பேய் காதல் கதை பாகம் 2

அவள் பொய் சொல்வாளா? என்று தெரியாது...நான் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாள்.
அது எப்படி? என்று பல முறை கேட்க நினைத்து நினைத்து மறந்தது தான் மிட்சம்....இன்றாவது கேட்டு விட வேண்டும் என்று படுக்கையில் இருந்து எழுந்து காலிற்கு வந்தேன்....

நான் நினைத்தது சரிதான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.
இப்போதும் அதே குழந்தை தூக்கம் தான்...ஆனால் என்ன?
தலைகிழாக தொங்கிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.இறந்தபின் அப்படித்தான் தூங்க வேண்டும் போல....

சிறுவயது முதல் இப்ப வரை....பார்த்த சினிமா கேட்ட,படித்த கதைகளில் ஆத்மா என்றால் வெளிர் நிறத்திலும்,கால்கள் இல்லாமலும், அகோரமாகவும் தான் இருந்தது,... ஆனால் உண்மையில் அப்படி இல்லை.....

அவள் எப்பவும் போலத்தான் இருந்தாள்....

கல்லூரிகாலத்தில் நிறமாறும் வண்ணத்துப்பூச்சாய் தினம் ஒரு சுடிதாரில் வருவாள்.ஆனால் இப்போது அப்படி இல்லை... எனக்கு பிடித்த சிவப்பு வெள்ளை சுடிதாரில் தேவதையாய் இருந்தாள்....அவளுக்கும் அதுதான் பிடித்திருக்கு போல....

எப்பவும் போல என் எண்ணத்துக்குள் நானே மூழ்க.... இந்த முறை நானே சுதாகரித்துக்கொண்டேன்.

அவள் தூங்குவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.... இருந்தாலும் எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கொண்டே இருப்பது..... அவளை எழுப்ப சப்திகா என்றேன்...

என்ன ஆச்சரியம் அவள் விழித்துவிட்டாள்.... கடந்த ஒரு வருடத்தில் இதுதான் முதல் முறை... என் முதல் முயர்சியிலேயே அவள் விழித்தது....

விழித்ததும் என்னைப்பார்த்து ஒரு குட்டி புன்னகை...
அக்கணத்தில்..........

என்னடா இவ இவ்வளவு அழகாக சிரிக்கிறாள்?

இவ சிரிச்சா மட்டும் ஏன் இவ்வளவு அழகாக இருக்கு?

இந்த இரு கேள்விகளும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

என்னவள் சிரிப்பிற்கு பல பரிணாமங்கள் உண்டு.

உதாரணமாக வருத்தத்தில் அவள் கன்னம் சிவந்திருக்க வெண்ணிற வானம் இமைக்குள் சிக்குண்டு
கருமைநிற நிலவு மட்டும் வெளியே தெரிய உதட்டை வருத்தத்தோடு பிதுக்குவாள் அதைக்காண இந்த ஓரு ஜென்மம் நிச்சயம் போதாது....

அவ்வளவு அழகு அதில்...

இப்படி ஒவ்வொரு சிரிப்பிற்கும் ஒரு இனிமை உண்டு...

ஆனால் அவள் இப்போதய சிரிப்பு அபுர்வமானது... இதற்குமுன் ஒருமுறை இச்சிரிப்பை பார்த்திருக்கிறேன்.

அன்று எங்கள் கல்லூரியில் project training நானும் அவளும் project member என்பதால்..... சென்னையில்...... தனியே......

என்னடா பாத்துகிட்டே இருக்க என்று அவள் சொல்ல.....
நினைவு திரும்பியது.

இல்ல டி செல்லம் பழைய விசயங்களை நினைத்துப்பார்த்தேன்.

நீயும் நானும் சென்னை போனோம் ல...நியாபகம் இருக்கா என்றேன்,...

அவள் தலைகிழாக தொங்கி கொண்டே ஆம் என தலை அசைத்தாள்...

உப்புமா நியாபகம் இருக்கா என்றாள் பதிலுக்கு...
உனக்காக கஷ்டப்பட்டு செஞ்சேன் தெரியுமா டா??? நீ தான் சாப்பிட வில்லை...

ஆம் அவள் எனக்கென செய்த முதல் சாப்பாடு அதுதான்.... ஆனால் என் துருதஷ்டம் நான் அதை சாப்பிடவே இல்லை...

இதுவரை சிரித்திருந்தவள் ஆழ ஆரம்பித்தாள். இனி உனக்கு நான் ஏதுமே செஞ்சு தர முடியாது ல? அதெப்படி முடியும் என்னால தான் எந்த பொருளையும் தொட முடியாதே....

அவள் அழ அழ அழ
என்னால் தாங்க முடியாமல்

ஏன் டி செல்லம் அழுகுற..... தயவுசெய்து அழாத டி செல்லம். உன்ன கொன்னவங்கள பழி வாங்கத்தான்டி நான் உயிரோடு இருக்கேன். இல்லனா எப்பவோ செத்துருப்பேன் டி செல்லம்... என்று அருகில் இருந்த கத்தியை எடுத்து என்னை நானே குத்த முற்பட.... இல்லை இல்லை குத்தியே விட்டேன்.... ஆனால் கத்தி குத்த வில்லை...இது அவள் மாயையாகத் தான் இருக்கும். ஏமாற்றமாக கத்தியை சுவற்றில் தூக்கி எறிந்தேன்.

இதோடு நான் விடவில்லை நீ எப்படி செத்த? உன்னோட இந்த நிலமைக்கு காரணம் யார்? என்றேன்....

(பலமுறை கேட்ட கேள்வித்தான் பதில் வந்ததே இல்லை.இந்த முறை விடுவதாக இல்லை)

சொல்லு செல்லம்.... இல்லனா நீ பார்க்காத போது நானே அந்த கத்தியால குத்திப்பேன்.

அவள் எப்போதும் போல மௌனம் சாதித்தாள்.

சொல்ல போறியா இல்ல...என்று அதட்ட

உனக்கு தெரியாத? கேஸ் வெடிச்சுத்தான் என்றாள் சோகமாக....

நீ இங்க வாயேன்.... வாடி செல்லம் என்றேன்,...

அரைநொடிக்கனத்தில் அருகில் வந்தாள். உன் கையை எடுத்து என் தலையில் வை என்றேன்....அவளும் வைத்தாள்....

இப்ப சொல்லு என்றேன்....

அவள் சோகமாக தலை கவிழ்து டிவியை நோக்கினாள்.

டிவி அதுவாக ஆன் ஆனது. அங்கே....

என்னவளுக்கு அவள் அத்தை குடிக்க ஏதோ கொடுக்கிறாள். அதை குடித்ததும் அவள் மயங்குகிறாள். மாமா அவள் அறைக்கு நுழைகிறார்... அவளை குண்டுகட்டாக தூக்குகிறார். சமயலறையில் கிடத்துகிறார்.... கேஸ் வெடுகிறது......

நான் நினைத்தது சரிதான்...,

பூவாய் சிரிப்பவள் சருகாய் கருகி போனாள்.....


தொடரும்

எழுதியவர் : நவின் (19-Jun-15, 7:03 am)
பார்வை : 2698

மேலே