சிலருக்கு சிலரைப் பிடிக்கும்போது அவரது கிறுக்கலும் கவிதையாகும் அதே...
சிலருக்கு சிலரைப் பிடிக்கும்போது
அவரது கிறுக்கலும் கவிதையாகும்
அதே சிலருக்கு சிலரைப் பிடிக்கவில்லையெனில்
அவரது நற்கருத்து கவிகூட பிடிக்காமல் போவதை
இந்த எழுத்து தளத்தில் நான் பலநாளாக
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
,,.......
ஒருவரின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தபின்
அவர்களது கவிதையோடு ,கருவோடு எந்த முரண்பாடும் வரவே வராது ..ஒருவரின் மீது ஒரு தவறான அபிப்பிராயம் வந்துவிட்டாலே அவர்கள் என்னதான் எழுதினாலும் அதில் பிழைகாணவே தோணும் அதுவே மனித இயல்பு இதை மறுக்கும் எவரும் உண்மைக்கு புறம்பானவரே என்பது என் எண்ணம் .......
நட்புவட்டம் சாதகம்
மூத்தவர்களின் வட்டம் சாதகம்
நிறைய கருத்தை அள்ளி அள்ளி ஒருவரையே தொடர்ந்து
யார் பின் செல்லுகிரார்களோ அவர்களின் வட்டமும் சாதகம் ..
இதை எல்லாம் மீறி போட்டி நடத்துபவர்கள் வட்டமும் ,ஒரு ஆண் கவிஞனின் வட்டமும் சாதகமே ...
மற்றவர் எழுதுவதில் என்னதான் முட்டையும், குஞ்சும் இருந்தாலும் அது வெறும் கூடே ...