panchapakesan - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : panchapakesan |
| இடம் | : chennai |
| பிறந்த தேதி | : 15-Jun-1983 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 05-Feb-2014 |
| பார்த்தவர்கள் | : 362 |
| புள்ளி | : 56 |
முண்டாசு கவிஞன், முத்தமிழ் அறிஞன்
பிறந்தான் எட்டயபுரத்திலே
முப்பத்தி இரண்டு மொழிகள் கற்று
முதிர்ந்தான் மொழியாற்றலிலே
படித்தான் நெல்லையிலே
பின் வசித்தான் சென்னையிலே
புசிக்க வழியின்றி, தவித்தான் வறுமையிலே
மனதில் உறுதி வேண்டுமென்று முழக்கமிட்டான்
மக்கள் மனதில் விடுதலைக்கு வித்திட்டான்
பெண் சுதந்திரம் போற்றினான்
பேரன்பு கொள்ள சொன்னான்
நெஞ்சில் உரமுண்டு, நேர்கொண்ட பார்வையுண்டு
நிமிர்ந்த நடையுண்டு, நேர்மையுண்டு
தளராத மனஉறுதியுண்டு
தமிழன் என்ற திமிர் உண்டு
தாடியுடன், முறுக்கு மீசையும் உண்டு
சிங்கத்தின் பிடரியை பிடித்தாட்டிய வீரமுண்டு
சிதம்பரனார், சிவா உடன் நட்பும் உண்டு
படைப்பாற்றல் திறன் உண்டு
பர
வான் வழியே போர் புரிய வந்த சாமி
வள்ளி, தெய்வயானை விட்டு நின்ற சாமி
தாரகாசுரனை வென்ற சாமி
தர்மம் தன்னை காத்த சாமி
கிழக்கு நோக்கி நின்ற சாமி
தெற்கு வாயில் கொண்ட சாமி
விக்ரம சோழன் வித்திட்ட சாமி
சிதம்பரம் அடிகளார் கண்டு கொண்ட சாமி
ஆயுதம் இன்றி நின்ற சாமி
ஜெப மாலையும், கமண்டலமும் கொண்ட சாமி
ஆறுமுகம் கொண்ட அந்த சாமி
திருப்போரூரில் வாழும் எங்கள் கந்த சாமி.
ஒரு சூரியனின் ஒளி
இரண்டு கண்களின் பார்வை
மூன்று கடல்களின் சங்கமம்
நான்கு மறைகளின் புனிதம்
ஐந்து பூதங்களின் ஆளுமை
ஆறு சுவைகளின் ஆனந்தம்
ஏழு அதிசயங்களின் அழகு
எட்டு திசைகளின் தூரம்
ஒன்பது ரத்தினங்கள் மதிப்பை விட
பத்து மாதம் நம்மை சுமக்கும் அன்னையே சிறந்தவள்.
நிலமும், நீரும், மலையுமாய் நீண்டு, அகண்டு விரிந்தாய்,
மதங்கள் பல கொண்டாய், மொழிகள் பல பேசினாய்,
பசியாற நெல்லும், நலம் வாழ பொன்னும் விளைவித்தாய்,
கலையும், கலாச்சாரமும் செழித்தோங்க, எட்டுத் திக்கும் எம் அன்னையின் புகழ் பரவியது.
சூழ்ச்சிக்காரர்களால், பல வருடங்கள் அடிமைப் பட்டாய்
உயிரும், குருதியும் கொடுத்து, வீர புதல்வர்களால் அடிமை விலங்கு அறுக்கப்பட்டது.
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினோம்.
உண்ண உணவு, உடுக்க உடை மட்டுமின்றி, உன் மடியில் படுத்து இளைப்பாற இடம் கொடுத்தாயே என் பாரதத் தாயே,
தெய்வ பக்தியும், தேச பக்தியும் எம் இரு கண்களாக பாவிப்போம்,
எங்கள் உயிர் மூச்சு இருக்கும் வ
முண்டாசு கவிஞன், முத்தமிழ் அறிஞன் பிறந்தான் எட்டயபுரத்திலே
முப்பத்தி இரண்டு மொழிகள் கற்று முதிர்ந்தான் மொழியாற்றலிலே
படித்தான் நெல்லையிலே, பின் வசித்தான் சென்னையிலே
புசிக்க வழியின்றி, தவித்தான் வறுமையிலே
மனதில் உறுதி வேண்டும் என முழக்கமிட்டான்
மக்கள் மனதில் விடுதலைக்கு வித்திட்டான்
மாதர் தம் துயர் தீர்க்க, பெண் சுதந்திரம் போற்றினான்
நெஞ்சில் உறமுண்டு
நேர் கொண்ட நடையுண்டு
தமிழன் என்ற திமிர் உண்டு
தளராத உறுதி உண்டு
தாடியுடன், முறுக்கு மீசையும் உண்டு
சிங்கத்தின் பிடறியை பிடித்தாட்டிய பெருமை உண்டு
சிதம்பரனார், சிவா உடன் நட்பு உண்டு
செங்கோலை வீழ்த்த, அவன் எழுதுகோலுக்கு சக்தி உண்டு
ஆனந்த யாழை மீட்டி, அழகு எதுவென்று காட்டி
அழகு தமிழில், ஆயிரம் பாடல்களை கடந்தாய்
அடுத்தடுத்த ஆண்டுகள் அரசின் அங்கீகாரம் பெற்று
அகவை ஐம்பதுக்குள் அரிய சாதனைகள் படைத்தாய்
முத்தமிழ் கற்று, முனைவர் பட்டம் பெற்று, வீர நடை போட்டு
நீ தொடங்கிய பயணம் பாதியில் தடைபட்டதே
மூப்படையும் முன், உன் மூச்சு நின்று விட்டதே
அய்யகோ, என்னே இத்தமிழுக்கு வந்த சோதனை
காலனே, உனக்கு கருணை இல்லையா?
செங்கோல் பிடித்த பல கறை படிந்த கைகள் இருக்கையில்
எழுத்தாணி பிடித்த கை எதற்கு?
கவிஞனுக்கு நீ கொடுக்கும் காலம் குறைவு தானா?
அன்று எங்கள் பாரதி, இன்று எங்கள் முத்துவா?
ஆனந்த யாழை மீட்டி, அழகு எதுவென்று காட்டி
அழகு தமிழில், ஆயிரம் பாடல்களை கடந்தாய்
அடுத்தடுத்த ஆண்டுகள் அரசின் அங்கீகாரம் பெற்று
அகவை ஐம்பதுக்குள் அரிய சாதனைகள் படைத்தாய்
முத்தமிழ் கற்று, முனைவர் பட்டம் பெற்று, வீர நடை போட்டு
நீ தொடங்கிய பயணம் பாதியில் தடைபட்டதே
மூப்படையும் முன், உன் மூச்சு நின்று விட்டதே
அய்யகோ, என்னே இத்தமிழுக்கு வந்த சோதனை
காலனே, உனக்கு கருணை இல்லையா?
செங்கோல் பிடித்த பல கறை படிந்த கைகள் இருக்கையில்
எழுத்தாணி பிடித்த கை எதற்கு?
கவிஞனுக்கு நீ கொடுக்கும் காலம் குறைவு தானா?
அன்று எங்கள் பாரதி, இன்று எங்கள் முத்துவா?
நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.
தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.
வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.
சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.
தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோ
உன் ஆக்சிஜன் பிரிந்ததால்,
உலக மக்களின் விழிகளில் அமில மழை....
உன் புத்தியீர்ப்பு விசையிடம்,
புவியீர்ப்பு விசையும் தோற்றுவிடும்.....
ஒரு ஏழையின் மூளை,
ஏவுகணையாகி விண்ணைத் தொட்டது.....
நீ அனுப்பிய அறிவியல் பறவைகளெல்லாம்,
அக்னிச் சிறகுகளை விரித்து,
வானில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றது....
ஆய்வுக் கூடங்களே உன் படுக்கையறை,
அறிவியலே உன் ஆசை மனைவி,
அவளை தலை முதல் கால் வரை,
ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி நீ....
உன் முதலிரவு மட்டுமல்ல,
முழு இரவும் இவளோடு தான்....
அறிவியலில் எத்தனையோ,
மூலக்கூறுகள் இருக்கலாம் - ஆனால்
அறிவியலின் மூலக்கூறு நீ....
கோவிலின் கருவறையை விட புன
ஸ்வரங்கள் எனும் விலங்கு பூட்டி, மெல்லிசை எனும் சங்கிலியால் கட்டி,
உள்ளம் எனும் சிறையில் அடைத்தாய்
கவிதை எனும் மலரோடு, இன்னிசை எனும் நூல் கோர்த்து
பாடல் எனும் மாலையாக்கினாய்
இசை மழையில் நனைந்திருந்தோம்
இன்பத்தில் மிதந்திருந்தோம்
இரங்கல் செய்தி கேட்டு இடிந்து போனோம்
கலைவாணி அழைத்தாளோ?
காலனுக்கு பொறுமை இல்லையோ?
கண் அயர்ந்து தூங்கினாயோ?
காற்றோடு கலந்தாயோ? என்று குழம்பி போனோம்
மெல்லிசை மன்னரே…………
உடலோடு ஒட்டி இருக்கும் குறுதி போல், உன் இசையோடு ஒட்டி இருக்கும் எங்கள் நெஞ்சம்
ஒங்குக நின் புகழ் இவ்வையமெல்லாம்….
-சீ.ப
கூட்டல், கழித்தல், பெருக்கல்…..
நற்சிந்தனைகள் கூட்டி, நேர்வழி நடந்து,
தீய சிந்தனைகள் கழித்து, தீயவைகளை ஒதுக்கி,
நற்பண்புகள் பெருக்கி, நல்ல செயல்கள் செய்தால், நீ
ஒழுக்கமுடன் வாழ்ந்து, உயர்வு பெறுவாய்
விவசாயிகளின் தற்கொலை
ஏர் பிடித்தாய், நீர் இரைத்தாய். நிலத்தை
சீர் செய்தாய், செம்மையாக்கினாய்
பாடுபட்டாய், பயிர் செய்தாய். சேற்றில்,
கால் வைத்தாய், களை பறித்தாய்
சுற்றாரும், மற்றோரும் பசியாற,
சுடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும்,
பணி செய்தாய், பயிரை காத்தாய்.
கடன் பட்டாய், கவலையின்றி,
கடமையை செய்தாய்.
கதிர் அறுப்பாய், கதிரவனுக்கு நன்றி சொல்லி,
கட்டு, கட்டாக கடைவீதிக்கு சுமந்து செல்வாய்
கை நிறைய காசை நாடி, வயிறு மட்டுமே நிறைப்பாய் வாடி
நீ வளர்த்த நெல்லும், எள்ளும் உன் சிதைக்கு மட்டுமே மிஞ்சும்