என்னவளின் பாத சுவடுகள்

என்னவளின் பாத சுவடுகள்
எப்போதும் அலங்கரிக்கின்றன
என் வாசலை...

சாரலடித்து ஓய்ந்திருந்த
ஈர நிலப்பரப்பொன்றில்
பதித்து போயிருந்தாள்
என்னவள் தன் பாத சுவடுகளை
என் வாசல் வழியே...

அவ்வப்போது காதல் சுமக்கும்
என் கார்மேகத்தின் மழைத்துளிகள்
நனைத்து போகின்றன
என்னவளின் பாத சுவடுகளை...

அவ்வப்போது பூக்கள் அள்ளி
போர்த்துகிறேன், அவ்வப்போது
கூடி மகிழ்கிறேன், அவ்வப்போது பேசி சிரிக்கிறேன் என்னவளின்
பாத சுவடுகளோடு...

மௌனங்களால் ஜாடை பேசி
என்னை ஈர்த்திருந்தவள்
மௌனமாய் பிரிந்து போயிருந்தாள்
என்றோ என்னிடருந்து...
எனினும் அவளின் பாத சுவடுகளை மட்டும்
எந்த மழையும் பிரித்திருக்கவில்லை என்னிடமிருந்து...

தளர்ந்து போன என் முதுமையின்
கைவிரல்கள் ஏதோ ஓர் பொழுதில்
இன்றும் தடவிப்பார்த்து சிரிக்கின்றன
என்னவளின் பாத சுவடுகளை...

எழுதியவர் : (10-May-16, 1:31 pm)
பார்வை : 356

மேலே