இராக உதய சூரியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராக உதய சூரியன்
இடம்:  சின்னசேலம் .
பிறந்த தேதி :  09-Jul-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jan-2015
பார்த்தவர்கள்:  675
புள்ளி:  140

என்னைப் பற்றி...

ஆசிரியர் பணி....
படித்தல்...கவிதைகள் வாசித்தல்...எழுதுதல்...
தனிமையை நேசித்தல்.,
நண்பர்களுடன் அளாவுதல் ...

என் படைப்புகள்
இராக உதய சூரியன் செய்திகள்
இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 10:51 pm

மனித ருக்குத் தோழனாய்..!

சுட்டி..! சுட்டி..! நாய்க் குட்டி
     சூட்டிகை யான நாய்க் குட்டி..!
குட்டிக் குட்டி நாய்க் குட்டி
     கும்மாளம் போடும் நாய்க் குட்டி..!
கட்டிப் போட்டால் கத்தியே
     கதிகலங் கடிக்கும் நாய்க் குட்டி..!
எட்டிப் போனால் காலினை
      சுற்றி வருமே நாய்க் குட்டி..!

நன்றி காட்ட நம்மவரை தன்
     நாவால் நக்கும் நாய்க் குட்டி..!
அன்றிலை போல் நமை யண்டி
     அன்பை பொழியும் நாய்க் குட்டி..!
மன்றம் வீசும் தென்ற லென
      மகிழ்ச்சி யூட்டும் நாய்க் குட்டி..!
கன்றைத் தேடும் தாயென நம்
      வருகைக் கேங்கும்  நாய்க் குட்டி..!

நாட்டைக் காக்கும் வீரனாய்
      வீ

மேலும்

நன்றி...! தோழமையே...! 30-Mar-2018 10:34 am
நன்றியுள்ள மிருகத்தை பற்றி யதார்த்தமாக எழுதப்பட்ட எண்ணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:23 am
இராக உதய சூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 10:51 pm

மனித ருக்குத் தோழனாய்..!

சுட்டி..! சுட்டி..! நாய்க் குட்டி
     சூட்டிகை யான நாய்க் குட்டி..!
குட்டிக் குட்டி நாய்க் குட்டி
     கும்மாளம் போடும் நாய்க் குட்டி..!
கட்டிப் போட்டால் கத்தியே
     கதிகலங் கடிக்கும் நாய்க் குட்டி..!
எட்டிப் போனால் காலினை
      சுற்றி வருமே நாய்க் குட்டி..!

நன்றி காட்ட நம்மவரை தன்
     நாவால் நக்கும் நாய்க் குட்டி..!
அன்றிலை போல் நமை யண்டி
     அன்பை பொழியும் நாய்க் குட்டி..!
மன்றம் வீசும் தென்ற லென
      மகிழ்ச்சி யூட்டும் நாய்க் குட்டி..!
கன்றைத் தேடும் தாயென நம்
      வருகைக் கேங்கும்  நாய்க் குட்டி..!

நாட்டைக் காக்கும் வீரனாய்
      வீ

மேலும்

நன்றி...! தோழமையே...! 30-Mar-2018 10:34 am
நன்றியுள்ள மிருகத்தை பற்றி யதார்த்தமாக எழுதப்பட்ட எண்ணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:23 am
இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2018 3:32 pm

நினைவின் நிஜமே...!

பன்னீர்
ரோஜா
அழகே...!
பதுமைகள்
போற்றும்
எழிலே...!

பனியின்
குளுமை
சேர்த்து...
பழரசம்
வார்த்த
இதழே...!

பசுமை -
லயத்தில்
இனிய
பதங்கள்
சேர்க்கும்
படைப்பே...!

தளிரின்
இலைசீர்
கரத்தால்
தனியா
இன்பம்
தருந்தேன்
தருவே...!

மௌன
வெளியில்
மணத்தை
மகிழ்வாய்
விதைக்கும்
மொட்டே..!

போதை
தனக்கும்...
போதை
கொடுக்க...
பூத்த
விடியலின்
சொத்தே...!

அழகென
மெல்ல
அசைந்து
அசைந்து
ஆடிடும்
அதிசய
வரவே..!

முள்லென
வெல்லாம்...
நல்லனவாக
சில்லென
சிலிர்த்த
சிற்றிடை
வனமே...!

கனவின்
ஜரிகை
கலந்த..

மேலும்

பதிவிற்கு மிக்க நன்றி ஐய்யா...! 16-Mar-2018 10:33 pm
மிக அருமை...மிக அருமை...நண்பரே...இது குழந்தைக்கா, குமரிக்கா, வயதானவர்க்கா... அனைவருக்கும் அம்சமாக பொருத்தி போகிறது... 16-Mar-2018 4:19 pm
இராக உதய சூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2018 3:32 pm

நினைவின் நிஜமே...!

பன்னீர்
ரோஜா
அழகே...!
பதுமைகள்
போற்றும்
எழிலே...!

பனியின்
குளுமை
சேர்த்து...
பழரசம்
வார்த்த
இதழே...!

பசுமை -
லயத்தில்
இனிய
பதங்கள்
சேர்க்கும்
படைப்பே...!

தளிரின்
இலைசீர்
கரத்தால்
தனியா
இன்பம்
தருந்தேன்
தருவே...!

மௌன
வெளியில்
மணத்தை
மகிழ்வாய்
விதைக்கும்
மொட்டே..!

போதை
தனக்கும்...
போதை
கொடுக்க...
பூத்த
விடியலின்
சொத்தே...!

அழகென
மெல்ல
அசைந்து
அசைந்து
ஆடிடும்
அதிசய
வரவே..!

முள்லென
வெல்லாம்...
நல்லனவாக
சில்லென
சிலிர்த்த
சிற்றிடை
வனமே...!

கனவின்
ஜரிகை
கலந்த..

மேலும்

பதிவிற்கு மிக்க நன்றி ஐய்யா...! 16-Mar-2018 10:33 pm
மிக அருமை...மிக அருமை...நண்பரே...இது குழந்தைக்கா, குமரிக்கா, வயதானவர்க்கா... அனைவருக்கும் அம்சமாக பொருத்தி போகிறது... 16-Mar-2018 4:19 pm
இராக உதய சூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 3:15 am

உயிர்க் காதலே...!

கரையேது மில்லாக் கருணை யினாலே
உரைசெய்ய வாய்த்த உயர்செம் பொருளே!
நிறைவாய் நீள்விசும்பு நீர்த்துளி காற்றில்
மறைவாய் இலங்குதீ மண்ணுயிர்க் காதலே!

மண்ணுக்குள் மணியாக மருந்தாக, மனக்
கண்ணுக்குள் கருத்தாக கனிவாக, நெஞ்ச
எண்ணத்துள் எளிதாக புதிராக, உள்ளத்தின்
வண்ணத்தே எழுந்தேன் சுவைமிகுங் காதலே!

நீரோடும் சோலையதில் நிழல் கொடுத்தே
வேரோடு பரந்து விரிந்த பசுந் தருவுனதுத்
தாளோடு சேர்ந்தெழவே இயலா தயெனை
தயையோடு தழுவுகிற தனியாத காதலே!

யோகப் பிழம்பாகி யாக்கைத் தீயெழவே
போகப் பசியாற போசனம் செய்தொழிந்த
யாகப் பொருளான வேததிசை நான்கின்
தேகவரமாக பூத்தமலர் தாதுமென் காதலே!

மேலும்

இராக உதய சூரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2018 10:38 pm

துளியே...! துளிரே...!

மெளன –
அதிர்வின்...
மணித்திரள் முடிப்பே...!

இமைகளின்
பிரிவினில்...
இளகிடும் மதியே...!

வெண் –
விழி முகில்கள்...
விதைத்த மழையே...!

இதயம் வருடி
இறகுயென உகுந்த...
கண்ணீர் பூவே....!

அஞ்சன –
குயில்களின்
அமுத கானமே...!

நெஞ்சகம்
கோதி யோடிடும்
நெய்தல் தாரையே...!

உணர்வு
உறைய வூறும்
உணர்ச்சி துளியே...!

மானுட
தளிர்தன்
மாதவத் துளிரே...!

மேலும்

இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 6:31 am

அய்...யோ...!

தொங்கல் ஆரம் போல்
தொய் வாய் கவிழ்ந்த
பொய் யாம் கொம்பில்
கொய் யாக்கனி ஒன்று
ஒய்யா ரமாய் ஊடாடிவே...

கொய்யா இலை யுடலும்
கோவை நிறவா யலகும்
குன்றிமணி விழி பார்க்க
கொண்ட பசி யாறிடவே
கொய்ய அப்பழம் நாடி...

நொய்யுங் காம் பினிலே
வெண்ணை நழுவலென
அய்...யோ ! பையப் பையநீ
நடை பயிலும் பாங்குதான்
என்னே? பைங்கிளியே!

மேலும்

நன்றி அய்யா.... 26-Oct-2017 2:05 am
இரைப்பையின் பசியாற்ற ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையில் போராடுவதை இயற்கை கூட பேசும் படமாய் சாட்சி சொல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 12:13 am
சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) moorthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jul-2016 3:49 pm

தன்மீது
தனக்கிருக்கும்
ஆசைகள்
நிழலில் கூட
நிஜமாக்கி மகிழலாம்
நமக்கான வாழ்க்கை
நம்மிடமே என்ற
நம்பிக்கையில்,..!

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. நன்றி தோழமையே! 17-Jul-2016 1:14 pm
சிறப்பு...செய்தீர்... 16-Jul-2016 11:43 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. நன்றி தோழமையே! 16-Jul-2016 9:01 pm
unmai வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. நன்றி தோழமையே! 16-Jul-2016 8:59 pm
இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2015 6:58 pm

அறமெனத் திகழ்வாய்.

கூர்ந்து கேள்..!
குருவியும்...
குருவாய் தோன்றும்.

பணிந்து பயணி..!
பாறையும்...
பாதை நெய்யும்.

அமைதி கொள்..!
ஆர்பரிக்கும் அலையில்...
கவிதை நுரைபூக்கும்.

கருணை செய்..!
கல்லும் மணலும்...
கற்கண்டின் தித்திப்பாகும்.

தினமும் தேடு..!
திருக்குறளோடு...
மானுடப் பண்பாடு.

பகுத்தறிவு பழகு..!
பார்த்திட கிட்டிய அறிவு...
பாராததன் ஞானமாகும்.

பொறிகள் அறி..!
நெறிகள் பிறழா...
அறமெனத் திகழ்வாய்.

மேலும்

கவிதைக்கு ஊக்கம் தந்த உள்ளங்களுக்கு நன்றி. 24-Oct-2015 11:22 am
அருமையான அறிவுரைக் கவிதை வரிகள் கூர்ந்து கேள்..! குருவியும்... குருவாய் தோன்றும். ----ஆரம்ப வரிகளுக்கு விளக்கமாக அமைந்திருக்கிறது உங்கள் அபூர்வமான படம் பாராட்டுக்கள் . 24-Oct-2015 9:44 am
தினமும் தேடு..! திருக்குறளோடு... மானுடப் பண்பாடு.............உண்மை வரிகள் ........ 23-Oct-2015 7:22 pm
அசத்தல் ஐயா மிக நயமான வரிகள் அதி அழகு 23-Oct-2015 7:14 pm
இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 9:42 pm

மானுட மனங்களோ....!

அஹிம்சையை...
எங்களுக்குள்
விதைத்த
உம்மை....!
ஹிம்சையால்...
அறுவடை -
செய்தோம்...!

அன்னிய தேசத்தின்
வெள்ளையன் -
காத்த உன்னை...!
இந்திய தேசத்தின்
கொள்ளையர்
நாங்கள் -
கொலை செய்தோம்...!

இங்கு
சத்திய -
சோதனையை
வீழ்த்திய...
அசத்தியத்தின்
வேதனை தீயாய்
உன் மரணம்...!

செய்...அல்லது
செத்து மடி...
என்ற உனது -
வேத வசனம்...
தீவிரவாதிகளின்
திருவாசகமானது
எங்களின்-
துர்ப்பாக்கியமே...!

மகாத்மாவே...!
உம்மை -
இந்த மண்னகம்
மறுதளித்திருக்கலாம் ,
ஆனால்
மானுட மனங்களோ
வசீகரித்துக் -
கொண்டிருகின்றன...!

மேலும்

இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2015 12:35 am

பூம்பாவாய்....!

உன் அன்பு
விழிப் பூ...!
விதைக்கின்ற
பன்னீர் பூ....!
பார்வையினால்....

என் -
வாழ்வுப் பூ...!
மலரும் மென்று
கனவுப் பூ ...!
சுமக்கின்ற
இதயப் பூ ...!
துடிப்போடு.....

இங்கு -
உனக்காக...
உதித்தப் பூ...!

இன்று -
உனைக்கானாது...
உதிரும் பூ ...!

என்றும் -
உனக்கான...
இவ் உதிரிப் பூ...!

இனியும் -
உகுந்திடுமோ...
கண்நீர்ப் பூ...!

மேலும்

நன்றி....நண்பரே... 31-Mar-2015 11:07 am
தோழரே!! சொற்கள் இதமான ஓசை நயமிக்கதாக உள்ளது மனம் தொட்ட வரிகள் வாழ்த்துக்கள் 31-Mar-2015 12:51 am
இராக உதய சூரியன் - இராக உதய சூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 2:29 am

எங்கேயோ....?

உன் -
இதழ் அவிழ்ந்த
இள நகையாள்...!
என் -
இதயமானாய்...!

உன் -
மணங் கமழும்
மதுரத்தினால்...!
என் -
மார்க்கமானாய்...!

உன் -
அசைதாடும்
அழகதனால்....!
என் -
ஆலய மானாய்.....!

உன் -
உதிரத்தின்
உயிர் ஏற்றி....
என்னில் -
உதித்திட்ட ரோஜாவே....!

இந்த -
தவத் தளிரை
வெட்டி கொண்டு...
நீ -
தவழ்ப் போவது
எங்கேயோ....?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (24)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நஞ்சை சதீஸ்

நஞ்சை சதீஸ்

தாராபுரம்
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (24)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

பிரபலமான எண்ணங்கள்

மேலே