கல்லறை மட்டும்

தான் உழைத்து சேர்த்த பொருளை
தன்னை விட்டு நீங்காமல்
பாதுகாத்து வாழ்பவன் ஒரு நாளும்
பிறரது பொருளைத் தவறான
முறையில் அபகரிக்க எண்ண
மாட்டான்—அதனால்
மக்களும் அவனை மதிப்பார்கள்

துன்பப்படும் ஏழைகளுக்கு சிலர்
உதவுவது போல் கடன் கொடுத்து
பின்பு தரவேண்டிய
பணத்துக்கு வட்டிக்கு வட்டி போட்டு
அவர்களின் சொத்துக்களை
அபகரிக்கும் நயவஞ்சகர்களும்
நாட்டில் உண்டு

உயிர் பிரிந்த பின்பு—சொத்துக்கள்
உலகம் முழுதும் உனக்கிருந்தும்
என்ன பயன் என்பதை
என்றாவது நினைத்ததுண்டா ?
வாழ்வின் முடிவில் ஆறடி நிலம் தான்
வேண்டுமென்ற நிலையும் மாறி
தேவையில்லை என்றானது இன்று

அடுத்தவர் பொருள் மீது
ஆசைபட்டு அபகரிக்காமல்
உழைத்து வாழுங்கள்—பிறரையும்
வாழவிடுங்கள் ,
அகிலத்தையே அடக்கி ஆள நினைத்த
அலெக்சாண்டரின் கல்லறையில்
எழுதப்பட்ட வாசகம் “இப்போ
கல்லறை மட்டும் போதுமானது “

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jul-20, 3:14 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : kallarai mattum
பார்வை : 47

மேலே