வியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வியன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 123 |
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
முதலில் வந்தவர்களை
மறக்கடிக்கிறது
நடிகையின்
தேர்ச்சி விவரங்கள்..!!
எழுத்து உறுப்பினர்களுக்கு வணக்கம்,
எழுத்து தளத்தில் இறுதி தேர்வு பட்டியலுக்கு படைப்புகளை தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே தளத்தில் புதிய நடுநிலையாளர்களை தேர்ந்தெடுக்க நீங்கள் பரிந்துரை செய்யலாம்.
நீங்கள் கருத்து பகுதியில் தாங்கள் பரிந்துரைக்கும் உறுப்பினர் பெயர்களை தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
இந்த படத்தை இன்று தளத்தில் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் ... மனித நேயம் பற்றி இந்த படம் பேசுகிறது என்று புகழாரம் வேறு ... இந்திய நாட்டை இழிவு படுத்தி மனித நேயத்தை உலகுக்கு உரைக்கும் இது போன்ற படங்களை பதிவேற்றும் கண்மணிகள் தான் இந்திய நாட்டுக்கு தேவை ...
இடது புறம் ஒரு முஸ்லிம் .வலது புறம் ஒரு இந்து ... முஸ்லிம் என்பவர் இரக்க குணம் கொண்டவராம் .. பூனைக்கு கூட உணவு அளிப்பாராம் .. இந்து என்பவர் மனிதனுக்கு உணவு அளிக்காத மிருகமாம் ....
பூனைக்கு உணவு அளிப்பவர் ஏன் மாட்டை கொன்று தின்கிறார் (...)
இயற்கை
------------------
எங்கே தேடியும்
காணவில்லை
மின்மினி பூச்சிகள்
****
குடிசைக்கு கிடைக்கும்
காற்றை கூட தின்றுவிடுகின்றன
அடுக்குமாடிகட்டிடங்கள்
****
மதிய வேளையில்
என் நிழலே
என்னை கொன்றுவிடுகிறது
»சத்தியதாஸ்
இவ்வுலகில்
பிறக்கும் ஒவ்வொருத்தனுக்கும்
ஒவ்வொரு உணவுப் பருக்கையில்
உரிமையுண்டு .
பசித்தவனுக்கு உணவைப் போராடி
வாங்கிக்கொடுப்பது
கம்யூனிஸம்.
பசித்தவனுக்கு உணவை அடித்துப்பிடுங்கி
வாங்கிக்கொடுப்பது
மாவோயிசம் .
இரண்டுமே ஒன்றுதான்
உணர்வோம்.
உரிமையினை
மீட்டுக்கொடுக்கும் வழிவேறு.
-வியன்.
மணம் தந்து மரணமாகும்
ஊதுபத்தி
ஒளித்தந்து உருகிவிடும்
மெழுகுவர்த்தி
இவ்வரிசையில்,
குற்றவாளி விடுவித்து
குற்ற உணர்ச்சியில்
தற்கொலையாகிறதாம்
நீதி .
ஆம் நீதியும்
-வியன்.
திரைப்படங்களில் ஊழலை ஒழிக்கிறேன் , லஞ்சம் ஒழிக்கிறேன் , சமுதாயம் வளம் பெற வேண்டும் என அனல் கக்கி வசனம் பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் 96 இல் ‘ ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது ‘என ஆருடம் தெரிவித்தார்.
ஆனால் நேற்றோ , ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற தீர்ப்பில் விடுதலையாகி , இன்னும் முடியா பல சர்ச்சைகளுக்கு சொந்தம் கொண்டாடும் செல்வி ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்கிறார் என்றால் என்ன அர்த்தம்.. தமிழகம் காப்ப (...)
அன்புத் தோழர் ராம் வசந்த் மீண்டும் எழுத்து தளத்தில் வலம் வர வேண்டும். பல படைப்புகளை தர வேண்டும். தன்னலமற்ற அவரின் பங்களிப்பு தேவை.
எதுவாகினும், புறந்தள்ளி வாருங்கள் தோழர் ராம் வசந்த் அவர்களே.
என் படைப்புகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு ..
அசைந்தாடும் அழகியத் தென்றல் வந்து !
அழகியப் பெண்ணின் செவியில் நின்று !
அசரீரி போன்று ஒரு செய்தி சொன்னது !
வாழையும் மாவும் தென்றலுக்கு ஒன்றே !
ஏழையும் செல்வந்தனும் தென்றலுக்கு ஒன்றே !
வானமும் பூமியும் தென்றலுக்கு ஒன்றே !
பேதம் பார்த்துத் தென்றல் வீசுவதும் இல்லை !
மதம் பார்த்துத் தென்றல் விலகிப்போவதும் இல்லை !
மாதம் பார்த்துத் தென்றல் மறைவதும் இல்லை !
எங்கும் நிறைந்து நான் தண்மை தருகிறேன் !
பொங்கும் மனங்களில் ஆனந்தம் அளிக்கிறேன் !
ஏங்கும் இதயங்களை இதமாய்த் தொடுகிறேன் !
மெல்லிய மனங்களை வருடுகிறேன் !
செல்லத் தீண்டலால் இதம் தருகிறேன் !
மெல்ல வந்து மனம் கவர்கிறேன் !
மக்கள் ம
என் அன்புத் தந்தைக்காக நான் உருவாக்கியப் படம் இது !
https://www.youtube.com/watch?v=YsfWp4QIjJA