வித்யாசந்தோஷ்குமார் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : வித்யாசந்தோஷ்குமார் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 16-Oct-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 6043 |
புள்ளி | : 3374 |
சொல்வதற்கு எதுவுமே இல்லை...........!
மானுடம் மடியலாம் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~
கொல்லும் வார்த்தைக்குள்
சில்லென சிதறும் நரம்பினை
செதுக்கி வளர்த்ததும் நீ ...
கோபத்தின் வேலிக்குள்
முள்ளென நழுவும் நாவினை
கடித்து துப்புவதும் நீ ...
விரக்தியின் ஆழத்தில்
எச்சமென பரவும் சோகத்தை
ஊற்றி நிறைப்பதும் நீ ..
பிழையின் மீதத்தில்
வாதமென அவிழும் சாபத்தை
உதறி எறிவதும் நீ ..
விலையற்ற நேரத்தில்
உச்சமென தொடரும் துரோகத்தை
நிரப்பி உடைப்பதும் நீ ...
நீயெனும்
நிறமற்ற உறவுகளே ....உம்
புரிதலில்லாப் புருவங்களுக்கு
புரிய வைக்கும் புலமையை விட ...
எம் யாக்கையின்
கரு நிழலும் எரிந்து ...
நிறை பழிக்குள் வழிந்
வணக்கம் தோழமைகளே .... எங்களுக்கானவை என்ற தலைப்பில் ஒரு 12 கவிதைகள் அடங்கிய தொகுப்பினை எழுதி அதன் முதல் கவிதையை இங்கே பதிவிட்டேன் ... புத்தகம் போன்ற அமைப்பில் இருப்பதால் அதன் லிங்கை இங்கே தருவிக்கிறேன்... எங்களுக்கானவை ...
பெண் என்று
தெரியுமின் ,
கருவிலே அழி !
மீறி பிறப்பின் ,
கள்ளிப்பால் கொடு !
மீறி வளர்மின் ,
கல்வியை தடு !
பூப்படைமின் ,
பாலியல்
துன்பம் கொடு !
படி தாண்டின் ,
ஏளனம் செய் !
பணிக்கு செல்லின் ,
பேருந்தில்
நெரிசலில் உரசு !
காதல் பெயரில் ,
காமம் தணி !
மணம் முடிக்க
வேண்டின் ,
தட்சணை கேள் !
மறுப்பின் ,
விவாகரத்து செய் !
விபசாரத்திற்கு இழு !
மீறி நிற்பின் ,
தாலி அறு !
தாசி பட்டம் கொடு !
மீறி வளர்மின் ,
ஆடை அவிழ் !
அயிட்டம் பாட்டிற்கு
ஆட வை !
அருகே அமர்ந்து
அண்ணார்ந்து பார் !
அவள்
உயிர் என்பதை மறந்து ,
உடலாக மட்டும் பார் !
அனைத்தும் செய் -
கண்மணி-வித்யா
வெண்மேகம் கலைத்து
மின்மினிகள் குழைத்து
உன் நீல வானில்
நானெழுதிய கவி....
சந்திப்பிழைகளோ
மரபுப்பிழைகளோ
இக்கவியின் கெளரவம்
குறைக்கவியலாது
மூன்று புள்ளியோடு
முடியும் ஆச்சர்யக்குறியோ
முடிவோடு தொடரும்
முடிவிலியோ
இக்கவியின் அழகினைக்
கூட்டிட முடியாது
வெண்படலம் பிளந்து
உயிரொளி அடைத்து
இமைக்கதவு தாழிட்டு
பிறவியுருக்கி நானெழுதிய
இக்கவி.....
"என் கண்மணி கவி"
மரணம் தொடுகிறது எனதிரவு-வித்யா
உன்
இறுக்கமில்லா எனதிரவு
இரக்கமில்லாமல் எனை வதைக்கிறது
கடந்து போன
இரவுகளின்
நினைவுகளில்
மூச்சடைக்கிறது
நம் படுக்கையறை
நிர்வாணமாய் நிற்கிறது
மின்விசிறிகளின் கூர்நாக்குகள்
எனை பார்த்து சிரிக்கின்றன
படுக்கையில் உனைப் பரப்பி
அயர்ந்து தூங்குகையில்
மிரண்டு எழுகிறேன்
உன் அணைப்பிற்குள்
சிக்கித்தொலையாத
இன்னாளிலெல்லாம்
செத்துப் பிழைக்கிறேன்
விரைந்து வா...
என் ஆற்றாமைக்கு
உன் அருகாமயினும்
சிறந்த மருந்தில்லை...!!!
மரணம் தொடுகிறது எனதிரவு-வித்யா
உன்
இறுக்கமில்லா எனதிரவு
இரக்கமில்லாமல் எனை வதைக்கிறது
கடந்து போன
இரவுகளின்
நினைவுகளில்
மூச்சடைக்கிறது
நம் படுக்கையறை
நிர்வாணமாய் நிற்கிறது
மின்விசிறிகளின் கூர்நாக்குகள்
எனை பார்த்து சிரிக்கின்றன
படுக்கையில் உனைப் பரப்பி
அயர்ந்து தூங்குகையில்
மிரண்டு எழுகிறேன்
உன் அணைப்பிற்குள்
சிக்கித்தொலையாத
இன்னாளிலெல்லாம்
செத்துப் பிழைக்கிறேன்
விரைந்து வா...
என் ஆற்றாமைக்கு
உன் அருகாமயினும்
சிறந்த மருந்தில்லை...!!!
புதுவரவு-வித்யா
நிலவின் விருட்சங்கள்
தெளித்துவிட்ட ஒளிப்பூக்களில்
பட்டுத்தெரித்த பனித்துளித்தீண்டி
மோட்சம் கொண்டதொரு
உதயரேகை...!
மௌனம் கலைத்து
மழை சமைத்தது
மேகம்
எண்ணங்களுக்கு வண்ணம்
தீட்டிப் பிழை மறைத்தது
வானவில்
தேகம் தொட்டு
மோகம் கொண்டு
குடைவீசிப் போயிருந்தது
காற்று
புதுவரவுகளில்
கலைந்துப்போயிருந்தது
பழைய அரிதாரங்கள்
இவன் தலித்தா..................? இல்லை........... இவன் மனிதன்..
இவன் பிராமணனா...........? இல்லை ............ இவன் மனிதன்....
எழுத்துக்களை அடக்கிப் பின் தானும் அடக்கமாகவே இருந்து கொண்டவர்..... எழுத்துலகின் பிதாமகன் ஜெயகாந்தனின் மறைவு துயரத்தினுள் அமிழ்த்துகிறது.....
தமிழின் எழுத்தாளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தன் இயற்கை எய்தினார்.
சில நேரங்களில் சில ஆளுமைகள்.
தமிழுக்காக எழுதிய தலைவனைப்பார்த்து
தானும் எழுத ஆசைப்பட்ட காலன்
மரணப்புத்தகத்திலா எழுதவேண்டும் இவர் பெயரை?
நண்பர்களே என்னுடைய கவிதை ஒன்று இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளியாகியுள்ளது.. 'அடையாளம் தேடும் முகங்கள்' என்னும் கவி கட்டுரை நண்பர்களே...
- கிருத்திகா தாஸ்...
உனை நோக்கியே நீண்டிடும் என் பாதங்கள்-வித்யா
அந்த நீளுகின்ற பாதையிலே நீண்ட நேரம் நீ காத்திருந்தும், நகர்ந்துவரும் நாழிகையில் நகாராமல் நானிருந்தும் அந்த சாலையின் வளைவுகளில் நான் தொலைந்திருக்கவாய்ப்பில்லைதான். புது வண்ணங்கள் பூண்ட வானவில்லாய் அந்த விண்மீன் காட்டில் உலாவியது புது அனுபவம்தான்.
ஏதோ ஒரு மின்மினி தேசத்தில் நுண்ணிய ஒளிச்சிதறலாய் நானிருந்தேன். ஏதோ தூர தேசத்தில் அகதியாய் நீயிருந்தாய். அதோ அந்த போதி மரத்தின் சுவாசக்காற்று எனைத் தீண்ட...உனைத் தீண்ட...நமைத் தீண்ட.........பேரொளி
உனை நோக்கியே நீண்டிடும் என் பாதங்கள்-வித்யா
அந்த நீளுகின்ற பாதையிலே நீண்ட நேரம் நீ காத்திருந்தும், நகர்ந்துவரும் நாழிகையில் நகாராமல் நானிருந்தும் அந்த சாலையின் வளைவுகளில் நான் தொலைந்திருக்கவாய்ப்பில்லைதான். புது வண்ணங்கள் பூண்ட வானவில்லாய் அந்த விண்மீன் காட்டில் உலாவியது புது அனுபவம்தான்.
ஏதோ ஒரு மின்மினி தேசத்தில் நுண்ணிய ஒளிச்சிதறலாய் நானிருந்தேன். ஏதோ தூர தேசத்தில் அகதியாய் நீயிருந்தாய். அதோ அந்த போதி மரத்தின் சுவாசக்காற்று எனைத் தீண்ட...உனைத் தீண்ட...நமைத் தீண்ட.........பேரொளி