கேசவன் புருசோத்தமன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கேசவன் புருசோத்தமன் |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 18-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 779 |
புள்ளி | : 153 |
கேசவன் புருசோத்தமன்.
தமிழ் ஆர்வம் கொண்ட தனிமை விரும்பி .
சிறு வயது முதல் தனக்குள் கேட்டக் குரலை இனியேனும் வெளிக்கொணர எண்ணி எழுத்தை நாடி இங்கு .
https://www.facebook.com/kesavan.purusoth
மை விழி பார்வைகள்
போதும் என்றான்,
மணமாலைகள்
கொண்டு வந்தான்.
மணமேடையில்
மறுகணம் வீற்றிருந்தான்,
மங்கையின் வருகைக்கு
காத்திருந்தான்.
மங்கள ஒலிதனை
கேட்டு எழுந்தான்
காலை கனவாக
மனம் வெந்தான்.
ஒரு கதிராய்
இருந்த என்னை
பல பயிராக
மாற்றியது ,
பட்ட சூடும்
தாங்கிய அடியும்
வீசி எறிந்த விசையும்
மூடிப் புதைத்த மண்ணும்
மூச்சடைத்த நீரும்
முத்தம் கொடுத்த
புது ஒளியும் தான்.
தினம் உதிக்கும் கதிர் ஒளியில்
பட்டு வளர்த்தாலும்
ஒருநாள் உதிர்ந்து உதைபட்டு
விதையாய் புதைந்து
உரிய காலம் கட்டு
மீட்டு வந்தால் தான்
உயிர்கள் இங்கு
பிறவிப் பலன் காணும்.
ஒவ்வொரு நாளும்
கதிராய் வளர்ந்து
அனுபவ அடிகள் பட்டு
விதையாய் உதிர்ந்து உறங்கி
பயிராய் தளிர
கதிரவன் ஒளிக்கு
காத்திருப்போம்.
ஒருவன் மட்டும்
வாழ்ந்த உலகில்
உன்னை இன்று பார்க்கிறேன்!
இன்று என்னை இழந்த
அந்த உலகமும்
உன்னை சுற்ற வேர்க்கிறேன்!
எங்கோ தொலைந்த
எந்தன் முகத்தில்
உன்னால் தானே
என் விரல்!
என் கண்கள் மூடி
மூச்சும் முட்ட
களைந்த முடியை
நெற்றிக் கோதி
நேராய் நின்று
என் விண்ணை
இன்று பார்க்கிறேன்.
எந்தன் உலகின் முதல் நிலவே!
முதல்முறை என் வானில்
நீ ஒளி தந்தாய்.
உன்னால் இன்று
என்னை மறந்து
நான் ஒருவன் மட்டும்
வாழ்ந்த என் உலகில்
உன்னை இன்று பார்க்கிறேன்.
இனி சுற்றும் உலகம் நிற்கும் போதும்
உன்னை சுற்றி திரிவேனோ!
நீ உன்னை தந்து என்னை வென்றால்
ஒன்றாய் நானும் கரைவேனோ!
முத்தம் வேண்ட
ஆற்றங்கரை மரத்தடி நிழலில் ஆட்டு தின்ற அருகம்புல் தரையில் அவள் மடியில் நான் அமர்ந்து கேட்ட அன்புணவு கதைகள் இன்று அவள் குரலில் கேட்கிறதே.காலணிகள் காண காலில் கற்துகள்கள் ஒட்டி வலிந்தால் நான் துள்ள துடித்து அழும் அவளது விழியின் திரைநீர்ப்பார்வை முகதருகில் வருகிறதே.உலகம் மொத்தம் உடனே மறந்து உன் அணைப்பில் நானும் தூங்க நெற்றிமுடி வேர்வை துடைக்கும் உன் மூச்சு காற்றின் பரிசம் தன்னை இன்று என்னை மோதும் தென்றல் தந்து என் துகில் கலைத்து செல்கிறதே.கருவறையில் உன் கனவுகள் மொழியில் நான் கண்ட உலகம் யாவும் என் வாழ்நாளில் எனக்கு கிடைக்க உன் வாழ்வையே எனக்கு தந்து நீ வென்றாயே என் தாயே.உன் மடியில் மீண்டும் உறங்கும்
அழகாய் இருக்கிறாய் !
பயமாய் இருக்கிறது !!
காதல் கவிதை.
அறிவாய் இருக்கிறாய் !
பயமாய் இருக்கிறது !!
கல்விக் கவிதை.
கண்டவரெல்லாம் கவிபாட
நான் மட்டும் நடனமாடுகிறேன்
மனதிற்குள்.
வேகம் குறையாமல்
ஒலிக்கிறது
கடிவாங்காமல் கள்ளன்.
முண்டாசு கவிஞனே!
முத்தமிழ் அறிஞனே!
வண்டுக்கும் மலர் என்றாய்
தண்டுக்கும் மலர் என்றாய்
கடலில் ஆடும் அலையே!!
பாரதி பாடல் கேட்டாயோ?
மனையில் மணக்கும் துளசியே!!
காற்று உனக்கு மேவும் விரலா?
புதுமையில் தமிழ் பிறந்தது
அதில் உனக்கு ஓர் நீராட்டு
பொதிகையில் வீசும் காற்றே!!
பாற்கடலில் பாரதிக்கு நாவாட்டு.
கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.
வானுக்கு மேகம் என்றால் அழகு
தமிழுக்கு பாரதி என்றால் பேரழகு
எனக்கும் வேண்டும் அமுதம்
பாடவா அந்தியில் பாஞ்சாலி சபதம்
பச்சைக்கிளிகள் மடி தூங்க
கிளைக்குள் கேட்குது குயில் பாட்டு
காலை பனியில் குளிக்கும்
(அபியும் நானும் திரைப்படத்திலுள்ள வா..வா..என் தேவதையே!! பொன் வாய் பேசும் தாரகையே! என்ற பாடல் ராகத்தில்)
(சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...)2
பால் மணக்கும்..தேகத்திற்கு..
வெண் நிலவால் உடை இடவா
செல் கரைக்கு...புன்னகைக்கு...
என் உயிரால் மொய் இடவா
சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...
அன்பு மகள் மழலை போல்
அந்த பூக்களுக்கும் மொழிகள் தெரியவில்லை
சின்ன மகள்..பார்வை போல்
அந்த தாரகைக்கும் மின்னிட புரியவில்லை
என் கைகள் போட்டு வைத்த நொடியைப்போல
எந்தன்,வாழ்க்கையில் பரிசு
கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்ததும்
முகநூளில் வள்ளுவன் குறித்து சில வரிகளை பதித்திருந்தேன் .
ஐயா !!
உன்னால் உயர்ந்தது பெருமை
உமது குடிக்கும் அந்த குடிகொண்ட
நாட்டிற்கும் .
உமது கவியை காலங்கள் கடந்தும் முழுதும் உணர முயன்று வருகிறது இவ்வுலகம் .
அத்தகைய உமது வழிவந்த குழந்தைகள் நாங்கள்
உன் போல் உலகம் போற்ற கவி படைக்க முடியாது போனது வருத்தம் என்றால் .
அதை விட கொடிய வருத்தம் உன் போல் அழகாய் சம்மணக்காலிட்டு ஒழுங்காய்
உட்கார கூட முடியவில்லையே ..
முயன்றவர் யாரோ முடியாது என்று உணர்ந்து உன்னையும் இப்படி நிற்க வைத்து விட்டார்களே ...
நடுக்கடலில் .
என்று
நானும் அப்படிதான் ..
சிறுவயது முதல் நான் பேசி பழகிவரும் என் நண்பனை என் நம்பிக்கையை எனக்கு எதிரே ஒருவன் தவறாக சித்தரிப்பதும் , தவறாக பயன்படுத்துவதும் இவறிற்கெல்லாம் மேலாய் ஒருவன் தான் தான் அவன் என்பதும் என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவை. அதை எதிர்த்தால் நானும் நாத்திகவாதி என்று பொருளில்லா பெயர் சூட்டுகிறார்கள். மூடர்கள். இல்லை அரக்கர்கள்.
கடவுள் குறித்த எனது பார்வை.
நாத்திகம் என்றொரு மதம் தொடங்கி அரசியல் செய்பவர்களே.. நான் உங்களோடும் சேரவில்லை.
நான் ஒரு செல்லா ஓட்டு தான். (...)
காலையில் கண்கள் விழித்தும்
கதிரவன் ஒளியில்லை
சுடுகிறான் சூரியன் மட்டும் !! .
எங்கே என் தோழன் !
அருகில் தொட்டேன்
அவனும் எழுந்தான் !! .
புதிதாக பறித்த பூக்களின் வாசம்
பனி போனபின் பாதைகழிவுகளின்
படுநாற்றம் !!.
இரண்டும் மறைந்தன !
இரண்டு நிமிடங்களில் .
இனி என்
இந்நாள் தொடக்கம் .
படுக்கையை துடைத்து
பையில் போட்டேன் !
காலணியும் காலடியில் .
நடந்தான் நண்பன் !
தொடர்ந்தேன் நானும் .
சீண்டும் சிறுநீர்மல வாடை !
ஈரமில்லா இடத்தில் இட்டேன் !
நானும் கொடை .
குடங்களின் குத்துச்சண்டை !
குழாய் அடியில்
குடிக்க தண்ணீர் .
பல்லும் மேலும்
பட்டன சுத்தம் .
கேட்டது வ