ஆர்ப்பரிக்கும்
நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது
சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்
சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்