அரங்க ஸ்ரீஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அரங்க ஸ்ரீஜா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 22-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-May-2015 |
பார்த்தவர்கள் | : 2216 |
புள்ளி | : 170 |
கலைகளிலும் தமிழிலும் எனக்கு ஆர்வம் அதிகம் . என் ஓவியங்களையும் கவிதைகளையும் ஒன்றாக்கிச் சமர்ப்பிக்கிறேன்.
http://sreejarenganath.blogspot.in/
அவள் பொய் சொல்வாளா? என்று தெரியாது...நான் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாள்.
அது எப்படி? என்று பல முறை கேட்க நினைத்து நினைத்து மறந்தது தான் மிட்சம்....இன்றாவது கேட்டு விட வேண்டும் என்று படுக்கையில் இருந்து எழுந்து காலிற்கு வந்தேன்....
நான் நினைத்தது சரிதான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.
இப்போதும் அதே குழந்தை தூக்கம் தான்...ஆனால் என்ன?
தலைகிழாக தொங்கிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.இறந்தபின் அப்படித்தான் தூங்க வேண்டும் போல....
சிறுவயது முதல் இப்ப வரை....பார்த்த சினிமா கேட்ட,படித்த கதைகளில் ஆத்மா என்றால் வெளிர் நிறத்திலும்,கால்கள் இல்லாமலும், அகோரமாகவும் தான் இருந்தது,... ஆ
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்
அம்மாவின் கருவிருந்து
மாதம் பத்து தின்று ஜனித்தேன்
வீட்டிற்குத் தலை மகளாய்....
கலை மகளாய்..
அலை மகளாய்..
மலை மகளாய்..
கொண்டாடினார்கள் ஊரும் உறவும்..!!
தவழ்ந்து, எழுந்து, நடந்து..
அடிஎடுத்து வைத்தேன்
என் பால பள்ளிக்குள்..
படிப்பும் விளையாட்டுமாய்
பஞ்சமில்லா செல்லத்துடன்
கழிந்தன என் பொழுதுகள்..
ஆண்டுகள் இரண்டு ஆனபின்..
அம்மா ஒரு நாள் கேட்டாள்,
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா
தங்கச்சி பாப்பா வேணுமா..?" என்று
செப்பு சாமான் விளையாட்டை
விட்டுவிட்டு யோசித்தேன் யோசித்தேன்..
இரவு வந்து தூங்கியே விட்டேன்.....
காலையில் எழுந்து
கையில் பால் டம்ளருடன்
அம்ம
அடிக்குற வெயிலுக்கு தர்பூசணி மட்டும் தான் சாப்பிட முடியுது !
https://www.facebook.com/Sreejaarts
எனது முகநூல் பக்கம் .
வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !
இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்
பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்
மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே
- அரங்க ஸ்ரீஜா
அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !
சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!
-அரங்க ஸ்ரீஜா
பாடம் புகட்டும் பகலவன்
பிழை பொறுக்கும் பரமன்
தன்னலம் கருதா தீரன்
தன்னிகர் இல்லா வீரன்
முருகனின் பக்தன்
முறுவலுடன் உறங்க
முழுமதியை வேண்டினேன்
முக்கனியின் சுவைபோல்
முத்தமிழன் இனிமைபோல்
முத்தான கனவுகளுடன்
குருவின் நித்திரை செழிக்கட்டும் !
குமரனின் அருள் பரவட்டும் !
-அரங்க ஸ்ரீஜா
நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை
விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்
கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .
அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !
சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!
-அரங்க ஸ்ரீஜா
அடிக்குற வெயிலுக்கு தர்பூசணி மட்டும் தான் சாப்பிட முடியுது !