கொக்கி சிவத்தினில் தொங்கும் வரைசிவம்

கொக்கி சிவத்தினில் தொங்கும் வரைசிவம்
கொக்கி யதுநீங் கிடின்சிவ மும்சவம்
மக்கிநீ மண்ணோடு மண்ணா கிடும்முன்னே
சொக்கனை சொக்கியைநீ பாடு

பொருட் குறிப்புகள் :--

சிவம் என்ற பெயர்ச் சொல்லில் கொக்கியை
நீக்கினால் ( சி ச ) சிவம் சவம் என்றாகும் .
அதுபோல் உடலோடு பற்றி தொங்கிடும்
இந்த உயிர்ஆன்மா நீங்கிடின் உடலும் சவமாகும் .

உடலொடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் போது
உன்னையே அன்னை என்பேன் ஓடிவந்தே
என்பர் அபிராமிப் பட்டர்

சொக்கி சொக்கன் --மதுரை மீனாட்சி சுந்தரன் .

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-25, 8:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 7

சிறந்த கவிதைகள்

மேலே