2026 வரவேற்பு மடல்
வாழ்க்கை தழைக்க
வருகை தந்த
வசந்த வருடமே-2026
வாழ்வில் இன்பம் திளைக்க
வளம் செழிக்க
வசந்தம் பெருக
நன்மை பல தந்து
தீமை அறவே ஒழிந்து
வறுமை களைந்து
வறியருக்கு பசிப்பிணி அறியா
வள்ளல் தன்மை ஓங்கிட......
இயற்கை இன்புற்று
இனிய முகத்தை காட்டிட
அழியா கல்விச் செல்வம் என்றும் நிலைத்திட.....
பருவமழை பொய்யாது
மழை பொழிந்து
தரணி தழைக்க அருள் புரிவாய் இறைவா.......
இளையகவி

