையாளம் பூண்டு வருகிறீர்கள்.. எனக்கு நம்பிக்கையில்லா வரலாறு ஒன்றை சொல்கிறீர்கள்... --------உண்மையான வரிகள் தோழி.இங்கு அடையாளம் ஆண்,பெண் தவிர கௌரவத்தை ஏந்தி பலவற்றை கட்டாய படுத்தி திணிக்கப்பட்டே வருகிறது. 25-May-2018 1:55 pm
மிக நன்று... 24-May-2018 9:16 pm
வித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 4:58 pm

இப்போதெல்லாம் என் உடலில் ஒரு பிணத்தின் வாடை அடிக்கிறது உங்களுக்கு தெரியுமா..
ஆம்.. என் உடலில் ஒரு பிணம்
இருக்கிறது..
கால்கள் மண்டியிட்டு
கைகள் கூப்பி மன்னிப்பு
கோரிய நோக்கில் மரணித்திருக்கிறது அது..
அதன் கசந்த மனம் சுமந்த வெம்மை இன்னும் என்னை தகிக்கிறது...
நான் கேட்க
துணியாத மன்னிப்பை ஒரு சிலுவையென
சுமந்த நொடியில் மரணம் நேர்ந்தது அதற்கு...

-வித்யா

மேலும்

அருமை 28-Feb-2018 4:21 pm
ஆழமான பார்வையில் செல்கிறது 28-Feb-2018 3:59 pm
மரணம் நிலையில்லை மீண்டும் பிறப்போம் ! கசப்பும் நிலையில்லை மீணடும் இனிப்போம் ! வாழ்த்துக்கள் ! 25-Feb-2018 6:28 pm
வித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2018 6:31 pm

நீங்கள் எமக்களித்த விதையது;
அதை சுதந்திரமென்றும் எமது அடையாளமென்றும்
மொழிந்தீர்கள்;
நீங்கள் அந்த விதையின்மேல் மழையென பொழிந்தீர்கள்;
அவ்விதை இன்று
துளிர்த்து,
கிளைத்து
விருட்சமென வேரூன்றி
விரிந்து நிற்கிறது...
இப்போது நீங்கள் அதன் கிளைகளை அகற்றி இலைகளை கத்தரித்து எல்லைகளை வரையறுத்து தருகிறீர்கள்...

மேலும்

வித்யா - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2017 10:13 pm

சிந்து நதிக் கரைகளில்- சில
நாகரீகம் வளர்த்த வரலாறுண்டு.;
கதிர் விளைந்த காடுகளில்- பல
காலங்கள் வாழ்ந்த பழமையுண்டு;
வண்டல் மண் படிவுகளில்-பொன்
வார்த்து மகிழ்ந்த மழலையுண்டு;
தேனாறும் பாலாறும் போகும் பாதையில்
வேற்றுமையில் ஒற்றுமை படித்ததுண்டு;

திங்களோடு தவழயிலே கன்னிநதி;
மஞ்சள் குழைத்து போகையிலே மங்கை நதி;
பொன்னை வார்த்த சாயலிலே பெண்ணின் நதி;
தென்றலோடு நினைவுகள் தவழ்ந்ததுண்டு;

நதிக்கரைகளின் வளைவுகளில்
கார்முகில்களின் நெளிவுகளில்
இருஉருவங்கள் பார்த்த மோகமுண்டு;

விவசாயம் பொய்க்கும் காலங்களில்-விழும்
பண்பாட்டின் சாயல் நீரிலுண்டு;
மருதம் வளர்த்த மங்கையின் மேனியில்
இரசாயன விழுப்

மேலும்

இதுக்கு கிடைக்காம போச்சா... நல்ல இருக்கன்... நீங்க எப்படி? 06-Mar-2017 1:37 pm
அங்கு படைத்ததுதான் நண்பரே...Heavy காம்பெடிஷன் How r u 21-Feb-2017 9:05 pm
நீண்ட இடைவேளையின் பின் உமது கவியை நுகருகிறேன். அடடா அருமை. முகப் புத்தகத்தில் ஒரு போட்டி நடந்தது தலைப்பு "நதிக் கரை ஞாபகங்கள்". இக்கவியை அங்கு டைத்திருந்தால். வெற்றி உமக்கல்லவா... 21-Feb-2017 4:23 pm
வித்யா - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2016 12:16 pm

இறக்கைகள் காற்றில் எரிவதாய்

சில நேரங்களில் உணர்ந்திருக்கக்

கூடும்...

யாரோ ஏற்றி வைத்த வெக்கை தீயில்

உருகி உடலில் ஊறும் மெழுகுகளாய்

ஊர்ந்திருந்தன அவற்றின்

வியர்வைகள்...

பசியில் வாடும்

சிறுவனின் துடுப்பசைப்பாய்

அசைந்திருந்தன அவற்றின்

சிறகுககள்...

தாகங்களின் தேக்கங்கள்..

கரகரக்கும் குரலசைப்பு..

ஏக்கங்கள் சுமந்து பறந்திருந்தன...

அப்பாலை வெளியும்..

வாழ்வின் வெளியும்..

வெற்றிடமாய் தெரிந்தது அவற்றிற்கு...

இளைப்பாற மரமும்

இறக்கை சாய கிளையும்

குரல் நனைக்க நீருமற்ற

கானல் நீர் வரப்பது...

கால் வைக்கும் இடங்களில்

வெம்மை வழிந்திருந

மேலும்

உண்மையான வரிகள்..... 15-Aug-2016 6:43 am
நன்றி...! 14-Aug-2016 6:29 pm
உணர்வுபூர்வமான சிந்தனை! நம்பிக்கைதான் வாழ்க்கை! வாழ்த்துக்கள். 14-Aug-2016 4:21 pm
வித்யா - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 1:43 pm

மழைக்கூந்தலும் தரைதழுவிட
பிழைபேச்சிலே அகமகிழ்ந்திட
யவ்வனமிகு ஏந்திழையவள்
செவ்வண்ணமே சூடிநின்றனள்...!
மறுவுலகந் தனிலவளுடன்
குறுநகையுடன் நானிருப்பதாய்
காட்சியதுவும் எனைசாய்க்குதே
மீட்சிநினைவே பொல்லாததோ...!
காதலின்பமே கண்ணிரண்டிலும்
காதலெண்ணமே காளைநெஞ்சிலும்
இணக்கமுண்டடி இதயத்திலே
பிணக்கமேயடி ஊர்புறத்திலே...!
புனைந்திட்டதோர் காதலுக்கென
அணைத்திடுவரோ ஆவியினையே
புறஞ்சொலாமலே புலம்பிநாமுமே
இறக்குமட்டுமே வாழ்வோமடி..!
கனங்களோடிரு
கண்கள் தேயக் காத்திரு
தண்ணிலா தனிலே குளிர்வோம் நாமே..!

-குறளடி வஞ்சிப்பா

மேலும்

நன்றி தோழா... 15-May-2016 8:14 pm
வித்யா - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 1:31 pm

என்னவளின் பாத சுவடுகள்
எப்போதும் அலங்கரிக்கின்றன
என் வாசலை...

சாரலடித்து ஓய்ந்திருந்த
ஈர நிலப்பரப்பொன்றில்
பதித்து போயிருந்தாள்
என்னவள் தன் பாத சுவடுகளை
என் வாசல் வழியே...

அவ்வப்போது காதல் சுமக்கும்
என் கார்மேகத்தின் மழைத்துளிகள்
நனைத்து போகின்றன
என்னவளின் பாத சுவடுகளை...

அவ்வப்போது பூக்கள் அள்ளி
போர்த்துகிறேன், அவ்வப்போது
கூடி மகிழ்கிறேன், அவ்வப்போது பேசி சிரிக்கிறேன் என்னவளின்
பாத சுவடுகளோடு...

மௌனங்களால் ஜாடை பேசி
என்னை ஈர்த்திருந்தவள்
மௌனமாய் பிரிந்து போயிருந்தாள்
என்றோ என்னிடருந்து...
எனினும் அவளின் பாத சுவடுகளை மட்டும்
எந்த மழையும

மேலும்

நன்றி ஐயா...தங்கள் வரவில் மகிழ்ச்சி... 15-May-2016 8:13 pm
நன்றி சர்பான்... 15-May-2016 8:12 pm
காதல் சொர்கத்திற்கு இட்டுச் செல்லும் இனிய பாதச் சுவடுகள் . மௌனமாய் பிரிந்து போயிருந்தாள் என்றோ என்னிடருந்து... எனினும் அவளின் பாத சுவடுகளை மட்டும் எந்த மழையும் பிரித்திருக்கவில்லை என்னிடமிருந்து... ----அழகிய வரிகள் அன்புடன், காதல் கவி ரசிகன் கவின் சாரலன் 11-May-2016 10:02 am
அழகான நினைவுகளை மறவாத தருணங்கள் காதல் ஓர் அழகான நினைவுகளை சேர்க்கும் பொக்கிஷம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 9:54 am
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) Shyamala Rajasekar மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Sep-2014 10:13 pm

சமுதாயச் சீர்கேட்டைச் சாடிடுவார்; நெஞ்சங்
குமுறியே தீயாய்க் கொதிப்பார்; - அமுதாம்
தமிழை மதித்திடுவார்; தாயை வணங்கி
நிமிர்வா யுரைப்பார் நயந்து .

அயர்வின்றிப் பாபுனைவார்; அன்பாய்ப் பகிர்வார்;
தயவாய்க் கருத்துரைப்பார் தாயாய் ! -நயமாய்ப்
பலகவிகள் பாங்காய்ப் படைப்பா ரவரை
நலம்வாழ வாழ்த்துவோம் நாம் .

பழமையைப் போற்றுவார்; பண்பாய் நடப்பார்;
அழகியலும் பாடுவார்,நம் அன்பர் ! -பழகும்
குணத்திற் சிறந்தவர் கொள்கையில் கோமான்
வணங்கிடும் வண்ணம் வியப்பு .

பொதுநலமே தன்னலமாய்ப் போற்றுங் குணாளா
புதுமையாய்ப் பாக்கள் படைத்தாய் - விதுலனே !
கற்கண்டு சொற்கொண்டு காதலையும் பாடினாய்
நற்கவி நாயக

மேலும்

மிக்க நன்றி !! 05-Oct-2014 8:55 pm
சிறப்பு பெற வாழ்த்துகிறேன். 03-Oct-2014 11:23 am
மிகவும் நன்றி குமரா ! 30-Sep-2014 10:38 pm
வாழ்த்துக்களை சுமந்து வந்த வெண்பாக்கள் சிறப்பு அன்னையே 30-Sep-2014 9:58 pm
வித்யா - முஹம்மது பர்ஸான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2016 9:40 pm

அது ஒரு ராக்கால பயணம்
தரை விட்டு மலை ஏறி
தரை இறங்கும் பயணம்...

பேருந்தில் உட்கார்ந்து
என் வாழ்வை நான் எண்ண
என்னைக் கேளாமல் - என் விழியிரண்டும் துயில் கொள்ள
பயணத்தின் அரைவாசி
கடந்ததுவும் தெரியவில்லை!

மலை மீது ஏற ஏற
சில்லென்ற பனிக்காற்று
சீண்டியது என்னை
சாளரத்தை திறந்து கொண்டு
என் விழி மெல்லப் பாய்கையிலே
ஆஹா! தரை மீது
எத்தனை தாரகைகள்!

நான் இருப்பது
பூமியா... விண்வெளியா...

அவை தொலைதூர
மின் விளக்குகள் - அடடா!
அத்தனையும் தாரகைகள்...
***

மேலும்

நன்றி நண்பா... 04-Apr-2016 6:58 am
எண்ணங்களும் நிகழ்வுகளும் என்றும் வெளியீடுகள் தான் மனிதனின் வாழ்க்கையில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2016 1:06 am
நன்றி நட்பே 03-Apr-2016 7:06 am
Migavum arumai 02-Apr-2016 11:40 pm
நித்யஸ்ரீ சரவணன் அளித்த படைப்பை (public) முஹம்மது பர்ஸான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Mar-2016 11:51 pm

என்னவனின் சுவாசம்
என உணர்ந்தேன்
அவன் நேசம் அறிந்த போது.....

என்னவன் என்னை
கடந்து செல்கையில்
வீசிச் செல்லும்
பார்வையில் விழுந்தேன்
அவன் காதலில் மூழ்கினேன்....!

அவன் என்னை நெருங்குகையில்
என் சுவாசம் தடைபடுகின்றது
இதயம் இருமடங்காய்
துடிக்கின்றது....!

அவன் அருகாமை
என்னுள் பல வேதியியல்
மாற்றத்தை ஏற்படுத்துகின்றது....
இருந்தும்
மனம் அதையே எதிர்பார்க்கின்றது....!

நேசம் கொண்ட மனதிற்கு
தெரியவில்லை
இருவரும் வேறுவேறு ஜாதி என்று....

நேசம் கைகூடுமா....
இரு உயிர் ஓருயிராகுமா...
அல்ல
இரு உடலோடு பல உயிர் போகுமா...
தெரியவில்லை...!

நேசம் கொண்ட மனம் ஏங்குகின்றது
இணைவதற்கு..

மேலும்

அழகான வரிகள் நித்யஸ்ரீ. 01-Apr-2016 5:04 pm
நன்றி...! 01-Apr-2016 3:33 pm
உண்மை தான்.... வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி...! 01-Apr-2016 3:33 pm
நன்றி...! 01-Apr-2016 3:31 pm
கவிஜி அளித்த படைப்பை (public) சுஜய் ரகு மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Mar-2016 5:23 pm

கத்திக்கு தெரியவில்லை
புத்திக்குமா....
காதலைத்தானே நீட்டினார்கள்
கழுத்தறுத்ததில் என்ன நீதி...
கண்ட கனவையெல்லாம்
ரத்தமாக்கிட
முடிகிற உங்களால் நீங்கள்
சுத்தமானவர்களென்று
நிரூபிக்க முடியுமா...
உட்கார்ந்து பேச அத்தனை
ஞானம் இருக்கும்
என் தேசத்தில்
இன்னும் ஆத்திரக்கார
அடிமுட்டாள்கள் அவமானம்...
சப்பாத்தி சுட்டு பார்சல்
அனுப்பிய அன்பும்
அரவணைப்பும் எங்கே...
அத்தனையும் விளம்பரமென்று
சொல்லி விட்டது உங்கள்
பட்டப்பகல்
பகிரங்க பந்தையம்...
ஆண்மை தவறேல்
இதுவா....மீசை பூனைக்கும்
உண்டே...
ஆதிக்க வெறியின்
சாதனைக்கு பலிகடாக்கள்
பிஞ்சுகளா....அதே நேரம்
பிணங்களைப் போல

மேலும்

உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வரவில்லை.... முட்டாள்களே உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்... இது எத்தனை பெற்றோர் உணர்கிறார்கள்.பெற்றோம் என்ற பெயரில் பித்தனாக்குகிறார்கள்.மிக சிறப்பு சிந்திக்க வைக்கட்டம் பலரை அண்ணா. 23-Mar-2016 10:08 pm
செப்பனிட்டால் நலமே தோழர்...நன்றி.... 21-Mar-2016 10:20 pm
டியர்....... நீ தாண்டா இந்த மண்ணுக்கு வேணும்.... உன்ன மாதிரி பத்து பேர் இருந்தால் விவேகானந்தர் கூறியது நடந்து விடும்.... 21-Mar-2016 10:19 pm
கண்டிப்பாக தோழர்.... எல்லாரும் ஒன்னுன்னு எல்லாரும் நினைக்கணும்...ஒத்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகறத விட்டு...... ம்ம்ம்.... நல்லதே நடக்க வேண்டும்.... 21-Mar-2016 10:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (86)

user photo

யோகபாலாஜி க

அலங்காநல்லூர்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (96)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (87)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
நவின்

நவின்

நாகர்கோவில்
மேலே