பெருகிடுமே

பெருகிடுமே...!

இயற்கை தரு -
இசைமுரசின்...
இலைக்கரத்தே -
இழைந்து உதிரும்...

பனியமுதை -
பருகுமுயிர்...
பல்கி பெருகி
பல்வூக்கம் -
பயத்தல் போல...

மனிதகுலம்
புல் பூண்டு
செடி கொடி
விருட்சமென..
தாவரசங்கமத்தே
சங்கமிக்க...
சங்கடம் விலகிடுமே...
சந்தோஷம்
பெருகிடுமே...!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (24-Oct-15, 11:06 am)
பார்வை : 77

மேலே