வியன்- கருத்துகள்

எனது விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லை.

கலை மற்றும் எழுத்து உலகில் வயதுகளை விட படைப்புகளே திறன்களே அதிகம் விசாரிக்கப்படும்/ பார்க்கப்படும் தோழர். என்னை பொருத்தமட்டில் எழுதுகோலேந்தியவர்களிடம் பாலினம் அறிந்து திறமைச்சோதிப்பதே தவறு என்பேன்.

கேட்டதற்காக சொல்கிறேன்.
இளமைக் குறும்புகளை சுயத்திறனாய்வு செய்யக்கூடிய நாற்பதின் பாதையில் என் வயது பயணிக்கிறது.

வியன் என என்னை குறிப்பிட்டமைக்கு நன்றி தோழரே. இந்த தளத்தில் நான் நீடிக்க வாய்ப்பில்லை.. நேரம் போக்கவே வருகிறேன். கோடை விடுமுறையில் நிழல் தேடி வந்திருக்கிறேன்.

நடுவருக்கான இலக்கணமே அவர் வெளிப்படாமல் நடுநிலை வெளிப்படுவதே... / ஆஹா அருமையாக எடுத்துரைத்தீர்கள் தோழா. எமது விருப்பமும் அதுவே.

பரிந்துரைத்தது சரி. அதென்ன தோழர் பொடிசுகளை எல்லாம்? ஒரு படைப்பாளியாக நீங்கள் ஏனைய படைப்பாளிகளை இவ்வாறு இடிந்துரைத்து இழித்துரைப்பது முறையா. ?
மொத்த வெறுப்புணர்ச்சியில் இருப்பீர்கள் என அறிகிறேன். சமீபத்திய உங்கள் பதிவுகள் எல்லாம் அவ்வாறுதான் குறைச்சொல்லிக்கொண்டே இருக்கிறது. குறைச்சொல்பவர்கள் முன் மாதிரியாக ஏதேனும் செய்திருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்தீர்கள் இத்தளத்திற்கு ? இலக்கியத்திற்கு ?

புரியவில்லையே. ஏதோ உள் அர்த்தமா? ஹி ஹி

இனறைய டாப் ரேட் நியூஸ் இதுதானே. ஆமா ,எனை பகடி செய்யவில்லையே ?? ஹி ஹி

லட்சுமி மேனன் பாதிப்போ

இராஜ்குமார் பெயரையும் பரிந்துரைக்கிறேன்.

இதுவரையிலும் இறுதி தேர்வு பட்டியலுக்கு தேர்வாகிய படைப்புகளில் நடுநிலையாளர்களின் பங்கு இருந்ததா ? நடுநிலையாளர்கள் பங்களிப்பு இல்லாத படைப்பு தேர்வு செய்யபடவில்லையா?

நடுநிலையாளர்களை எழுத்து குழுமமே ரகசியமாக தேர்ந்தெடுத்தால் நன்று. மேலும்,
நடுநிலையாளர்கள் யார் யார் என்று மற்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் இருந்தால்.. படைபாளிகளுக்கிடையே சில தேவையற்ற சங்கடங்கள் தவிர்க்கப்படலாம்.

அரேபியர் படத்திற்கு பதிலாக இந்தியர் ஒருவர் பூனைக்கு பாலூட்டுவது போல இருந்திருந்தால் இவ்வித சர்ச்சைக்கு இடமளிக்காது.

பொதுவாக முகநூலில் விஷமத்தனமானவர்கள் இவ்வாறான படத்த்யாரிப்பு வேலை செய்வார்கள். அவர்களின் படத்தை பகிரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் சற்று பிரச்சினைகளையும் சிந்திக்க வேண்டும்.

தோழர் அருண்வாலி. ஒரு வேண்டுக்கோள். இந்த தவறை இத்தோடு விட்டுவிடுங்கள். விரிவுப்படுத்த வேண்டாமே. நிச்சயமாக அவர் தவறான நோக்கத்தில் பகிர்ந்திருக்கமாட்டார் என நம்புவோம்.

நன்று
மதிய வேலையா.?. மதிய வேளையா ?

நிச்சயம் வெவ்வேறான படங்களை பொறுத்தி காண்பித்து மனிதாபிமானத்தை ஒரு அபிமான சின்னமாக காட்டும் இப்பகிர்வு சர்ச்சைக்குள்ளானது தோழரே.

இந்தியர் என தலைப்பிட்டு ஒரு குழந்தை அனாதையாக ரோட்டில் அல்லாட , பக்திமயமாக விநாயகர் ஊர்வலம் செல்லும் ஒரு குடும்பம். . அப்படத்தில் பக்தி என்பது சேவையே.. வழிப்பாடு அல்ல எனும் தொனியில் ஒரு கருத்தை முன் வைத்திருந்தால் பகுத்தறிவு வாதம் என ஏற்றுக்கொள்ளலாம்.

முகநூலில் சிறுபிள்ளைத்தனமான சில சிண்டு முடியும் வேலைகள் நடக்கும் . அதற்கு தோழர் தன் உணர்ச்சியை அடகு வைக்க ஆகாது.

குறிப்பு : இந்து - முஸ்லிம் ஒற்றுமை அதிகமுள்ள ஒரே இனம் தமிழினம்.. ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த இந்துக்களும். பொங்கல் பலகாரங்களில் சுவையறிந்த இஸ்லாமியர்களும் மனிதநேயத்துடன் வாழம் தமிழகத்தில் நாம் இருக்கிறோம். மதம் பற்றிய எதிர் சிந்தனை எனக்குண்டு . என்றாலும் இவ்வாறான சர்ச்சையான படங்களை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. சிந்தியுங்கள் தோழர் பழனிகுமார் அவர்களே.

ஆக தோழர் பிரியா ராம் சொல்ல வருவதென்ன ?

மார்க்சியம் என்பது விஞ்ஞான பூர்வமான கம்யூனிசம். பின் நவீனத்துவத்திற்கும் முந்தைய பலமிக்க சிந்தனைக்கொள்கையுடையது தோழா.

கம்யூனிசம் மார்க்சியம் இரட்டை குழல் துப்பாக்கியே.
விரிவாக சொல்வதென்றால்

கம்யூனிசம் = தீர்வை தேடுவது
மார்க்சியம் - தீர்வை முன் வைப்பது.

நன்றி தோழரே.

அருமை அருமை மிக அருமை . கையிலெடுத்து... நெஞ்சில் வைத்து ..படுக்கையில் உறங்கும்போது படித்திடும் போது இருக்கும் அலாதி.. இப்போதுள்ள நவீனத்தில் கிடைக்குமா.. அருமை தோழர் சியாயமளா அம்மையாரே..!

அதே மூளைதானே.. அதே பகுத்தறிவுதானே அவருக்கு இருக்கிறது.

எதிர்ப்பார்ப்பதே நம் பலவீனம் தோழா.

தோழர் கிருஷ்ண தேவ்.
இப்பதிவு பலருக்கு மனக்காயத்தை ஏற்படுத்தும். வெளியேறியவர்கள் அனைவருக்கும்.. அனைவரும் ஆதரவு தெரிவிப்பதில்லை. போராட்டம் நடத்துவதில்லை.

ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள் மனநிலையினை சரிப்படுத்தவே பலரும் இங்கும் எழுதுகிறார்கள். ஒருவரின் மனக்காயத்திற்கு மற்றவர்களும் ரணம் ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்லவே. எல்லாம் தானாக நடக்க வேண்டும். அதுவே நட்புணர்வு. உணர்வு..

இது இலங்கை தமிழினப்போரின் போது நாம் ஐ பி எல் பார்த்தமைக்கும் பொருந்தும். உணர்வு இருந்தால் துடிப்பு இருக்கும்.

ஒரு சிலர் தான் தளம் என்று எண்ணாமல்.. பயன்பாடு இல்லா கருத்துகளை வீண் பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு வலம் வர வேண்டும் அல்லவா தோழர் கிருஷ்ண தேவ்.

பொறாமை , ஏச்சு பேச்சுகள் இல்லா இடமேது. ? சொல்லுங்கள். ஒரு இடம் மட்டுமாவது சொல்லுங்கள். எங்குச்சென்றாலும் வல்லூறுகளும் இருப்பார்கள் வல்லமையினரும் இருப்பார்கள்.

எனது தனிக்கருத்து இது.


வியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே