கோ.கணபதி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கோ.கணபதி |
இடம் | : putthakaram(tamil nadu) |
பிறந்த தேதி | : 10-Apr-1943 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 882 |
புள்ளி | : 1225 |
interest to write tamil poems(puthu kkavithai)
வலையில் சிக்கி
உயிருக்கு போராடி
வெளிவர துடிக்கும் மீனுக்கும்
வாழ வேண்டுமென்ற
ஆசையைத் தூண்டிவிட்டு
துடிக்கவிட்டதும்—நாம்
தொழுது வணங்கும்
இறைவன் தானே !
மண்ணில் பிறக்க வைத்த
மாயவன் , தன்னை
மறக்காமல் துதிக்கவைத்து
வாழவைத்த மக்களைத்
தூங்க வைக்க
தொட்டிலை ஆட்டியதுபோல்
ஆற்றையும், பூமியையும்
எதியோப்பாவில்
ஆட்டி விட்டானோ !
இயற்கையென்பது ஒரு
அரிய சொத்தெனவும்,
இயற்கை தான்
இறைவனென உணர்ந்து
ஆதிகால மனிதன்
ஆலயங்களைக் கட்டி
இறையாண்மையை உயர்த்தி
பெருமை கொண்டான்
இன்றைய மனிதனோ
இயற்கை வளங்களை அழித்துத்
தனி மனிதன்
தன் வளத்தைக் கூட்ட
தாவரங்களையும், மண்ணின்
வளங்களையும் அழித்து
சீரழிப்பது , சாவதற்கா ?
இல்லை எல்லாமும் அழியவா ?
கோடையில் நிலத்தடி நீர்மட்டம்
குறையும்போது
நீரின் தேவையை குறைக்க
இயற்கை இலைகளை உதிரச்செய்து
அகிலத்து உயிர்களைக் காப்பதை
உணர்ந்து பார்க்காத மக்கள்-நீரை
வீனாக்குவதைக் கண்டு
வெகுண்டெழுந்த பூமி
மண்ணில் வாழும் மக்களை
மண்ணோடு மண்ணாக்க
ஆட்டம் போட்டு அழிக்க
இறைவன் தறுதலாக
சிரியாவ
விவசாயி ஒருவர்
வீட்டு தோட்டத்தில் தினமும்
பாடுபட்டு உருவாக்கிய
பழத்தோட்டம் ஒன்றில்
பழுத்துத் தொங்கும் பழங்களைப்
பார்த்து பூரித்து போனார்
காட்டுக் குரங்கு ஒன்று
காய்த்துக் குலுங்கும்
கனிகளைக் கண்டு
கொள்ளை யிடுகிறது,
இப்படித் தான் நாட்டிலும் பலர்
உழைக்காமல் திருடி வாழ்கிறார்கள்
அடுத்தவர் பொருளை திருடி
உயிர் வாழும் மனிதர்களை
இன்றைய சமுதாயத்தில்
எங்கும் காணலாம்,
ஊழல் புரிவதும், அதிக வட்டி
வாங்கி வாழ்வதும் வழக்கமானது
உரிமையில்லாத ஒன்றை
அதனைப் பெற விரும்பி
கொள்ளையடிப்பது, திருடுவது
குரங்கின் குணமானாலும்
சட்டத்திற்கு புறம்பானது என
வாழும் மனிதன் எண்ணலையே
புரியாத புதிரென்று எதையும்
உணர்ந்து பார்க்காமல்
ஒதுக்கக்கூடாது,
வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல்
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்
வாழ்வில் முன்னேறுவது சாத்தியமா?
எதை எப்படி பார்க்கிறோமோ
அதைப் பொறுத்தே நமக்கு
எல்லாமும் அமைகிறது,
எதைக் கண்டும் அஞ்சாமல்
வாழ்க்கை என்பதற்கு
விடை காண முயன்றால்
விளக்கமும், வாழவழியும் கிட்டும்
அவரவர்களின் சிந்தனைக்கு
ஏற்றவாறு சிந்திக்கும்போது
உண்மைகளை உணர்வீர்கள்,
வேண்டுவதை தேடுங்கள்
பெறவேண்டி உழையுங்கள்
வெற்றி பெறுவீர்கள்
முயற்சி திருவினையாக்கும்
தன்னோட பிள்ளை
தரணியில் உயர்ந்திட
நற்கல்வியும்,
நன்னடத்தையும் கற்றுதர—நம்
முன்னோர்கள் பிள்ளைகளை
குருவிடம் ஒப்படைத்து
குருகுலத்தில் சேர்த்தனர்
குருவைத்தவிர எவரும்
உள்ளே வர இயலாத
குருகுலத்தில்
இடையூறு ஏதுமின்றி
அயராது கல்வி கற்று
ஒப்பில்லா சிறப்புடன்
உயரம் தொட்டார்கள்
ஆசிரியருக்கு தேவையான
அனைத்து பணிகளும், அன்று
படிக்கும் மாணவர்களுக்கு
பாடமானது--அதனை
அன்றாடம்செய்து முடிப்பதும்
அவர்களின் கடமையானது
தமிழகத்தில் தற்போது
தேர்வுக்கு மாணவர்கள்
எட்டு திசை நோக்கி
எங்கெங்கோ போவது
கல்வியின் தரம் உயர
குருகுலம் மீண்டும்
உருவாகுதோ!
நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது
சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்
சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்
எது நல்லது, எது கெட்டது என்று
எதனையும் சொல்ல முடியாது
ஆசை தான் அதனை நிர்ணயிக்கும்
அழியக்கூடிய மண்ணுலகிலிருந்து
அழிவற்ற விண்ணுலகத்திற்கு
செல்லும் பயணம் தான் மனித வாழ்க்கை
நேர்மையும், மனசாட்சியும்
நிறைந்த நல்லவன் ஒருவனுக்கு
அரசியல் எப்போதும் உதவாது
கருக்கலில் எழுந்து,கடவுளை துதித்து
கடும் உழைப்பை காணிக்கையாக்கினால்
கைவிடுவானா இறைவன்
படிக்காமல் இருப்பதை விட
பிறக்காமல் இருப்பதே மேல்
அறியாமை உயிரை பறித்து விடும்
சிந்தனையும், செயலும்
ஒன்று பட்டால் தான்
மாற்றத்தை உருவாக்க முடியும்
நல்ல பழக்க வழக்கங்கள்
நற்பண்புகளை நமக்கு தந்து
நம்மை மேன்மையடையச் செய்யும்
பழக்கங்க
உலக மனித வாழ்வில்
வளர்ந்து வரும் தீவிரவாதங்கள்
வாழும் மக்களின் பயத்தையும்,
எதிர்மறை சிந்தனைகளையும்
உருவாக்கி , மனித இனத்தை
அழித்துவிடும்
வாழும் ஒவ்வொரு மனிதனும்
அடுத்தவரின் உரிமையை பறிக்காமல்
மனிதனாக மதித்து வாழ்ந்தால்
மண்ணில் ஒற்றுமை காணும்
மனித நேயம் சிறக்கும்
மண்ணும் மரியாதை பெறும்
நாடெல்லாம் நலம் பெறும்
நேர்மையான வாழ்வு மலரும்
அறியாமையும்,அடிமைத்தனமும்
அகிலத்தை விட்டு விலகும்,
மத வெறியும், மது வெறியும்
மண்ணில் காணாமல் போகும்
மனித வாழ்வு என்பது
மண்ணில் ஒரு வாய்ப்பு,
மறந்து விடாமல் மக்கள்
கிடைத்த இந்த வாய்ப்பை
நிறைவாக வாழ்ந்து காட்டி
ஆதி பகவனுக்கு அர்ப்பணிப்போம்
நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது
சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்
சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்
தான் உழைத்து சேர்த்த பொருளை
தன்னை விட்டு நீங்காமல்
பாதுகாத்து வாழ்பவன் ஒரு நாளும்
பிறரது பொருளைத் தவறான
முறையில் அபகரிக்க எண்ண
மாட்டான்—அதனால்
மக்களும் அவனை மதிப்பார்கள்
துன்பப்படும் ஏழைகளுக்கு சிலர்
உதவுவது போல் கடன் கொடுத்து
பின்பு தரவேண்டிய
பணத்துக்கு வட்டிக்கு வட்டி போட்டு
அவர்களின் சொத்துக்களை
அபகரிக்கும் நயவஞ்சகர்களும்
நாட்டில் உண்டு
உயிர் பிரிந்த பின்பு—சொத்துக்கள்
உலகம் முழுதும் உனக்கிருந்தும்
என்ன பயன் என்பதை
என்றாவது நினைத்ததுண்டா ?
வாழ்வின் முடிவில் ஆறடி நிலம் தான்
வேண்டுமென்ற நிலையும் மாறி
தேவையில்லை என்றானது இன்று
அடுத்தவர் பொருள் மீது
ஆசைபட்டு அபகரிக
கருணை உள்ளம் உருகிக்
கரையும்போது
இமை ஓரம் ஈரம் கசியும்