பாடல் -முஹம்மத் ஸர்பான்

(அபியும் நானும் திரைப்படத்திலுள்ள வா..வா..என் தேவதையே!! பொன் வாய் பேசும் தாரகையே! என்ற பாடல் ராகத்தில்)

(சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...)2

பால் மணக்கும்..தேகத்திற்கு..
வெண் நிலவால் உடை இடவா
செல் கரைக்கு...புன்னகைக்கு...
என் உயிரால் மொய் இடவா

சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...

அன்பு மகள் மழலை போல்
அந்த பூக்களுக்கும் மொழிகள் தெரியவில்லை
சின்ன மகள்..பார்வை போல்
அந்த தாரகைக்கும் மின்னிட புரியவில்லை
என் கைகள் போட்டு வைத்த நொடியைப்போல
எந்தன்,வாழ்க்கையில் பரிசுகள் கிடைத்ததில்லை
வித்துக்கள் முளைக்கின்ற அழுகை போல
தூர,தேசத்தில் மழைகளும் பொழிந்ததில்லை.
நெஞ்சத்தில் சின்னக்கரு வளர்ந்ததுமா
என் பிள்ளையை உயிரோடு விதைக்கையிலே

சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...

நெஞ்சக் குழி உதிரம் மேல்
என் பிள்ளைக்கு உயில் கவி எழுதி வைத்தேன்
மயிலிறகு மெத்தையின் மேல்
என் தாய் முகம் அவளில் கண்டு கொண்டேன்.
தொட்டில் கட்டி அவள் மிதக்கும் போது
ரோஜா.,தண்டொன்று கைகளில் வளரக்கண்டேன்.
நெஞ்சத்தின் பாட்டுக் கட்டி அழைத்த போது
புது,வேதம் எழுதக் கற்றுக்கொண்டேன்.
காலத்தால் தந்தை நெஞ்சு நொந்ததுமா....
என்.,பிள்ளையை வரம் கேட்டதினால்,

சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...

பால் மணக்கும்..தேகத்திற்கு..
வெண் நிலவால் உடை இடவா
செல் கரைக்கு...புன்னகைக்கு...
என் உயிரால் மொய் இடவா

சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Oct-15, 11:30 am)
பார்வை : 188

மேலே