கேட்க மாட்டாயோ

காவிரி ஆத்துத் தண்ணீ
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி
காணாமப் போனதாலே
காணி நிலமெல்லாம்
காஞ்சு தெறிச்சதில

கடன் பட்டு செலவழிச்சும்
கைவிட்ட விவசாயம்,
காணப் பொருக்காத உசிரும்
கலங்கி தவிச்சு காலமாக
கண்ணீரில் மூழ்கியது சொந்தங்கள்

குடி நீருக்குக் கையேந்தி
குரல் கொடுக்கும் தமிழகம்
காலம் கடந்தும் காத்திருக்கு
கவலைபடத்தான் யாருமில்லை
காவிரியே நீயே வந்துவிடு

கோலமயிலாட்டம் முன்பு
குதிச்சு வந்தவளே!
குயிலுபோல கூவி அழைக்கிறேனே
காது கொடுத்து—நீயாவது
கேட்க மாட்டாயோ!

எழுதியவர் : கோ. கணபதி. (16-Mar-18, 5:37 pm)
Tanglish : kedka maattaayo
பார்வை : 74

மேலே