நினைவின் நிஜமே
நினைவின் நிஜமே...!
பன்னீர்
ரோஜா
அழகே...!
பதுமைகள்
போற்றும்
எழிலே...!
பனியின்
குளுமை
சேர்த்து...
பழரசம்
வார்த்த
இதழே...!
பசுமை -
லயத்தில்
இனிய
பதங்கள்
சேர்க்கும்
படைப்பே...!
தளிரின்
இலைசீர்
கரத்தால்
தனியா
இன்பம்
தருந்தேன்
தருவே...!
மௌன
வெளியில்
மணத்தை
மகிழ்வாய்
விதைக்கும்
மொட்டே..!
போதை
தனக்கும்...
போதை
கொடுக்க...
பூத்த
விடியலின்
சொத்தே...!
அழகென
மெல்ல
அசைந்து
அசைந்து
ஆடிடும்
அதிசய
வரவே..!
முள்லென
வெல்லாம்...
நல்லனவாக
சில்லென
சிலிர்த்த
சிற்றிடை
வனமே...!
கனவின்
ஜரிகை
கலந்த...
நினைவு
அலையின்
நிஜமே...!
நாளும்
தொட்டுத்
தொடுக்க....
சொல்லும்
மெல்லிய
மேதினிப்
பட்டே...!
முறுவல்
முகிழும்
முழுமதி
வதனம்
வரித்த
ஞானக்
கொழுந்தே...!